Friday, March 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Blog

சட்டம் அறிவோம்: குழந்தையை தத்து எடுப்பது எப்படி?

சட்டம் அறிவோம்: குழந்தையை தத்து எடுப்பது எப்படி?

தகவல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த ஓய்வு பெற்ற பெண் செவிலியர் உதவியாளர் ஒருவர், சட்ட விரோதமாக குழந்தைகளைக் கடத்தி விற்பனை செய்து வந்த சம்பவம் அண்மையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உலகம் முழுவதுமே, ஆண், பெண் இருபாலரிடத்திலும் மலட்டுத்தன்மை பிரச்னை அதிகரித்து வருவதுதான் குழந்தையின்மைக்கு முக்கிய காரணம். இதனால், சட்டப்படி குழந்தையைத் தத்தெடுத்துக் கொள்ள மத்திய, மாநில அரசுகளே அதற்கான வழிமுறைகளைச் செய்திருந்தாலும், அதற்கான நடைமுறைகளும், விதிமுறைகளும் அதிகம். அதனால்தான் குழந்தையில்லா தம்பதியினரில் பலர் தத்தெடுக்க தயாராக இருந்தாலும், அரசின் கெடுபிடிகள் காரணமாக சட்ட ரீதியான தத்தெடுத்தலை புறக்கணித்து விட்டு, சட்ட விரோதமாக குழந்தையை விலை கொடுத்து வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். எனினும், புதிய அகராதி வாசகர்களுக்காக, சட்டப்பூர்வமாக ஒரு குழந்தையைத் தத்தெடுப்பத...
பிளஸ்-2க்குப் பிறகு என்ன படிக்கலாம்? சிஎம்ஏ படிப்புக்கு வளமான எதிர்காலம்! விழிப்புணர்வு தொடர்#2

பிளஸ்-2க்குப் பிறகு என்ன படிக்கலாம்? சிஎம்ஏ படிப்புக்கு வளமான எதிர்காலம்! விழிப்புணர்வு தொடர்#2

கல்வி, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பிளஸ்-2க்கு பிறகு, பட்டப்படிப்பில் எதை தேர்வு செய்வது? என்ற குழப்பத்தில் உள்ள மாணவர்களுக்கான குறுந்தொடர் இது. கோர் ஏரியா என்று சொல்லக்கூடிய முதன்மைப் படிப்புகளைத் தவிர்த்த பிற வாய்ப்புள்ள பாடப்பிரிவுகள் குறித்த இந்த தொடரில் பார்க்கலாம். சிஎம்ஏ என்பதும் தொழில் படிப்புதானா?   பட்டய கணக்காளர் படிப்பு எந்தளவுக்கு மிகவும் தனித்துவமான தொழில்படிப்போ அதற்கு சற்றும் குறைவில்லாதது சிஎம்ஏ எனப்படும் 'செலவு மற்றும் மேலாண்மைக் கணக்காயர்' படிப்பு ஆகும். இதை ஆங்கிலத்தில் Cost and Management Accountant (CMA) எனலாம். இந்தியாவில் மிக உயரிய பாடப்பிரிவுகளுள் சிஎம்ஏ தொழிற்படிப்பும் ஒன்றாகும்.   இன்ஸ்டிடியூட் ஆப் காஸ்ட் அண்டு மேனேஜ்மென்ட் அக்கவுன்டன்ட்ஸ் ஆப் இந்தியா என்பது ஒரு தன்னாட்சி பெற்ற, சட்ட ரீதியான நிறுவனம். சுருக்கமாக ஐசிஎம்ஏஐ. இந்நிறுவனம் 1959ம் ஆண்டு மே மாதம் 28ம்...
ஒரு பெண் குழந்தையின் விலை 2 லட்சம்! தரம் பிரித்து பச்சிளம் சிசுக்கள் விற்பனை!!

ஒரு பெண் குழந்தையின் விலை 2 லட்சம்! தரம் பிரித்து பச்சிளம் சிசுக்கள் விற்பனை!!

சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
ஒரு பெண் குழந்தையின் விலை இரண்டு லட்சம் ரூபாய் என்றும், குண்டான, அழகான, அமுல் பேபி மாதிரியான ஆண் குழந்தை நாலேகால் லட்சம் ரூபாய் என்றும் குழந்தைகளை தரம் பிரித்து விற்பனை செய்து வரும் ராசிபுரம் செவிலியர் உதவியாளர் கைது செய்யப்பட்டார்.   மாறி வரும் உணவுப்பழக்கவழக்கம், மேற்கத்திய கலாச்சாரம் போன்றவற்றால் இன்றைக்கு ஆண், பெண்களிடையே மலட்டுத்தன்மை அதிகரித்து வருகிறது. கிட்டத்தட்ட இருபாலருக்குமே 50 சதவீதம் வரை மலட்டுத்தன்மை குறைபாடு இருக்கிறது என்கிறது மருத்துவத்துறை. இந்நிலையில் செயற்கை கருவூட்டல் மூலம் குழந்தைகள் பெற்றுக்கொள்ள வாய்ப்புகள் இருந்தாலும், அதற்காகும் அதிகபட்சமான செலவுகள் காரணமாக குறுக்கு வழியில் பலர் குழந்தைகளை விலைக்கு வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 'காரா' (CARA - Central Adoption Resource Authority) மூலம் சட்டப்படி குழந்தைகளை தத்து எடுக்கலாம். எனினும், ...
போலி ஜனநாயகத்திற்கா உங்கள் வாக்கு? #1

போலி ஜனநாயகத்திற்கா உங்கள் வாக்கு? #1

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்பதைக் காட்டிலும் அதில் மெச்சத்தக்கது வேறேதும் இல்லை என்பது என்னளவிலான புரிதல். ஏப்ரல் 18, 2019ல் நடக்க இருக்கும் மிகப்பெரும் ஜனநாயகத் திருவிழாவில் பங்கேற்க, தமிழக வாக்காளர்கள் இந்நேரம் மனதளவில் தயார் படுத்திக் கொண்டிருக்கக்கூடும். வாக்குச்சாவடிக்குள் நீங்கள் செல்வதற்குள்ளாவது நான் உங்களுடன் பேசி விட வேண்டும் என்ற உந்துதலாலேயே இப்போது பேச விழைகிறேன். இந்தியத் தேர்தல் அமைப்பு முறை, இந்த தேசத்தின் குடிமக்களை வெறும் வாக்காளன் என்ற அளவில் மட்டுமே சுருங்கிப் போகச் செய்துவிட்டதுதான், இந்திய ஒன்றியத்தில் நாம் கண்ட மக்களாட்சி தத்துவம். சொல்லப்போனால், இப்போதுள்ள தேர்தல் நடைமுறைகள், அரசியல் களத்தில் இருந்து சாமானிய மக்களை முற்றாக ஒதுக்கித் தள்ளிவிட்டது எனலாம். உடனே நீங்கள், காளியம்மாக்களும், பொன்னுத்தாய்களும்கூட இந்த தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு பெற்...
திண்ணை: சொல்வதெல்லாம் பொய்!

திண்ணை: சொல்வதெல்லாம் பொய்!

அரசியல், தமிழ்நாடு, திண்ணை, முக்கிய செய்திகள்
''தமிழ்நாட்டுல மக்களவை தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் களம் சூடு ஏறிட்டே போறது. அதைவிட இப்பவே கத்திரி வெயிலாட்டம் கொளுத்துது. வெளில தல காட்ட முடியலப்பா...'' என்றபடியே, நக்கல் நல்லசாமியின் வீட்டுத் திண்ணையில் வந்து அமர்ந்தார் பேனாக்காரர்.   வெயிலுக்கு இதமாக மய்ய அரைத்த இஞ்சி, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கின வெள்ளரி துண்டுகள் கலந்த மோரை கொண்டு வந்து கொடுத்தார் நக்கலார். ''தேர்தல் சம்பந்தமா லேட்டஸ்ட் சேதி என்ன இருக்கு? கருத்துக்கணிப்பு கிணிப்பு ஏதாச்சும் இருக்கா?'' என்றார்.   ''இப்பலாம் எங்க உருப்படியான கருத்துக்கணிப்பு இருக்கு... எல்லாம் திணிப்புதான். அவங்கவங்க அரிப்புக்கு தகுந்தமாதிரி சொறிஞ்சு விடறதுக்கும் இன்றைக்கு நிறைய ஊடகங்கள், தரகர்கள் வந்துட்டாங்க. அப்படி யாருக்கிட்டதான் கருத்துக்கணிப்பு நடத்துவாங்களோ... கருத்து சொன்ன ஒரு பயலும் பேஸ்புக்லயோ, டிவிட்டர்லயோ, வாட்ஸ்அப்பு...
எட்டுவழிச்சாலை ரத்து: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு; விவசாயிகள் வெற்றி கொண்டாட்டம்!

