Sunday, October 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Author: புதிய அகராதி

சேலத்தில் நடுத்தெருவில் உருவான திடீர் கழிவு நீரோடை! மாநகராட்சி மனசு வைக்குமா?

சேலத்தில் நடுத்தெருவில் உருவான திடீர் கழிவு நீரோடை! மாநகராட்சி மனசு வைக்குமா?

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலத்தில், பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழியின் வழியாக கழிவு நீர் வெளியேறி, நடுத்தெருவில் ஓடையாக பாய்ந்தோடுவதால், சாலையும் சிதிலமடைந்துள்ளதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. சேலம் சின்னத்திருப்பதி பாரதி நகர், உடையார் தெரு, மாரியம்மன் கோயில் எதிரில் இரண்டு சாலைகள் சந்திக்கும் இடத்தில், பாதாள சாக்கடைத் திட்டத்தின் கீழ் குழி தோண்டப்பட்டு உள்ளது. அதன்மீது சிமெண்ட் மூடி போட்டு மூடப்பட்டு உள்ளது. மாநகராட்சியின் 8 மற்றும் 7 ஆகிய இரு கோட்டங்களுக்கும் பொதுவாக உள்ள இந்த சாலை வழியாகத்தான் அஸ்தம்பட்டி - ஏற்காடு முதன்மைச் சாலைக்கு வந்தடைய வேண்டும். அதனால் எப்போதும் இந்த சாலையில் வாகன போக்குவரத்தும் அதிகம்.   கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, பாதாள சாக்கடைக் குழி மீது போட்டப்பட்டிருந்த சிமெண்ட் மூடி திடீரென்று உடைந்தது. அன்று முதல், அந்தக் குழி வழியாக கழிவு நீர் பெருக்கெடுத்த...
சுர்ஜித் மீட்பு பணிகளும் சீனா குறித்த ஒப்பீடும்!

சுர்ஜித் மீட்பு பணிகளும் சீனா குறித்த ஒப்பீடும்!

தமிழ்நாடு, திருச்சி, முக்கிய செய்திகள்
திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியில் பராமரிக்கப்படாத ஆழ்துளைக் கிணற்றில் இரண்டு வயதே ஆன சிறுவன் சுர்ஜித், தவறி விழுந்துவிட்டான். 'சுர்ஜித் மீண்டு வா!' என்பதே ஒட்டுமொத்த தமிழக மக்களின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஒருபுறம் சுர்ஜித்தை மீட்க அல்லும் பகலும் ஓயாது போராடி வரும் மீட்புப்படை; இன்னொருபுறம் தீபாவளி பண்டிகை... 425 கோடிக்கு மது விற்பனை... கைதி, பிகில் திரைப்படங்கள், நடிகர் விஜயின் கட்அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம்... என தமிழகம் வேறு வகையான பொழுதுபோக்கு இத்யாதிகளையும் கைவிடவில்லை. பஞ்ச பூதங்களையும் அடக்கியதுதானே இந்த மனித உடல்? அதனால் மாறுபட்ட குணங்களையும் அப்படியே ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். இப்போது நாம் சொல்ல வருவது அதைப்பற்றி மட்டும் அல்ல. ஓரிரு நாள்களாக ஒரு காணொலி காட்சி, வாட்ஸ்அப், ட்விட்டர், ஃபேஸ்புக் தளங்களில் பரவிக் கொண்டே இருக்கிறது. அ...
கைகொடுத்த பருவ மழை! சேலத்தில் நெல் நாற்று நடவு மும்முரம்!

