Monday, September 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: corona

கோவிட் தடுப்பூசி இன்னும் போடலையா? ஏப்ரல் 30ல் மீண்டும் வாய்ப்பு!

கோவிட் தடுப்பூசி இன்னும் போடலையா? ஏப்ரல் 30ல் மீண்டும் வாய்ப்பு!

சேலம், தகவல், முக்கிய செய்திகள்
கோவிட் நோய்த்தொற்றில் இருந்து காத்துக்கொள்ள இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பொதுமக்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக, சேலம் மாவட்டத்தில் சனிக்கிழமை (ஏப். 30) மாபெரும் கோவிட் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. மொத்தம் 1392 மையங்களில் இந்த முகாம் நடக்கிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள சிறப்பு முகாம்களை மீண்டும் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.   இதையடுத்து, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 28வது மாபெரும் கோவிட் தடுப்பூசி முகாம் நடத்துவது தொடர்பாக அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை (ஏப். 27) நடந்தது. மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் இக்கூட்டம் நடந்தது. அவர் பேசியது:   கோவிட் தடுப்புப் பணிக
நம்ம ஊர் நாயகி: சீதா தேவிகளால் தழைக்கிறது மனிதநேயம்!

நம்ம ஊர் நாயகி: சீதா தேவிகளால் தழைக்கிறது மனிதநேயம்!

சென்னை, சேவை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
வாழ்வில் ஏற்படும் கொடுந்துயரங்களும், எதிர்பாராத இடர்களும்தான் சாதாரண மனிதர்களைக் கூட அசாதாரண செயல்களைச் செய்யக்கூடிய நாயகர்களாக உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. கொரோனா என்னும் பேரிடர், இந்த உலகுக்கு மற்றுமொரு நாயகியை பரிசளித்திருக்கிறது. கொரோனா ஊரடங்கின்போது வேலை, வருவாய் இழந்து வயிற்றுக்கும் உயிருக்குமாய் தத்தளித்துக் கொண்டிருந்த சாமானியர்களுக்கு தன்னார்வலர்கள் பலர் உணவளித்தல், மருத்துவ உதவிகள், உணவுப்பொருள் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளைச் செய்து வந்தனர். உலகில் இன்னும் மானுடம் மரித்துப் போய்விடவில்லை என்பதற்கு அத்தகைய தன்னார்வலர்களே தக்க சான்று. அவர்களைப் பற்றிய தகவல்களை நமது 'புதிய அகராதி'யில் 'நம்ம ஊர் நாயகன் / நாயகி' என்ற தலைப்பில் தொடராக எழுதி வருகிறோம். அந்த வரிசையில் இப்போது, சீதா தேவி.   சென்னை கொடுங்கையூர் மூலக்கடையைச் சேர்ந
மாணவர்களுக்கு வைட்டமின், ஸிங்க் மாத்திரைகள்; மருத்துவ பரிசோதனை! செப். 1 முதல் 9, 10, 11, 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு!!

மாணவர்களுக்கு வைட்டமின், ஸிங்க் மாத்திரைகள்; மருத்துவ பரிசோதனை! செப். 1 முதல் 9, 10, 11, 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு!!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழகத்தில் வரும் செப். 1ம் தேதி முதல் 9, 10, 11, 12ம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்கும் என அரசு அறிவித்துள்ளது. கொரோனா நோய்த்தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவ, மாணவிகளுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வதுடன், வைட்டமின், ஸிங்க் மாத்திரைகள் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்த நிலையில், தமிழகத்தில் வரும் செப். 1ம் தேதி முதல் 9, 10, 11, 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, பள்ளிகளில் முன்னேற்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்கான முன்ஆயத்தக் கூட்டங்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடந்து வருகிறது.   இது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆட்சியர் கார்மேகம் சனிக்கிழமை (ஆக. 21) விரிவான ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:   கொரோனா தொற்று குற
கொரோனா தொற்று அதிகரிப்பு; இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்!

கொரோனா தொற்று அதிகரிப்பு; இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்!