எட்டுவழிச்சாலை ரத்து: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு; விவசாயிகள் வெற்றி கொண்டாட்டம்!

அரசியல், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சென்னை, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்
சேலம் - சென்னை எட்டு வழிச்சாலைத் திட்டம் குறித்த அராசணையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் திங்கள் கிழமையன்று (ஏப்ரல் 8, 2019) பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. இதையடுத்து சேலம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட விவசாயிகளும் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியைக் கொண்டாடினர். சேலம் முதல் சென்னை வரையில் பசுமைவழி விரைவுச்சாலை என்ற பெயரில் எட்டுவழிச்சாலைத் திட்டத்தை நிறைவேற்ற நடுவண் பாஜக மற்றும் தமிழக அதிமுக அரசுகள் மும்முரமாக செயல்பட்டு வந்தன. பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்தால், சேலம் - சென்னை இடையிலான பயண நேரம் 70 கி.மீ. தூரம் குறையும் வகையில் மொத்தம் 277.3 கி.மீ. தூரத்திற்கு பாதை அமைக்கப்படும் என்று வரைவுத்திட்டத்தில் சொல்லப்பட்டது.   இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் 2343 ஹெக்டேர் நிலம் தேவை என்பதும்...
உறியடி 2 – திரை விமர்சனம்! ‘சாமானியனின் அரசியல் பங்கெடுப்பை பேசுகிறது’

உறியடி 2 – திரை விமர்சனம்! ‘சாமானியனின் அரசியல் பங்கெடுப்பை பேசுகிறது’

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனத்தின் லாப வெறியால் மலைவாழ் மக்கள் சூறையாடப்படுவதையும், பெருமுதலாளியிடம் லாபம் அடையும் ஆளுங்கட்சி எம்பி, சாதிக்கட்சித் தலைவர் உள்ளிட்ட அரசியல்வாதிகளையும் நையப்புடைக்கும் படமாக ஏப்ரல் 5ல் வெளிவந்திருக்கிறது, உறியடி 2. மக்களவை தேர்தல் நெருங்கும் நேரத்தில் இப்படி ஒரு படம் தமிழில் வெளிவந்திருப்பதை நோக்கும்போது, கருத்துச்சுதந்திரம் இன்னும் இந்த தேசத்தில் உயிர்ப்புடன் இருக்கிறது என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. அல்லது சமகால அரசியல் பிரச்னைகளையும், அரசியல்வாதிகளையும் துகிலுறியும் காட்சிகள் இருப்பதை அறியாமல் படத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டு விட்டதோ என்றும் கருத வேண்டியதிருக்கிறது.   நடிகர்கள்:   விஜய்குமார் விஸ்மயா சுதாகர் மற்றும் பலர்   ஒளிப்பதிவு: பிரவீண்குமார் இசை: கோவிந்த் வசந்தா எடிட்டிங்: லினு.எம் தயாரிப்ப...
சேலம்: செம்மலையால் தாக்கப்பட்ட அதிமுக நிர்வாகி திமுகவில் இணைந்தார்; தாய் கட்சியில் தொண்டர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று புகார்!!

சேலம்: செம்மலையால் தாக்கப்பட்ட அதிமுக நிர்வாகி திமுகவில் இணைந்தார்; தாய் கட்சியில் தொண்டர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று புகார்!!