கைகொடுத்த பருவ மழை! சேலத்தில் நெல் நாற்று நடவு மும்முரம்!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விவசாயம்
தென்மேற்கு, வடகிழக்குப் பருவமழை போதிய அளவில் பெய்ததால், சேலம் மாவட்டத்தில் பரவலாக நெல் நாற்று நடவும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.   பூகோள ரீதியாகவே, தமிழகம் மழை மறைவு பிரதேசமாக உள்ளதால், பருவ மழைக்காலங்களில் கூட சராசரியைவிட குறைவாகவே மழைப் பொழிவு இருக்கிறது. புயல், வெப்பச்சலனம் உள்ளிட்ட காரணங்களால் மழை கிடைத்தால்தான் உண்டு என்கிற நிலைதான் கடந்த சில ஆண்டுகளாக நிலவுகிறது. இந்நிலையில், நடப்பு ஆண்டில் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவமழைக்காலமும், அதன்பிறகான வடகிழக்குப் பருவமழைக்காலமும் விவசாயிகளின் நம்பிக்கையை பொய்யாக்காமல் ஓரளவுக்கு கைகொடுத்துள்ளது. குறிப்பாக சேலம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் இயல்புக்கு அதிகமாகவே மழைப்பொழிவு இருந்துள்ளது. இதனால் நீர்நிலைகள் நிரம்பியதுடன், விவசாயக் கிணறுகளிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதையடுத்து, தமிழர் த...
சுவைத்தாலே பரவசம்… ஆவினில் ஸ்பெஷல் கேரட் மைசூர்பா அறிமுகம்!

சுவைத்தாலே பரவசம்… ஆவினில் ஸ்பெஷல் கேரட் மைசூர்பா அறிமுகம்!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தீபாவளி பண்டிகையையொட்டி, சேலம் ஆவின் நிறுவனம் புதிய முயற்சியாக ஸ்பெஷல் கேரட் மைசூர்பாவை அறிமுகம் செய்திருக்கிறது. தித்திக்கும் இதன் சுவை, மனிதர்களின் சுவை உணர்வை மேலும் பரவசமாக்குகிறது. தமிழ்நாட்டில் 17 இடங்களில் ஆவின் நிறுவனங்கள் செயல்பட்டு வந்தாலும், சேலத்தை அடுத்த தளவாய்ப்பட்டியில் இயங்கி வரும் ஆவினுக்கு எப்போதும் தனிச்சிறப்பு உண்டு. தினமும் 5 லட்சம் லிட்டருக்கும் மேல் பால் கொள்முதல் செய்கிறது. நேரடி பால் விற்பனை மட்டுமின்றி நெய், வெண்ணெய், டெட்ரா பால், நறுமணப்பால், ஐஸ்க்ரீம் உள்ளிட்ட மதிப்புக்கூட்டப்பட்ட பால் பொருள்கள் விற்பனையும், கணிசமான சந்தைப் பங்களிப்பையும் கொண்டிருக்கிறது. தீபாவளி பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் இனிப்பு வகைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்தாண்டு புதிய முயற்சியாக சேலம் ஆவின் நிறுவனம், ஸ்பெஷல் கேரட் மைசூர்பா என்ற இனிப்பு ...
அங்கன்வாடி குழந்தைகளுக்கு பூச்சி சாம்பார்; வண்டு பொரியல்! அலட்சியம் யார் பக்கம்?

அங்கன்வாடி குழந்தைகளுக்கு பூச்சி சாம்பார்; வண்டு பொரியல்! அலட்சியம் யார் பக்கம்?

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலத்தில் அங்கன்வாடி மையத்தில் பூச்சி, வண்டுகளால் செல்லரித்துப்போன தானியங்களால் குழந்தைகளுக்கு உணவு சமைத்துப்போடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.   சேலம் மாவட்டத்தில் மொத்தம் 2696 அங்கன்வாடி மையங்கள் இயங்கி வருகின்றன. இரண்டு முதல் மூன்று வயது வரையிலான 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு திங்கள், புதன், வியாழன் ஆகிய கிழமைகளில் வழக்கமான கலவை சாதத்துடன், முட்டையும் வழங்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமைகளில் உணவும், மூக்குக்கடலை சுண்டலும், வெள்ளிக்கிழமைகளில் பச்சைப்பயறு சுண்டலும் வழங்கப்படுகிறது. இந்த மையங்களில் தரமான உணவு வழங்கப்படுவதில்லை என நம் சோர்ஸ்கள் தரப்பில் சொல்லப்பட, ஒரு பானை சோற்றுக்கு பதம் கணக்காக, சேலம் குமாரசாமிப்பட்டியில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்திற்குச் சென்றோம். 15 அடி அகலம், 25 அடி நீளம் கொண்ட ஒரே அறை. மொத்தம் 15 குழந்தைகள...
சேலம் மாநகராட்சி ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட 5 கோடி ரூபாய் பி.எப். தொகை எங்கே?