தமிழ்நாடு
கொரோனா நோய்த்தொற்றைத் தடுக்க, ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீண்டும் இன்று (ஆக. 9) முதல் கூடுதலாக்கப்பட்டு உள்ளது. சேலம் மாவட்டத்தில் மாலை 6 மணி வரை மட்டுமே ஜவுளிக்கடைகள், வணிக வளாகங்கள், பேரங்காடிகள் செயல்பட அனுமதித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு ஆக. 23ம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதேநேரம், நோய்த்தொற்றின் தாக்கம் அதிகமாக உள்ள இடங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே சூழ்நிலைக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை அதிமாக்கிக் கொள்ளவும் அரசு அனுமதி வழங்கியுள்ளது. கேரளா மாநிலத்தில் கொரோனோ நோய்த்தொற்று சரிந்திருந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக மேலும் கணிசமாக அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதையடுத்து எல்லையோர மாவட்டங்களான கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில
ரெம்டெசிவர், சி.டி. ஸ்கேன் தேவையில்லை! மருத்துவர் பிரியா சம்பத்குமார் தகவல்!!

ரெம்டெசிவர், சி.டி. ஸ்கேன் தேவையில்லை! மருத்துவர் பிரியா சம்பத்குமார் தகவல்!!

தமிழ்நாடு, மருத்துவம், முக்கிய செய்திகள்
கொரோனா இரண்டாவது அலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தொற்றுநோய் ஆராய்ச்சியாளர் பிரியா சம்பத்குமார் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த தகவல்களில் இருந்து... தொற்றின் வேகம் முதல் அலையைவிட இரண்டாவது அலையில் அதிகமாக இருப்பது ஏன்?   உருமாற்றம் அடைந்துள்ள கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவுகிறது. அதேபோல வீட்டில் இருக்கும் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு தொற்று பரவும்போது அதிக நெருக்கம் காரணமாக அதிகப்படியான வைரஸ், நுரையீரலை சென்றடைகிறது. இதனால் நோயின் வீரியமும் அதிகமாக ஆகிறது.   முதல் அலையில் குடும்பத்தினுள் கொரோனா வைரஸ் பரவும் விகிதம் 30 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது அது 100 சதவீதமாக மாறியிருக்கிறது. ஆகையால், குடும்பத்தினுள் யாருக்காவது கொரோனா அறிகுறி இருந்தால் அவரை முதலில் தனிமைப்படுத்த வேண்டும். பிறர் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
கொரோனா பரவல் அதிகரிப்பு: தமிழகத்தில் ஏப். 20 முதல் இரவு நேர ஊரடங்கு; ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமுடக்கம்!

கொரோனா பரவல் அதிகரிப்பு: தமிழகத்தில் ஏப். 20 முதல் இரவு நேர ஊரடங்கு; ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமுடக்கம்!

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், வரும் ஏப். 20ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவை அரசு அமல்படுத்தி உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமுடக்கமும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த 2019ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. தினசரி கொரோனா தொற்று பாதிப்பு 500க்கும் கீழே குறைந்த நிலையில், சட்டமன்ற தேர்தல் காலத்தில் மீண்டும் தொற்றின் வேகம் முன்பை விட அதிகரித்தது. பொதுமக்கள் முகக்கவசம் அணியாதது, சமூக இடைவெளியை பின்பற்றாதது, கட்டுப்பாடின்றி பொது இடங்களில் கூட்டம் கூட்டமாக கூடியது உள்ளிட்ட காரணங்களால் கொரோனா இரண்டாவது அலையின் பரவல் வேகமெடுத்துள்ளது. கடந்த சில நாள்களாக தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்றின் தாக்கம் 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இது, தமிழக அரசை அதிர்ச்சி
பங்குச்சந்தையை பதம் பார்த்த கோவிட் 2.O: ஒரே நாளில் 8.70 லட்சம் கோடி ரூபாய் இழப்பு!!

பங்குச்சந்தையை பதம் பார்த்த கோவிட் 2.O: ஒரே நாளில் 8.70 லட்சம் கோடி ரூபாய் இழப்பு!!

முக்கிய செய்திகள், வர்த்தகம்
கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தால் திங்கள்கிழமை (ஏப். 12) இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்தன. இதனால் முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் 8.70 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் வேகமெடுத்துள்ளது. இந்தியாவில் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அதன் தாக்கம் பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்தது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி, திங்கள் கிழமை (ஏப். 12) காலை 14644.65 புள்ளிகளுடன் வர்த்தகத்தை தொடங்கியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 14652.50 புள்ளிகளுக்குச் சென்றது. குறைந்தபட்சமாக 14283.55 புள்ளிகள் வரை சரிந்தது. தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள 50 பங்குகளில் வெறும் 4 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே முந்தைய வர்த்தக தினத்தை விட சற்று ஏற்றம் கண்டிருந்தன. 46 நிறுவ
நேற்று மநீம… இன்று தேமுதிக…! கொரோனா கிலியில் வேட்பாளர்கள்!!

