Wednesday, May 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Actors

வேலைக்காரன் – சினிமா விமர்சனம்; ‘கார்ப்பரேட்டுகளின் லாப வெறியை தோலுரிக்கிறது’

வேலைக்காரன் – சினிமா விமர்சனம்; ‘கார்ப்பரேட்டுகளின் லாப வெறியை தோலுரிக்கிறது’

சினிமா, முக்கிய செய்திகள்
'தனி ஒருவன்' இயக்குநர் மோகன் ராஜா - சிவகார்த்திகேயன் கூட்டணியில், உலகம் முழுவதும் இன்று (டிசம்பர் 22, 2017) வெளியாகி இருக்கிறது, 'வேலைக்காரன்'. நடிகர்கள்: சிவகார்த்திகேயன், ஃபகத் ஃபாசில், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சினேகா, ரோகிணி, சார்லி, விஜய் வசந்த், 'ரோபோ' சங்கர், சதீஷ், 'மைம்' கோபி, 'ஆர்.ஜே.' பாலாஜி, தம்பி ராமையா, சரத் லோஹித்ஸ்வா மற்றும் பலர். இசை; அனிருத்; ஒளிப்பதிவு: ராம்ஜி; கலை: முத்துராஜ்; தயாரிப்பு: 24 ஏஎம் ஸ்டூடியோஸ்; இயக்கம்: மோகன் ராஜா. கதை என்ன?: வேலைக்காரர்கள், அந்தந்த நிறுவனத்தின் முதலாளிகளுக்கு விசுவாசமாக இருப்பதைக் காட்டிலும், பொருள்களை வாங்கும் நுகர்வோருக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதையும், லாபவெறி கொண்டு அலையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் உண்ணும் உணவுப்பொருள்களை எப்படி தயாரிக்கின்றன? அதை வணிகப்படுத்த என்னவெல்லாம் செய்கின்றன என்பதையும் நேர்த்தியான திரை க்கதையுடன
சத்யா – சினிமா விமர்சனம்

சத்யா – சினிமா விமர்சனம்

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
காணாமல் போன பெண் குழந்தையை மீட்க போராடும் இளைஞன் சந்திக்கும் திடுக்கிடும் திருப்பங்களும், சிக்கல்களும்தான் சத்யா படத்தின் ஒன்லைன். நடிகர்கள்: சிபிராஜ், ரம்யா நம்பீசன், வரலட்சுமி சரத்குமார், ஆனந்தராஜ், சதீஸ், 'யோகி' பாபு, 'நிழல்கள்' ரவி; இசை: சைமன் கே கிங்; ஒளிப்பதிவு: அருண்மணி பழனி; எடிட்டிங்: கவுதம் ரவிச்சந்திரன்; தயாரிப்பு: நாதாம்பாள் பிலிம் பேக்டரி; இயக்கம்: பிரதீப் கிருஷ்ணமூர்த்தி. நாயகன் சத்யா (சிபிராஜ்) ஆஸ்திரேலியாவில் உள்ள ஓர் ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். அவருடன் யோகி பாபுவும் பணியாற்றுகிறார். திடீரென்று ஒருநாள் சிபிராஜிக்கு அவருடைய முன்னாள் காதலியான ரம்யா நம்பீசனிடம் இருந்து செல்போனில் அழைப்பு வருகிறது. சிபிராஜிடம் ரம்யா நம்பீசன் அவசரமாக ஓர் உதவி கேட்க, நாயகனும் இந்தியா திரும்புகிறார். தன் நான்கு வயது பெண் குழந்தை காணவில்லை என்றும், அவளை கண்டுபிடித்து தர வேண்டும
கொடிவீரன் – சினிமா விமர்சனம்

கொடிவீரன் – சினிமா விமர்சனம்

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
குட்டிப்புலி, கொம்பன், மருது வரிசையில் இயக்குநர் முத்தையாவின் டெம்பிளேட்டில் தடம் மாறாமல் இன்று (டிசம்பர் 8, 2017) வெளியாகி இருக்கிறது கொடிவீரன். குட்டிப்புலி படத்தில் மகனுக்கும் தாய்க்குமான பாசத்தையும், கொம்பன் படத்தில் மாமனாருக்கும் மருமகனுக்குமான பாசத்தையும், மருது படத்தில் பேரனுக்கும், பாட்டிக்குமான பாசத்தையும் சொன்ன முத்தையா, கொடிவீரன் படத்தில் அண்ணன்&தங்கை பாசத்தை பந்தி வைத்திருக்கிறார். ஒரு ஊர். மூன்று வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்த அண்ணன்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தங்கை. தங்களது தங்கைகளு க்காக எதையும் செய்யத் துணியும் அண்ணன்கள்; அவர்களுக்காக எதையும் சகித்துக்கொண்டு பாச மழை பொழியும் தங்கைகள். அவர்கள் வாழ்வில் ஏற்படும் அன்பு, காதல், துயரம், துரோகம் ஆகியவற்றை ரத்தம் சொட்டச்சொட்ட சொல்கிறது கொடிவீரன். நடிகர்கள்: சசிக்குமார், மஹிமா நம்பியார், சனுஷா, பூர்ணா, பசுபத
‘திருட்டுப்பயலே-2’ – சினிமா விமர்சனம்!