சேலம் மாநகராட்சி ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட 5 கோடி ரூபாய் பி.எப். தொகை எங்கே?

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மாநகராட்சி ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து வருங்கால வைப்பு நிதி (பி.எப்.) திட்டத்தின் கீழ் பிடித்தம் செய்யப்பட்ட 5 கோடி ரூபாய், இதுவரை பி.எப். கணக்கில் செலுத்தப்படாமல் உள்ளதால், பணிக்காலத்தில் இறந்த மற்றும் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு உரிய காலத்தில் பணப்பலன்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.   சேலம் மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளர்கள் முதல் ஆணையர் / தனி அலுவலர் வரை ஆறாயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். 20 அல்லது அதற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் எந்த ஒரு தொழிலகமும் தொழிலாளர் வருங்கால வைப்பது நிதி கணக்கு எனப்படும் இபிஎப் கணக்கிற்குள் அடங்கும். இபிஎப் கணக்கின்படி, மாதம் 15 ஆயிரத்திற்கும் கீழ் ஊதியம் பெறும் ஊழியர்கள் சம்பளத்தில் இருந்து அவர்களின் பங்களிப்பாக மாதம் 12 சதவீத தொகை பிடித்தம் செய்யப்படும். அதற்கு நிகராக வேலை அளிப்பவர் அ...
சாதிய வர்க்கவாதிகளின் எலும்பை முறிக்கும் அசுரன்! சினிமா விமர்சனம்

சாதிய வர்க்கவாதிகளின் எலும்பை முறிக்கும் அசுரன்! சினிமா விமர்சனம்

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
உலகம் முழுமைக்கும் வர்க்க முரண் என்பது, இருப்பவனுக்கும் இல்லாதவனுக்கும் இடையிலான வேறுபாடாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், இந்திய பெருநிலத்தைப் பொருத்தவரை வர்க்கப்பிரிவினை என்பதில் சாதிய பாகுபாடும் உள்ளடங்கும். அதிலும் தமிழ்நாடு போன்ற ஆதிகுடிகளின் மண்ணில், வர்க்கப்பிரிவினை என்பது கண்டிப்பாக சாதியத்தையும் இணைத்தே வந்திருக்கின்றன. இப்போதும் இருக்கின்றன. வல்லான் வகுத்ததே நீதி என்ற சூழலில், வலுத்தவர்களிடம் இருந்து எளியவர்கள் எப்படி எல்லாம் தப்பிப்பிழைக்க போராட வேண்டியதிருக்கிறது என்பதை குருதி தெறிக்க பேசி இருக்கிறது, அசுரன். இயக்குநர் வெற்றிமாறன், தனுஷ் கூட்டணியில் அக்.4ல் வெளியாகி இருக்கும் அசுரன் திரைப்படம், ஒடுக்கப்பட்ட மக்கள் இருத்தலுக்காக கைகொள்ளும் போராட்டங்களை விவரிக்கிறது. படத்தின் மூலக்கதை, பூமணி எழுதிய 'வெக்கை' நாவல்தான் என்பதாலோ என்னவோ படம் முடியும் வரை பார்வையாளர்களின் உடலுக்குள்ள...
சேலம் மாநகராட்சி: பாதாள சாக்கடை திட்டமா? பகல் கொள்ளை திட்டமா? விரயமாகிறதா 216 கோடி?

சேலம் மாநகராட்சி: பாதாள சாக்கடை திட்டமா? பகல் கொள்ளை திட்டமா? விரயமாகிறதா 216 கோடி?

