கொலையை மூடி மறைக்கிறதா போலீஸ்? 8 ஆண்டுக்கு பிறகு சடலம் தோண்டி எடுப்பு! சிபிசிஐடி தீவிர விசாரணை!!
சேலம் அருகே,
சந்தேக மரண வழக்கை
சரியாக புலனாய்வு செய்யாததால்
எட்டு ஆண்டுகள் கழிந்தும்
தூக்கம் தொலைத்து நிற்கிறது
சேலம் காவல்துறை.
சிபிசிஐடி காவல்துறை மீண்டும்
சடலத்தை தோண்டி எடுத்து
விசாரணை நடத்தத் தொடங்கியுள்ள
நிலையில், இளைஞரின்
மரணத்திற்குக் காரணமானவர்கள்
முதல் வழக்கை நீர்த்துப்
போகச் செய்தவர்கள் வரை
பலரும் கிலி அடித்துக்
கிடக்கின்றனர்.
சேலம் மாவட்டம் தளவாய்ப்பட்டி அருகில் உள்ள சித்தனூர் காத்தவராயன் கோயில் அருகில் வசிப்பவர் ராஜூ. இவருடைய மனைவி சகுந்தலா. கூலித்தொழிலாளிகள். இவர்களுடைய ஒரே மகன் மணிகண்டன் (30). அருகில் உள்ள ஆவின் பால் பண்ணையில் கூலித்தொழிலாளியாக இருந்தார். இவருடைய மனைவி நித்யா. இவர்களுக்கு தற்போது 18, 14, 11 வயதுகளில் மூன்று மகன்கள் உள்ளனர்.
கடந்த 2012ம் ஆண்டு, டிசம்பர் 19ம் தேதியன்று பகல் 11 மணியளவில், அதே ஊரைச் சிலர் மணிகண்டனை ...