‘திருட்டுப்பயலே-2’ – சினிமா விமர்சனம்!

சினிமா, முக்கிய செய்திகள்
'இந்த உலகத்தில் யாருமே நல்லவர்கள் இல்லை. எல்லோருக்கும் இரண்டு முகங்கள் இருக்கின்றன. வாய்ப்பு கிடைத்தால் அனைவருமே தவறு செய்யக்கூடியவர்கள்தான். ஆகையால் எல்லோரையுமே சந்தேகிக்க வேண்டும்' என்ற செய்தியை உரத்துச் சொல்கிறது, 'திருட்டுப்பயலே-2' படம். நடிகர்கள்: பாபி சிம்ஹா, அமலா பால், பிரசன்னா, சுசி கணேசன், எம்எஸ் பாஸ்கர்; ஒளிப்பதிவு: செல்லதுரை; இசை: வித்யாசாகர்; தயாரிப்பு; ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்; கதை, திரைக்கதை, இயக்கம்: சுசி கணேசன். ஃபேஸ்புக் போன்ற சமூகவலைத்தளமே கதியாகக் கிடக்கும் ஒரு திருமணம் ஆன பெண்ணிற்கு, அதனூடாக அறிமுகம் ஆகும் ஓர் ஆணின் மூலமாக விரும்பத்தகாத நெருக்கடிகள் ஏற்படுகிறது. அந்த நெருக்கடியில் இருந்து அந்தப் பெண்ணை கணவர் காப்பாற்றினாரா?, ஃபேஸ்புக்கில் அறிமுகம் ஆன அந்த ஆண் அந்தக் குடும்பத் தலைவிக்கு எதற்காக குடைச்சல் கொடுக்கிறார்?, குடும்பத்தலைவியின் நிலை என்ன ஆனது? என்பதை
இப்படை வெல்லும் – சினிமா விமர்சனம்

இப்படை வெல்லும் – சினிமா விமர்சனம்

சினிமா, முக்கிய செய்திகள்
சென்னையில் குண்டுகளை வெடிக்கச் செய்து நாச வேலைகளில் ஈடுபடும் ஒரு பயங்கரவாதியிடம் சிக்கிக்கொள்ளும் கதாநாயகன், அவரிடம் இருந்து தப்பித்தாரா? குண்டுவெடிப்பில் இருந்து மக்களை காப்பாற்றினாரா? என்பதுதான், 'இப்படை வெல்லும்' படத்தின் ஒன்லைன். நடிகர்கள்: உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன், சூரி, ஆர்.கே.சுரேஷ், டேனியல் பாலாஜி, ராதிகா, எம்எஸ் பாஸ்கர், ரவி மரியா மற்றும் பலர். இசை: டி. இமான்; ஒளிப்பதிவு: ரிச்சர்டு டி நாதன்; எடிட்டிங்: பிரவீன்; தயாரிப்பு: லைகா புரொடக்ஷன்ஸ்; இயக்கம்: கவுரவ் நாராயணன். சர்வதேச பயங்கரவாதியான சோட்டா (டேனியல் பாலாஜி), சென்னையில் சில இடங்களில் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து, அமைதியை சீர்குலைக்க திட்டம் தீட்டுகிறார். அதற்காக அவர் உத்தரபிரதேச சிறையில் இருந்து தப்பித்து, சென்னை வந்து சேர்கிறார். ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வரும் நாயகன் மதுசூதனன் (உதயநிதி ஸ்டாலின்)
‘கருப்பன்’ – திரை விமர்சனம்!

‘கருப்பன்’ – திரை விமர்சனம்!

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆயுதபூஜை விடுமுறையைக் குறிவைத்து (செப். 29) வெளி வந்திருக்கும் படம் 'கருப்பன்'. நடிகர்கள்: விஜய் சேதுபதி, தான்யா, பாபி சிம்ஹா, பசுபதி, கிஷோர், சரத் லோகித்ஷ்வா, சிங்கம் புலி, ரேணுகா, காவேரி மற்றும் பலர். இயக்கம்: ஆர்.பன்னீர்செல்வம். இசை: டி.இமான். ஒளிப்பதிவு: சக்திவேல். தயாரிப்பு: ஏ.எம்.ரத்னம். 'ரேணிகுண்டா' படத்தின் மூலம் இளம் குற்றவாளிகளின் கதையைச் சொல்லி, கவனம் ஈர்த்த இயக்குநர் ஆர்.பன்னீர்செல்வம், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் விஜய் சேதுபதியின் தோளில் சவாரி செய்துள்ள படம்தான் 'கருப்பன்'. கிராமத்து மாடுபிடி வீரனின் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள்தான் இந்தப் படத்தின் ஒரு வரி கதை. ஆனால், தனக்குக் கிடைக்க வேண்டிய பெண், வேறு ஒருவருக்கு கிடைத்து விட்ட ஆற்றாமையில், ஓர் இளைஞன் என்னவெல்லாம் செய்கிறான் என்ற கோணத்தில் திரைக்கதை நகர்கிறது. அப்படி தான் ஆசைப்பட்ட கதாநாயகியை பறிகொடுத்த வில்லன்தா