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலத்தில், சரிவர திட்டமிடப்படாமல் அமைக்கப்பட்டு வரும் பாதாள சாக்கடைத் திட்டத்தால் இதற்காக ஒதுக்கப்பட்ட மக்களின் வரிப்பணம் 216 கோடி ரூபாய் விழலுக்கு இரைத்த நீராகி விட்டதோ என்ற அய்யம் மக்களிடம் எழுந்துள்ளது. நகராட்சியாக இருந்த சேலம், கடந்த 1994ம் ஆண்டு மாநகராட்சியாக நிலை உயர்த்தப்பட்டது. சரிவர திட்டமிடப்படாத ஊரமைப்பு என்பதால், இன்றும் திறந்தவெளி சாக்கடை கால்வாய்களே நீக்கமற நிறைந்துள்ளன. இந்த நிலையில்தான், கடந்த 2006 - 2011 திமுக ஆட்சியின்போது, சேலம் மாநகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டத்தை அமல்படுத்தும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.   இதையடுத்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை 23.2.2006ம் தேதி, இத்திட்டத்திற்கான அரசாணை (எண்: 63 (டி) வெளியிட்டது. முதல்கட்டமாக 149.39 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டது. இந்த நிதியில் அரசு மானியம் 10 கோடி ரூபாய்; சே...
இந்த மாசமாவது சம்பளம் கிடைக்குமா? சேலம் மாநகராட்சி ஊழியர்கள் பரிதவிப்பு!

இந்த மாசமாவது சம்பளம் கிடைக்குமா? சேலம் மாநகராட்சி ஊழியர்கள் பரிதவிப்பு!

சேலம், முக்கிய செய்திகள்
ஆயுதபூஜை, தீபாவளி என அடுத்தடுத்து முக்கிய விழாக்கள் வரிசைகட்டி நிற்கும் வேளையில், ஆகஸ்ட், செப்டம்பர் மாதம் முடிந்த பின்னரும்கூட இரு மாதங்களுக்குரிய ஊதியம் வழங்கப்படவில்லை என்கிறார்கள், சேலம் மாநகராட்சி ஊழியர்கள்.   சேலம் மாநகராட்சியில் நிர்வாகப்பிரிவு ஊழியர்கள், சுகாதாரம், துப்புரவு ஊழியர்கள் என ஆறாயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி ஆகிய நான்கு மண்டல அலுவலகங்கள் மூலம் நிர்வாகம் மேற்கொள்ளப்படுகிறது. மைய அலுவலகம் மூலம் நான்கு மண்டலங்களின் பணிகளும் ஒருங்கிணைக்கப்படுகின்றன. அலுவலக பராமரிப்பு முதல் ஊழியர்களின் சம்பளம் வரையிலான செலவினங்களுக்கு சேலம் மாநகராட்சி நிர்வாகம், வரி வருவாயையே பெரிதும் நம்பி இருக்கிறது. அதாவது, மாநகரில் உள்ள ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள், வணிக கட்டடங்களுக்கு விதிக்கப்படும்...
சபாஷ்  மாநகராட்சி! சுட்டிக்காட்டினோம்…செய்து முடித்தார்கள்…!!

சபாஷ் மாநகராட்சி! சுட்டிக்காட்டினோம்…செய்து முடித்தார்கள்…!!

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் நகரம் 1866ல் உருவாக்கப்பட்டது. 153 ஆண்டுகள் பழமையான இந்த நகரம், 1.6.1994ல் மாநகராட்சி ஆக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது சீர்மிகு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) என்ற சிறப்பையும் பெற்றிருக்கிறது. சீர்மிகு நகரமாக்கும் பணிகள் நடந்து வருகிறது.   ஒரு காலத்தில், சேரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த நகரம், அதன்பிறகு மைசூர் சாம்ராஜ்யத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. போரில் திப்பு சுல்தான் தோல்வி அடைந்த பிறகு, இந்த நகரம் கிழக்கிந்திய கம்பெனி வசம் கொண்டு வரப்பட்டது. அதனால், சேலம் மாநகரில் முக்கிய தெருக்கள், அங்காடிகள், வணிக பகுதிகள் பலவும் இயல்பாகவே ஆங்கிலேயர்களின் பெயர்களை வரித்துக்கொண்டன.   உதாரணத்திற்குச் சில...   ஹேரி அகஸ்டஸ் பிரட்ஸ் (HARRY AUGUSTUS BRETTS) என்ற ஆங்கிலேயர், 1853 முதல் 1862 வரை சேலம் ஜில்லாவின் ஆட்சியராக இருந்தார். அவருடைய நினைவாக சேல...