Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

இந்தூர் டி20: ரோஹித் ஷர்மா அபார சதம்; இலங்கைக்கு தர்ம அடி; தொடரை வென்றது இந்தியா!

இந்தூரில் இன்று (டிசம்பர் 22, 2017) நடந்த இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை இந்திய வீரர்கள் துவம்சம் செய்தனர். அபாரமாக வெளுத்து வாங்கிய கேப்டன் ரோஹித் ஷர்மா, குறைந்த பந்துகளில் சதம் அடித்து புதிய சாதனை படைத்தார். அத்துடன் இந்திய அணி தொடரையும் வென்றது. 

இந்தியா – இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையே மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது. கட்டாக்கில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி, இலங்கையை 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.

இந்நிலையில் இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று நடந்தது. இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இலங்கை அணியில் விஸ்வ பெர்ணாண்டோ, சனாகா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, சதீரா சமரவிக்ரமா, சதுரங்கா டி சில்வா சேர்க்கப்பட்டனர்.

டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல் சிறப்பான துவக்கம் தந்தனர். நுவான் பிரதீப் பந்து வீச்சில் தலா ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்து ராகுல் அமர்க்களப்படுத்தினார். மற்றொரு முனையில் ரோஹித் ஷர்மா, தன் பங்குக்கு குணரத்னேயின் 9வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்கள், இரண்டு பவுண்டரிகள் விளாசினார்.

இந்தூர் மைதானம் அளவில் சிறியது என்பதால் ரோஹித் ஷர்மாவின் பேட்டில் பட்ட பந்துகள் பெரும்பாலும் பவுண்டரிகளாகவும், சிக்சர்களாகவும் பறந்து கொண்டிருந்தன. அவருடைய அதிரடி ஆட்டத்தில் மைதானமே ரசிகர்களின் ஆரவாரத்தால் அல்லோலகல்லோல பட்டது. இலங்கை அணி அதிகபட்சமாக 7 பந்துவீச்சாளர்கள் பயன்படுத்திப் பார்த்தும், இந்த கூட்டணியை உடைக்க முடியாமல் தடுமாறியது.

வாணவேடிக்கை நிகழ்த்திய கேப்டன் ரோஹித் ஷர்மா, 35 பந்துகளில் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் முதல் சதத்தைப் பதிவு செய்தார். இதற்குமுன், தென்னாப்பிரிக்கா வீரர் டேவிட் மில்லர் 35 பந்துகளில் சதம் அடித்ததே சாதனையாக இருந்தது. ரோஹித் ஷர்மா தனது சாதனையை டேவிட் மில்லருடன் பகிர்ந்து கெ £ண்டார். மேலும், ஒரு கேப்டனாக டி20 போட்டியில் இந்திய வீரர் அடிக்கும் முதல் சதம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில், 11 பவுண்டரிகளும், 8 சிக்சர்களும் அடங்கும்.

அதன்பின்னும் அவருடைய அதிரடி ஓயவில்லை. அதனால் ஒருநாள் போட்டியைப் போல் டி20 போட்டியிலும் இரட்டை சதம் அடிப்பார் என ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் எகிறியது. ஆனால் எதிர்பாராத விதமாக சமீரா பந்துவீச்சில் ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்தார். ரோஹித் ஷர்மா 43 பந்துகளில் 12 பவுண்டரிகள், 10 சி க்சர்களுடன் 118 ரன்கள் குவித்தார். பவுண்டரிகள், சிகர்கள் மூலம் மட்டுமே ரோஹித் ஷர்மா 108 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, முன்றாவது வரிசையில் களமிறங்கினார் விக்கெட் கீப்பர் டோனி. அவரும் தன் பங்குக்கு 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு முனையில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய லோகேஷ் ராகுல் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் 89 ரன்களில் (49 பந்துகள்) ஆட்டமிழந்தார். இந்த தொடரில் அவர் அடிக்கும் இரண்டாவது அரை சதம் இதுவாகும்.