நேற்று மநீம… இன்று தேமுதிக…! கொரோனா கிலியில் வேட்பாளர்கள்!!

சேலம், தேர்தல் 2021, முக்கிய செய்திகள்
மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் சந்தோஷ்பாபு, பொன்ராஜ் ஆகியோரை தொடர்ந்து சேலம் மேற்கில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. நோய்த்தொற்று கிலியால் வேட்பாளர்கள் கூட்டங்களை புறக்கணிக்கும் முடிவுக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.   தமிழக சட்டப்பேரவை தேர்தல் களம், தலைவர்களின் உச்சக்கட்ட பரப்புரைகளால் அனல் பறந்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க, கொரோனா இரண்டாவது அலை இம்முறை அரசியல் கட்சியினர் மீது அடுத்தடுத்து தாக்குதலை தொடர்ந்து வருவது, வேட்பாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.   ஏற்கனவே, சென்னை வேளச்சேரி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ்பாபு கொரோனா தொற்றுக்கு ஆளானார். மக்களை நேரில் சந்திக்க முடியாமல் போனதற்காக வருத்தப்படுவதாகவும் அ
இந்திய கோடீஸ்வரர் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம்; 6 லட்சம் கோடிகளுக்கு அதிபர்!

இந்திய கோடீஸ்வரர் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம்; 6 லட்சம் கோடிகளுக்கு அதிபர்!

முக்கிய செய்திகள், வர்த்தகம்
பிரபல தொழில் சாம்ராஜ்யமான ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, தொடர்ந்து இந்தியாவின் நம்பர்-1 கோடீஸ்வரராக திகழ்கிறார். அவருடைய சொத்து மதிப்பு 6.12 லட்சம் கோடிகளுக்கு மேல் இருப்பதாக, ஹூரூன் ஆய்வேடு, மார்ச் 2ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.   இப்போதைய நிலையில், இந்தியாவில் மட்டும் மொத்தம் 209 பெரும் கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள் என்றும், அவர்களில் 177 பேர் இந்தியாவில் வசிப்பதாகவும் மற்றவர்கள், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் என்றும் ஹூரூன் ஆய்வேடு கூறுகிறது.   உலகளாவிய கோடீஸ்வரர்கள் பட்டியலின் பத்தாவது பதிப்பை பிரபல வணிக இதழான ஹூரூன் செவ்வாய்க்கிழமை (மார்ச் 2) அன்று வெளியிட்டது. அதில்தான் மேற்கண்ட தகவல் இடம் பெற்றுள்ளது.   உலகம் முழுவதும் மொத்தம் 3228 பெரும் கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள். மொத்தம் 68
காற்றிலே கரைந்த பாடும் நிலா பாலு! நான் போகிறேன் மேலே மேலே பூலோகமே காலின் கீழே…!!

காற்றிலே கரைந்த பாடும் நிலா பாலு! நான் போகிறேன் மேலே மேலே பூலோகமே காலின் கீழே…!!

சினிமா, முக்கிய செய்திகள்
கடந்த 2010ம் ஆண்டில் சிபிராஜ், பிரசன்னா நடிப்பில் 'நாணயம்' படம் வெளியானது. அதில், 'நான் போகிறேன் மேலே மேலே... பூலோகமே காலின் கீழே...' என்ற டூயட் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியிருப்பார். அந்தப்பாடலின் பல்லவியை இன்று (செப். 25, 2020) மெய்யாக்கி, கோடிக்கணக்கான ரசிகர்களை தவிக்கவிட்டுச் சென்றுவிட்டார், ரசிகர்களால் 'பாடும் நிலா பாலு' என்றழைக்கப்படும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் (74). ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் 4.6.1946ல் பிறந்த எஸ்.பி.பி.யின் முழு பெயர், ஸ்ரீபதி பண்டிதராத்யூலா பாலசுப்ரமணியம். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்பட 16 மொழிகளில் திரைப்பட பாடல்களை பாடியுள்ளார். கடந்த 50 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 40 ஆயிரம் திரையிசை பாடல்களுக்கு மேல் பாடி, கின்னஸ் சாதனையும் படைத்திருக்கிறார்.   சென்னை நுங்கம்பாக்கத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த எஸ்.பி.பி., கடந்த ஆகஸ்ட