Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: பதிவாளர்

அவமதிப்பு வழக்கு: பெரியார் பல்கலை பதிவாளர் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு!

அவமதிப்பு வழக்கு: பெரியார் பல்கலை பதிவாளர் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
உதவி பேராசிரியர் ஒருவருக்கு பதவி உயர்வு வழங்காமல், நீதிமன்ற உத்தரவை அவமதித்த பெரியார் பல்கலை பதிவாளரை மார்ச் 28ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   சேலத்தை அடுத்த சித்தனூரை சேர்ந்தவர் வைத்தியநாதன். பெரியார் பல்கலையில் பொருளியல் துறை உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். பல்கலைக்கழக மானியக்குழு, பகுதி நேரமாக பி.ஹெச்டி., முனைவர் பட்டத்தை எந்த வகையிலான விடுப்பும் எடுக்காமல் நிறைவு செய்யும்பட்சத்தில், அதற்குரிய காலத்தையும் கற்பித்தல் அனுபவமாகக் கணக்கிட்டு, பதவி உயர்வின்போது கருத்தில் கொள்ள வேண்டும் என்று விதிகளில் கூறப்பட்டுள்ளது. ஆனால் உதவி பேராசிரியர் வைத்தியநாதனுக்கு பதவி உயர்வின்போது மேற்சொன்ன விதியை ஏற்காமல், அவருக்கு பதவி உயர்வும் வழங்கவும் பல்கலை நிர்வாகம் மறுத்துவிட்டது.   இதையடுத்து வைத்தியந
திண்ணை: பகுத்தறிவு பல்கலை பதிவாளர் பதவிக்கு ஏலம்; அமைச்சர் கறார்!

திண்ணை: பகுத்தறிவு பல்கலை பதிவாளர் பதவிக்கு ஏலம்; அமைச்சர் கறார்!

அரசியல், கடலூர், சேலம், தமிழ்நாடு, திண்ணை, முக்கிய செய்திகள்
''முன்னாடிலாம் வீட்டு வீட்டுக்கு திண்ணைய கட்டி வெச்சிருப்பாங்க. பாதசாரிங்க யாராவது உட்கார்ந்து இளைப்பாறிட்டு போறதுக்கு வசதியா இருக்கும். இப்போலாம் வீடுங்கதான் பெருசு பெருசா இருக்கே தவிர திண்ணையதான் காணோம். தமிழனுங்க மனசும் சின்னதாப் போச்சுது'' என்றபடியே, சலிப்புடன் நக்கல் நல்லசாமியின் வீட்டு திண்ணையில் வந்தமர்ந்தார் நம்ம பேனாக்காரர்.   ''எங்கே நம்ம ஞானவெட்டியாரையும், பொய்யாமொழியாரையும் நாலஞ்சு நாளா ஆளையே காணோமே?'' என்றார் நக்கல் நல்லசாமி. ''ஓ...அவங்களா... ஏதோ வேலையா பண்ருட்டி பக்கம் போயிருக்கறதா சொன்னாங்க''   ''இப்போது ஏதும் பலாப்பழம் சீசன் இல்லையே?'' ''யோவ்... இந்த நக்கலுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல... என்ற பேனாக்காரர், அவங்க எதுக்கு பண்ருட்டிக்கு போனாங்கனு நமக்கு தெரியலப்பா. ஆனா, அங்க இருந்தபடியே நமக்கு செல்போன்ல ஒரு சேதி சொல்லியிருக்காங்
பேனாக்காரன் பேச்சு: பெரியார் பல்கலையில் அடுத்த பதிவாளர், தேர்வாணையர் யார்?

பேனாக்காரன் பேச்சு: பெரியார் பல்கலையில் அடுத்த பதிவாளர், தேர்வாணையர் யார்?

