Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

திண்ணை: பகுத்தறிவு பல்கலை பதிவாளர் பதவிக்கு ஏலம்; அமைச்சர் கறார்!

”முன்னாடிலாம் வீட்டு வீட்டுக்கு
திண்ணைய கட்டி வெச்சிருப்பாங்க.
பாதசாரிங்க யாராவது உட்கார்ந்து
இளைப்பாறிட்டு போறதுக்கு வசதியா
இருக்கும். இப்போலாம் வீடுங்கதான்
பெருசு பெருசா இருக்கே தவிர
திண்ணையதான் காணோம். தமிழனுங்க
மனசும் சின்னதாப் போச்சுது” என்றபடியே,
சலிப்புடன் நக்கல் நல்லசாமியின்
வீட்டு திண்ணையில் வந்தமர்ந்தார்
நம்ம பேனாக்காரர்.

 

”எங்கே நம்ம ஞானவெட்டியாரையும்,
பொய்யாமொழியாரையும் நாலஞ்சு
நாளா ஆளையே காணோமே?” என்றார்
நக்கல் நல்லசாமி.

”ஓ…அவங்களா… ஏதோ வேலையா
பண்ருட்டி பக்கம் போயிருக்கறதா சொன்னாங்க”

 

”இப்போது ஏதும் பலாப்பழம் சீசன் இல்லையே?”

”யோவ்… இந்த நக்கலுக்கு ஒண்ணும்
குறைச்சல் இல்ல… என்ற பேனாக்காரர்,
அவங்க எதுக்கு பண்ருட்டிக்கு போனாங்கனு
நமக்கு தெரியலப்பா. ஆனா,
அங்க இருந்தபடியே நமக்கு செல்போன்ல
ஒரு சேதி சொல்லியிருக்காங்க”

 

”என்ன சேதியாம்…?”

”தமிழர் வாழ்வு சிறக்கவும், தமிழ்நாட்டு
நலனுக்காகவும் உண்மையிலேயே உரத்து
குரல் கொடுக்கும் தமிழக வாழ்வுரிமைக்
கட்சித் தலைவர் வேல்முருகன் இருக்காரே…
அவரு ஏற்கனவே தானே புயல், கஜா புயல்
வந்தபோதெல்லாம் தன்னோட சொத்துகளை
வித்து பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவினாருபா.
இப்பலாம் லட்ச ரூபாய் கொடுத்தாலே
கோடி ரூபாய்க்கு வௌம்பரம்
தேடிக்கிறவங்கதான் அதிகம்.

 

ஆனா வேல்முருகன் அப்படி இல்ல.
இப்பகூட தனக்குச் சொந்தமான ஒரு முக்கிய
சொத்துகள வித்துதான் கஜா புயலுக்கு உதவினாராம்.
அது சில கோடி இருக்கும்னு சொல்லிக்கிறாங்கபா.
இதுவரைக்கும் கட்சி நிதிக்காக யார்க்கிட்டயும்
நன்கொடைனு போய் நின்னதில்ல.
ஆனா வேல்முருகனோட கஜானா நிலவரம்
ரொம்ப மோசமாகிட்டதால, வேற வழியில்லாம
நன்கொடை வசூலிக்கலாம்ங்கிற
முடிவுக்கு வந்துட்டாரு.

அதுல அவருக்கு முழு உடன்பாடு
இல்லைங்கிறதுதான் உண்மை. இருந்தாலும்,
ஒவ்வொரு தொகுதிக்கும் வெறும் 25
பேருக்கிட்ட மட்டும் நன்கொடை வசூலிச்சா
போதும்னு ரசீது புத்தகம் அச்சடிச்சிருக்காராம்.
நன்கொடைனு யார் கிட்டயும் போய்
எந்தவிதமான கலாட்டாவும் செய்துடக்கூடாது.
கொடுப்பதை வாங்கிக்குங்கனும்
ரொம்பவே ஸ்டிரிக்டாக
சொல்லி இருக்காராம்.

 

சீமான், வேல்முருகன் ரெண்டு பேரோட
சிந்தனையும் கிட்டத்தட்ட ஒண்ணுபோலதான் இருக்கு.
ஏன், இவங்க ரெண்டு பேரும் ஏன் சேர்ந்து
தேர்தலை சந்திக்கக்கூடாதுனு இரண்டு கட்சியில
இருக்கற தொண்டர்களுமே கேட்டுக்கிறாங்களாம்பா,”
என்றார் பேனாக்காரர்.

