Monday, September 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: சாதனை

கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவுக்கு 290 ரன்கள் இலக்கு; ஷிகர் தவான் சாதனை சதம்

கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவுக்கு 290 ரன்கள் இலக்கு; ஷிகர் தவான் சாதனை சதம்

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
ஜோகன்னஸ்பெர்க்கில் இன்று (பிப்ரவரி 10, 2018) நடந்து வரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நான்காவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 290 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. அபாரமாக விளையாடிய இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் தனது 100 வது போட்டியில் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே தொடர்ச்சியாக மூன்று போட்டிகளை வென்றுள்ள இந்திய அணி, இன்றைய போட்டியிலும் வென்று, தொடரை கைப்பற்றும் முனைப்புடன் விளையாடி வருகிறது. மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தென்னாப்பிரிக்கா வீரர்கள் இன்றைய போட்டியில் தங்களது வழக்கமான பச்சை நிற சீருடையை தவிர்த்து, பிங்க் நிற சீருடையில் களம் புகுந்தனர். போட்டி நடைபெறும் ஜோகன்னஸ்பெர்க்கின் வாண்டரர
இந்தூர் டி20: ரோஹித் ஷர்மா அபார சதம்; இலங்கைக்கு தர்ம அடி;  தொடரை வென்றது இந்தியா!

இந்தூர் டி20: ரோஹித் ஷர்மா அபார சதம்; இலங்கைக்கு தர்ம அடி; தொடரை வென்றது இந்தியா!

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
இந்தூரில் இன்று (டிசம்பர் 22, 2017) நடந்த இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை இந்திய வீரர்கள் துவம்சம் செய்தனர். அபாரமாக வெளுத்து வாங்கிய கேப்டன் ரோஹித் ஷர்மா, குறைந்த பந்துகளில் சதம் அடித்து புதிய சாதனை படைத்தார். அத்துடன் இந்திய அணி தொடரையும் வென்றது.  இந்தியா - இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையே மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது. கட்டாக்கில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி, இலங்கையை 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. இந்நிலையில் இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று நடந்தது. இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இலங்கை அணியில் விஸ்வ பெர்ணாண்டோ, சனாகா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, சதீரா சமரவிக்ரமா, சதுரங்கா டி சில்வா சேர்க்கப்பட்டனர். டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு
டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய சுழலில் சுருண்டது இலங்கை!

டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய சுழலில் சுருண்டது இலங்கை!

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அந்த அணியை இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, மழையால் டிராவில் முடிந்தது. இந்நிலையில் நாக்பூர் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்து வந்தது. முதல் இன்னிங்ஸில் இலங்கை 205 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 610 - 6 ரன்கள் எடுத்தது. முரளி விஜய் 128 ரன்களும், புஜாரா 143 ரன்களும், ரோஹித் ஷர்மா 102 ரன்களும், கேப்டன் விராட் கோலி 213 ரன்களும் குவித்தனர். இதைத் தொடர்ந்து, நான்காம் நாளான இன்று (நவம்பர் 27, 2017) 405 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய இலங்கை அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 166 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கேப்டன் சண்டிமால் 61 ரன்களும், சுரங்கா
நியூஸிலாந்தை துவம்சம் செய்தது இந்தியா;  தொடரை வென்று சாதனை

நியூஸிலாந்தை துவம்சம் செய்தது இந்தியா; தொடரை வென்று சாதனை

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
திருவனந்தபுரத்தில் இன்று (நவம்பர் 7, 2017) நடந்த நியூஸிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்று, 2-1 கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்தியா வந்துள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணி, 3 ஒரு நாள் மற்றும் 3 இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியது. டெல்லியில் நடந்த முதல் இருபது ஓவர் போட்டியில் இந்தியாவும், ராஜ்கோட்டில் நடந்த இரண்டாவது போட்டியில் நியூஸிலாந்தும் வென்று 1-1 கணக்கில் சமநிலையில் இருந்தன. இந்நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடந்தது. இந்த போட்டியில் வெல்லும் அணி தொடரை வெல்லும் என்பதால் இன்றைய ஆட்டம் இரு அணிகளுக்குமே முக்கியத்துவம் வாய் ந்ததாக இருந்தது. மேலும், 29 ஆண்டுகளுக்குப் பிறகு திருவனந்தபுரம் மைதானத்தில் ஐசிசி போட்டி நடப்பதால் எதிர்பார்த்ததைவிட ரசிகர
கருந்துளைகள் ஆராய்ச்சியில் புதிய கண்டுபிடிப்பு; சாதனை படைத்த தமிழர்!-EXCLUSIVE

கருந்துளைகள் ஆராய்ச்சியில் புதிய கண்டுபிடிப்பு; சாதனை படைத்த தமிழர்!-EXCLUSIVE

இந்தியா, உலகம், கல்வி, சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விஞ்ஞானம்
E-X-C-L-U-S-I-V-E சேலம் சித்தனூரை சேர்ந்தவர் சதீஸ்குமார் சரவணன். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இந்த இளைஞர் இன்றைக்கு உலக அளவில் இந்தியாவின் நம்பிக்கைக்கு உகந்த முகமாக திகழ்கிறார் என்றால் மிகை ஆகாது. ஜெர்மன் நாட்டில் இளநிலை விஞ்ஞானியாக (Junior Scientist) இருக்கிறார். இயற்பியலாளர். சதீஸ்குமார் உள்பட நான்கு பேர் கொண்ட குழுவினர், ஐன்ஸ்டீன் சொல்லிச்சென்ற முக்கியமான ஒரு கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு, கருந்துளைகள் (Black Holes) பற்றிய புதியதொரு கருத்தியல் கொள்கையை உருவாக்கி, விஞ்ஞான உலகின் கவனத்தை ஈர்த்துள்ளனர். அதில், சதீஸ்குமாரின் பங்களிப்பு முக்கியமானது. ''எங்களது ஆராய்ச்சிக்கு ஐன்ஸ்டீன் கருத்தியல்தான் அடிப்படை. அதை மையமாக வைத்துக்கொண்டு, விண்வெளியில் (SPACE) உள்ள கருந்துளைகளைப் பற்றி சில புதிய கண்டுபிடிப்புகளை கொண்டு வந்திருக்கிறோம்,'' என சதீஸ்குமார் அடக்கத்துடன் சொல்கிறார். கருந
கிரிக்கெட்: இந்தியா போராடி தோல்வி; ஆஸி., முதல் வெற்றியை சுவைத்தது

கிரிக்கெட்: இந்தியா போராடி தோல்வி; ஆஸி., முதல் வெற்றியை சுவைத்தது

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி கடுமையாக போராடினாலும் தோல்வியைத் தழுவியது. தொடர் தோல்வியால் துவண்டு போயிருந்த ஆஸ்திரேலியா, முதல் வெற்றியை பதிவு செய்தது. ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலும், மூன்று டி-20 போட்டிகளிலும் விளையாடுகிறது. ஒருநாள் தொடரை ஏற்கனவே இந்திய அணி 3-0 கணக்கில் வென்று உள்ளது. இருப்பினும், 5 போட்டிகளிலும் ஆஸி.,யை வீழ்த்த வேண்டும் என்று முனைப்புடன் இந்தியாவும், எப்படியும் இந்தப் போட்டியில் வென்று காட்டி, தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற வெறியுடன் ஆஸி., அணியும் நேற்று (செப். 28) நான்காவது ஒரு நாள் போட்டியில் களமிறங்கின. பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் போட்டி நடந்தது. உள்ளே - வெளியே: இந்திய அணியில் இதுவரை களமிறங்காத வீரர்களுக்கு வாய்ப்பு அள