ஹர்திக் பாண்ட்யா 10 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்ரேயாஸ் அய்யர் ‘டக்’ அவுட் ஆனார். மனீஷ் பாண்டே 1 ரன்னுடனும், தினேஷ் கார்த்திக் 5 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் இ ந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 261 ரன்கள் என்ற கடின இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. டிக்வெல்லா, உபுல் தரங்கா தொடக்க வீரர்களாக களமிறங்கினர். டிக்வெல்லா 25 ரன்களில் ஆட்டமிழந்தார். அபாரமாக ஆடிய உபுல் தரங்கா 47 ரன்களில் ஆ-ட்டமிழந்து, அரை சத வாய்ப்பை நழுவ விட்டார்.

மற்றொரு முனையில் அதிரடியாக விளையாடிய குசல் பெரேரா எதிர்பாராத விதமாக 77 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் களத்தில் நின்றவரை, இலங்கை அணிக்கும் வெற்றி வாய்ப்பு இருந்தது என்றே தே £ன்றியது. ஆனால் அவருடைய விக்கெட்டுக்குப் பிறகு இலங்கை வீரர்கள் களத்திற்கு வருவதும் பெவிலியன் திரும்புவதமாக இருந்தனர்.

இந்திய சுழல் பந்து வீச்சாளர்கள் யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் தொடர்ந்து தாக்குதல் நடத்தினர். ஒரு விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் என்ற வலுவான நிலையில் இருந்த இலங்கை அணி, அ டுத்த 27 ரன்களில் சீட்டுக்கட்டுபோல் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. அதாவது, கடைசி 14 பந்துகளில் அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது. தசைப்பிடிப்பால் காயம் அடைந்த ஏஞ்சலோ மாத்யூஸ், பேட்டிங் செய்ய வரவில்லை.

இதனால் அந்த அணி 17.2 ஓவர்களில் 172 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் யுஸ்வேந்திர சாஹல் 4 வி க்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதன்மூலம் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-0 கணக்கில் வென்றது. சதம் அடித்து அசத்திய கேப்டன் ரோஹித் ஷர்மா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி, வரும் 24ம் தேதி மும்பையில் நடக்கிறது.

அதிக வித்தியாசம்:

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி எதிரணியை அதிக ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்துவது இது மூன்றாவது நிகழ்வாகும். இதற்கு முன் கட்டாக்கில் நடந்த போட்டியில் இலங்கையை 93 ரன்கள் (2017) வித்தியாசத்திலும், இங்கிலாந்து அணியை (கொழும்பு, 2012) 90 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தியிருந்தது. இன்றைய போட்டியில் இலங்கையை 88 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளது.

சாஹல் அபாரம்:

நடப்பு ஆண்டில் 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா அதிகபட்சமாக 28 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதற்கு அடுத்து சுழல் பந்து வீச்சாளர் அஷ்வின் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் தலா 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

காதல் மனைவிக்கு பரிசு:

கேப்டன் ரோஹித் ஷர்மாவின் மனைவி ரித்திகா சாஜ்தே, கணவரின் அதிரடி ஆட்டத்தை நேரில் கண் டுகளித்தார். நேற்று முன்தினம் (டிசம்பர் 21) ரித்திகாவுக்கு பிறந்த நாள். சர்வதேச டி20 போட்டியில் ஒரு கேப்டனாக சதம் அடித்ததே, மனைவிக்கு அவர் கொடுத்திருக்கும் பிறந்தநாள் பரிசு என்று ரசிகர்கள் ட்விட்டரில் வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளனர்.

ரோஹித்துக்கு வாரண்ட்:

இன்றைய போட்டியில் இலங்கை அணி தோற்றுப்போகும் பட்சத்தில், அந்நாட்டு அரசாங்கம் ரோஹித் ஷர்மாவுக்கு கைது வாரண்ட் பிறப்பித்தாலும் ஆச்சரியம் இல்லை என்றும் ரசிகர்கள் ட்வீட் செய்துள்ளனர். அ ந்தளவுக்கு ஒரு நாள் போட்டியிலும் இலங்கை அணிக்கு எதிராக 208 ரன்களும், இருபது ஓவர் போட்டியில் சதமும் விளாசியதால் அதை கிண்டல் செய்து இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளனர்.