கல்வி, சேலம், தமிழ்நாடு, திண்ணை, முக்கிய செய்திகள்
பகல்ல பக்கம் பாத்து பேசணும்... ராத்திரியில அதுவும் பேசக்கூடாதுனு சொல்லுவாங்க என்றபடியே ஞானவெட்டியானையும், ஊர்சுற்றியையும் தோள்களில் தட்டியவாறே திண்ணையில் வந்து அமர்ந்தார் நம்ம பேனாக்காரர். ''நீ விஷயம் இல்லாம இந்த நேரத்துல வர்ற ஆளு இல்லையே... என்ன விஷயம் என கேட்டேவிட்டார்'' ஊர்சுற்றி. வேறென்ன...வழக்கம்போல பெரியார் பல்கலைய பத்தின சேதிதான்.   ''பெரியார் பல்கலையில தேர்வாணையர் பதவி 2018ம் வருஷம் பிப்ரவரி மாசத்துலருந்து காலியா கிடக்கு. ஆகஸ்ட் மாசத்துல இருந்து பதிவாளர் பதவியும் காலியாயிருச்சு. ஒரு பல்கலைக்கு துணைவேந்தர் பதவி எப்படி முக்கியமோ அதுபோல இந்த ரெண்டு போஸ்டுமே ரொம்ப ரொம்ப முக்கியமானது,'' என்று பேனாக்காரர் சொல்லி முடிப்பதற்குள், ''அதெல்லாம் தெரிஞ்ச கதையாச்சே புதுசா என்ன இருக்கு?,'' என அவசரப்படுத்தினார் ஞானவெட்டியான்.   ''எதுக்கு இத்தன அவசரம்....அவசர
பெரியார் பல்கலை.: தேர்வாணையர், பதிவாளர் பதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு! வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படுமா?

பெரியார் பல்கலை.: தேர்வாணையர், பதிவாளர் பதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு! வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படுமா?

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் பெரியார் பல்கலையில் புதிதாக தேர்வாணையர், பதிவாளர் பதவிகளுக்கான நியமன வேலைகள் தொடங்கியுள்ள நிலையில், இந்த முறையாவது வெளிப்படைத்தன்மையுடன் இப்பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்று பேராசிரியர்கள் தரப்பில் பலத்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.   சேலம் பெரியார் பல்கலைக்கும் ஊழல் முறைகேடுகளுக்கும் அத்தனை நெருங்கிய தொடர்போ என்னவோ.... நிர்வாகம் மேற்கொள்ளும் எந்த ஒரு நடவடிக்கையிலும் வில்லங்கமும் சேர்ந்தே இணைந்து கொள்கிறது. அண்மைக்காலமாக ஊழலுடன் சாதிய பற்றும் சேர்ந்து கொண்டுள்ளது.   தேர்வாணையர், பதிவாளர் பதவிகளுக்கான அறிவிப்புதான் லேட்டஸ்ட் வில்லங்கம். இந்தப் பல்கலையில் தேர்வாணையராக பணியாற்றி வந்த பேராசிரியர் லீலா, 2018, பிப்ரவரி மாதம் பணி நிறைவு பெற்றார். அவருடைய பதவிக்காலம் முடிவடைவதற்கு சில மாதங்கள் முன்பே அதாவது கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதமே, புதிய தேர்வாண
பெரியார் பல்கலை முன்னாள் பதிவாளர் திடீர் தற்கொலை ஏன்?;  கைது நடவடிக்கைக்கு பயந்து விஷம் குடித்தாரா?; திடுக்கிடும் தகவல்கள்!

பெரியார் பல்கலை முன்னாள் பதிவாளர் திடீர் தற்கொலை ஏன்?; கைது நடவடிக்கைக்கு பயந்து விஷம் குடித்தாரா?; திடுக்கிடும் தகவல்கள்!

அரசியல், ஈரோடு, கல்வி, சிறப்பு கட்டுரைகள், சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் அங்கமுத்து (58) திடீரென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதன் பின்னணியில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள தோப்புப்பாளையத்தைச் சேர்ந்தவர் அங்கமுத்து (58). சேலம் பெரியார் பல்கலையில் உடல்கல்வி இயக்குநராக பணியாற்றி வந்தார். நேற்று (டிசம்பர் 18, 2017) காலை அவர் வீட்டில் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கிக் கிடந்தார். இதையறிந்த அவருடைய மனைவி விஜயலட்சுமி, உடனடியாக அருகில் உள்ள தன்வந்திரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு கைவிரித்த நிலையில், கணவரை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் செல்லும் வழியிலேயே அங்கமுத்து இறந்துவிட்டது தெரியவந்தது. இதுபற்றி தகவல் அறிந்த பெருந்துறை காவல் நிலைய உதவி ஆய்வாளர் தங்கவேல், தற்கொலை வழக்காக பதிவு செய்து விசாரித்து வருகிறார். அவர