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
அதிமுக எம்எல்ஏ செம்மலையால் பலர் முன்னிலையில் அடித்து அவமானப்படுத்தப்பட்ட அக்கட்சித் தொண்டர், தனது ஆதரவாளர்களுடன் இன்று (ஏப்ரல் 4, 2019) திமுகவில் இணைந்தார்.   தர்மபுரி மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார். இதையடுத்து கடந்த மார்ச் 31ம் தேதி, சேலம் மாவட்டம் சிந்தாமணியூர் பகுதியில் பரப்புரைக்காக வந்திருந்தார். அப்போது பாமக தலைவர் ஜி.கே.மணி, அதிமுக எம்எல்ஏ செம்மலை மற்றும் இரு கட்சி நிர்வாகிகளும் உடன் இருந்தனர். அன்புமணி ராமதாஸ் பரப்புரையை தொடங்கியபோது, கூட்டத்தில் பிளந்து கொண்டு வந்த ஒருவர், 'நீங்கள்தான் போன முறை எம்.பி.யாக ஜெயிச்சீங்க அய்யா. ஆனால் ஐந்து ஆண்டுகளாக தொகுதி பக்கமே வரவில்லை. எட்டு வழிச்சாலையை எதிர்த்தீங்களே அய்யா.... இப்போது அதிமுக உடன் கூட்டணி வெச்சிருக்கீங்களே அய்யா... அந்த திட்டத்தை இனிமே ஆதரிப்பீங்களா ...
சூப்பர் டீலக்ஸ் – விமர்சனம்! ‘கஷ்டத்தை கொடுத்துதான் கடவுளை நினைக்க வைக்க வேண்டுமா?’

சூப்பர் டீலக்ஸ் – விமர்சனம்! ‘கஷ்டத்தை கொடுத்துதான் கடவுளை நினைக்க வைக்க வேண்டுமா?’

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
'ஆரண்ய காண்டம்' படத்தின் மூலம் விமர்சகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்த இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவின் இயக்கத்தில், மார்ச் 29, 2019ம் தேதி வெளியாகி இருக்கிறது 'சூப்பர் டீலக்ஸ்'. மணிரத்னத்தின் 'அலைபாயுதே' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு 'நான் லீனியர்' படங்கள் அடுத்தடுத்து பரிச்சயமாயின. அதன்பின், வானம், நேரம், மாநகரம் ஆகிய படங்கள் வெவ்வேறு மூன்று அல்லது நான்கு கதைகள் தனித்தனியாக பயணித்து, இறுதியில் ஒரே புள்ளியில் இணைவது போன்ற படங்கள் அறிமுகமாகின. இரண்டாவது வகைமையிலானதுதான், சூப்பர் டீலக்ஸ். ஐந்து கதைகள் என்பதைக் காட்டிலும் ஐந்து நிகழ்வுகள் தனித்தனியாக நிகழ்கின்றன. ஆனால், அந்த நிகழ்வுகள் ஏதோ ஒரு வகையில் ஒன்றோடு ஒன்று தொடர்பில் இருக்கின்றன. அவை தற்செயலானவை. நடிகர்கள்: விஜய் சேதுபதி சமந்தா பகத் பாசில் காயத்ரி மிஷ்கின் ரம்யா கிருஷ்ணன் பக்ஸ் என்கிற பகவதி பெருமாள் சிறுவன் அஷ்வந்த் மற்...
மக்களவை தேர்தல்: சேலம் தொகுதியில் 22 பேர் போட்டி! இறுதி பட்டியல் வெளியானது!!

மக்களவை தேர்தல்: சேலம் தொகுதியில் 22 பேர் போட்டி! இறுதி பட்டியல் வெளியானது!!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
மக்களவை தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியிடப்பட்டது. இதில், சேலம் தொகுதியில் 22 பேர் போட்டியிடுவதாக மாவட்ட தேர்தல் அதிகாரி ரோகிணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு மக்களவை தொகுதி ஆகியவற்றுக்கு வரும் ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இத்தேர்தலையொட்டி மார்ச் 19ம் தேதி முதல் 26ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடந்தது. 27ம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடந்தது. சேலம் மக்களவை தொகுதியில் திமுக, அதிமுக, அமமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் என மொத்தம் 37 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டபோது, முழுமையாக பூர்த்தி செய்யப்படாதது, கையெழுத்து இல்லாதது, சொத்து விவரங்கள் தாக்கல் செய்யப்...