Friday, May 3மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: MK Stalin

கருணாநிதியை சந்தித்தபோது மோடி சொன்னது என்ன?

கருணாநிதியை சந்தித்தபோது மோடி சொன்னது என்ன?

அரசியல், சென்னை, முக்கிய செய்திகள்
பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று (நவம்பர் 6, 2017) காலை சென்னை வந்தார். முன்னதாக அவர் தினத்தந்தி நாளிதழின் பவள விழாவில் கலந்து கொண்டார். அதையடுத்து அவர் திமுக தலைவர் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று நேரில் சந்தித்தார். திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தார். கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்த நரேந்திர மோடி, ஓய்வு எடுப்பதற்காக டெல்லியில் உள்ள தனது இல்லத்திற்கு வருமாறு கருணாநிதிக்கு அழைப்பு விடுத்தார். மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது கருணாநிதிக்கு தொண்டையில் டிரக்கியாஸ்டமி உபகரணம் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அந்த உபகரணம் அகற்றப்பட்டு, தொண்டையில் தையல் போடப்பட்டு உள்ளது. இன்னும் அந்த தையல் பிரிக்கப்படவில்லை. இதனால் அவரால் உரக்கப் பேச முடியவில்லை. பணி மூப்
அதிமுக அரசுக்கு ஆதரவா?; ‘பொடி’ வைக்கும் புதிய ஆளுநர்

அதிமுக அரசுக்கு ஆதரவா?; ‘பொடி’ வைக்கும் புதிய ஆளுநர்

அரசியல், முக்கிய செய்திகள்
கடந்த ஓராண்டுக்கும் மேலாக தமிழக ஆளுநர் பொறுப்பில் இருந்த வித்யாசாகர் ராவ் நேற்று விடைபெற்றார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அவரை முறைப்படி வழியனுப்பி வைத்தனர். பதவி ஏற்பு: அதையடுத்து, தமிழக புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட பன்வாரிலால் புரோஹித், ராஜ் பவனில் இன்று (அக்டோபர் 6) முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் பன்வாரிலால் புரோஹித்தின் மனைவியும் கலந்து கொண்டார். பதவியேற்பு முடிந்ததும் முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். மு.க.ஸ்டாலின் அதிருப்தி: முதல்வர், துணை முதல்வர் ஆகியோரைத் தொடர்ந்து மரபுப்படி எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின்தான் ஆளுநருக்கு வாழ்த்துச் சொல்ல அழைக்கப்பட வேண்ட
தமிழக ஆளுநர் பொறுப்பில் இருந்து வித்யாசாகர் ராவ் விடுவிக்கப்பட்டது ஏன்?; பரபரப்பு தகவல்கள்

தமிழக ஆளுநர் பொறுப்பில் இருந்து வித்யாசாகர் ராவ் விடுவிக்கப்பட்டது ஏன்?; பரபரப்பு தகவல்கள்

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழகத்தில் கிட்டத்தட்ட ஓராண்டாக பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் விடுவிக்கப்பட்டதன் பின்னணி குறித்து பரபரப்பு தகவல்கள் உலா வருகின்றன. தமிழக ஆளுநராக இருந்த ரோசய்யா கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற்றார். அதையடுத்து, புதிய ஆளுநர் நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மஹாராஷ்டிரா மாநில ஆளுநரான வித்யாசாகர் ராவ், தமி-ழக பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஜெயலலிதா உடல்நலக்குறைவு, அவருடைய மரணம், ஆளுங்கட்சியில் பிளவு போன்ற அரசியல் பரபரப்பு நிலவிய காலங்களில் நேரடி ஆளுநர் இருந்திருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை முன்னெப்போதும் இல்லாத நடைமுறையை நடுவண் பாஜக அரசு மேற்கொண்டது. ஒருகட்டத்தில், முதல்வர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் விலக்கப்பட்டு, வி.கே.சசிகலா பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது அவரை முதல்வராக பதவியேற்க ஆளுநர் முறைப்படி அழ
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்: கட்சித்தாவல் தடை சட்டப்படி சரியானதா?

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்: கட்சித்தாவல் தடை சட்டப்படி சரியானதா?

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த 18 அதிமுக எம்எல்ஏக்கள், இன்று (செப். 18) அதிரடியாக தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். சபாநாயகர் தனபாலின் இந்த நடவடிக்கை, கட்சித்தாவல் தடை சட்டத்தின்படி சரிதானா? என்பது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி பூசல்களைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளடக்கிய 12 எம்எல்ஏக்கள் ஓரணியாகவும், மற்ற எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மற்றோர் அணியாகவும் பிரிந்து செயல்பட்டு வந்தனர். கடந்த பிப்ரவரி மாதம் நடந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின்போது, ஓ.பன்னி¦ர்செல்வம் அணியினர் எதிர்த்து வாக்களித்தனர். பிரதமர் நரேந்திரமோடி, பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோரின் தலையீட்டால் ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி, ஓரணியாக இணைந்தன. இந்த இணைப்பில் உடன