”பண்ருட்டிக்கு போனாலும் காரியத்துல
ஞானவெட்டியாரும், பொய்யாமொழியாரும்
கருத்தாதான் இருக்காங்கபோல….”

”ஆங்… அப்புறம் நம்ம பகுத்தறிவு
தந்தை பெயருல இருக்கற பல்கலைக்கழக
மேட்டரும் சொல்லிடறேன். இல்லேனா
எனக்குத் தலையே வெடிச்சிடும்.
அதப்பத்தி ஏதாவது சமாச்சாரம்
இன்னிக்காவது வருமா வராதானு
அர்த்த ராத்திரியிலகூட எனக்கு
சில பேரு போன் போட்டு கேட்டாங்கபா…..”

”என்ன மேட்டர்?”

”இந்தப் பல்கலைக்கழகத்துல இப்போ
பதிவாளர் பொறுப்புல இருக்கற கோல்டுவேலையே
ரெகுலர் பதிவாளராக கொண்டு வந்துடணும்கிறதுல
பல்கலையின் பெரிய பதவியில இருக்கற
சைல்டுவேலும், அங்க இருக்கற அவரோட
சாதிக்கார பேராசிரியர்கள் பலரும்
ரொம்பவே மெனக்கெடறாங்கனு
நான்தான் ஏற்கனவே சொல்லியிருந்தேன்ல…

 

அதுல லேட்டஸ்ட் தகவல் என்னன்னா….
பெயரிலேயே அன்பையும் அழகையும்
ஒருசேர வெச்சிருக்கும் அமைச்சர சைல்டுவேல்,
கோல்டுவேல் மற்றும் சில பேரும்
கடந்த வார இறுதியில நேர்லயே சந்திச்சுப்
பேசியிருக்காங்க. அப்போது பேச்சுவாக்குல
அமைச்சர், ஒரு 75 லகரம் கொடுத்துடுவாரானு
வெளிப்படையாவே கேட்டுட்டாராம்.
அதுக்கு சைல்டுவேல், ஒரு அஞ்சு லகரம்னா
கொடுத்துடலாம்….என தலையை சொறிந்தாராம்.
அதுக்கு அந்த அமைச்சரு,
‘சைல்டுவேல் எங்க இருக்க…?’
என்று நக்கலாக கேட்டாராம்.

 

அதுக்கப்புறமும், பல்கலைக்கழகத்தை
ஒட்டுமொத்தமா கம்ப்யூட்டரைஸ் பண்ணனும்னு
திட்டம் வெச்சிருக்காருனு கோல்டுவேலுக்காக
சைல்டுவேல் பரிஞ்சு பேசுனாராம்.
அதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாத
அமைச்சரு, பேரம் பேசறதுலயே குறியாக இருந்திருக்காரு.
பதவிக்குக்கூட மரியாதை இல்லாம,
ஒருமையில அமைச்சரு கேட்டது சைல்டுவேலுக்கு
ரொம்பவே மனசு கஷ்டமாயிடுச்சாம்.
இப்போ பகுத்தறிவு தந்தை பல்கலையில
இதுதான் பேச்சா கெடக்கு”

”மேட்டர் அவ்வளவுதானா?
இல்ல… இன்னும் இருக்கா?”

”இன்னும் இருக்கு. அதையும் சொல்லிடறேன்.
அமைச்சர் கேட்டத கொடுக்கறதுக்காக
கோல்டுவேல் தரப்பு ரெடியாகிடுச்சாம்.
அதனால, அவரோட சாதிக்காரங்க நடத்திட்டு
இருக்கற கல்லூரி அதிபர்களை சந்திச்சு,
வசூல் வேட்டையிலயும் இறங்கிட்டதாம்
ஒரு குரூப். பல்கலையில இருக்கற
பெரியஆசாமிங்கிற அவரோட சாதிக்கார
பேராசிரியர் தலைமையிலான
குரூப்தான் இப்போது வசூல்
வேட்டையில இறங்கியிருக்காம்”

சொல்லிவிட்டு அடுத்த
திண்ணையை நோக்கி
நகர்ந்தார் பேனாக்காரர்.

 

– பேனாக்காரன்.