Friday, May 3மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

தமிழ்நாடு

‘அதிமுக குரங்கு’: – நடிகர் ட்வீட்!

‘அதிமுக குரங்கு’: – நடிகர் ட்வீட்!

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆளுங்கட்சியை சமீப காலமாக நடிகர் கமல்ஹாஸன் டிவிட்டர் பக்கத்தில் அடிக்கடி கடுமையாக விமர்சித்து வருகிறார். அவர், ''தமிழர்கள் தலையில் இப்போது கோமாளி குல்லா'' என்று டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். இபிஎஸ் - ஓபிஎஸ் அணிகள் இணைப்பை பற்றிதான் அவர் இவ்வாறு கேலி செய்திருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். கமல்ஹாஸனை பின்பற்றி நடிகர் கஸ்தூரி, ஸ்ரீபிரியா, பார்த்திபன் ஆகியோரும் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அரசியல் கருத்துகளை ரத்தினச்சுருக்கமாக நையண்டி செய்து வருவது அதிகரித்துள்ளது. இந்நிலையில் நடிகர் பார்த்திபன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒரு பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவருடைய டிவிட்டர் பக்கத்தில், ''கிளியை வளர்த்து யாரோ குரங்கு கையில் கொடுக்க - அந்த குரங்கை பிடித்து யாரோ மனிதன் கையில் கொடுக்க - அப்படி இன்றியமையா இணைப்பிற்குப் பின்!!!'' என்று ட்வீ
வைத்திலிங்கம் நீக்கம்: டிடிவி அதிரடி

வைத்திலிங்கம் நீக்கம்: டிடிவி அதிரடி

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் நேற்று ஒன்றாக இணைந்தது. இரு அணிகளும் இணைப்புக்குப் பின்னர் நேற்று மாலை ஊடகங்களிடம் பேசிய எம்பி வைத்திலிங்கம், அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்படுவார் என்று தெரிவித்தார். பொதுச்செயலாளரை நீக்கும் அதிகாரம் பொதுக்குழுவிற்குதான் உண்டு என்று அப்போதே வைத்திலிங்கம் கருத்துக்கு தினகரன் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், எடப்பாடி அணியில் உள்ள அமைச்சர் ஓஎஸ் மணியன், வைத்திலிங்கம் கூறியது அவருடைய தனிப்பட்ட கருத்து என்றும், சசிகலா தொடர்பாக யாரும் விவாதிக்கவில்லை என்றும் கூறினார். இந்நிலையில் அதிமுகவின் துணை பொதுச்செயலாளரான டிடிவி தினகரன் வைத்திலிங்கத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அறிவித்துள்ளார். சசிகலாவுக்கு எதிராக யார் பேசினாலும் அவர்கள் கட்சிய
‘எடப்பாடிய தூக்குங்க’; எம்எல்ஏக்கள் போர்க்கொடி!

‘எடப்பாடிய தூக்குங்க’; எம்எல்ஏக்கள் போர்க்கொடி!

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்துவிட்டோம்; அவரை மாற்ற வேண்டும் என்று டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் இன்று (22/8/17) ஆளுநர் (பொ) வித்யாசாகர் ராவிடம் கடிதம் கொடுத்துள்ளனர். அதிமுகவில் நீண்ட இழுபறிக்குப் பின்னர் ஒருவழியாக எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் நேற்று ஒன்றாக இணைந்தது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராக நியமிக்கப்பட்டார். அவருடைய அணியைச் சேர்ந்த மாஃபா க.பாண்டியாராஜனுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. சமீப காலமாக டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் இபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இரு அணிகளையும் கடுமையாக விமர்சித்து வந்தனர். நேற்று இரு அணிகளும் இணைக்கப்பட்டபோதும்கூட தினகரன் ஆதரவு தரப்பை, அவ்விரு தரப்புமே கண்டுகொள்ளவில்லை. இதனால் விரக்தி அடைந்த தினகரன் தரப்பினர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது வைத்திருந்த நம்பிக்க
துணை முதல்வரானார் ஓபிஎஸ்; செம்மலைக்கு இடமில்லை!

துணை முதல்வரானார் ஓபிஎஸ்; செம்மலைக்கு இடமில்லை!

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
அதிமுகவில் இரு அணிகளும் இணைந்ததை அடுத்து, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. அவருடைய அணியைச் சேர்ந்த 'மாஃபாய்' க.பாண்டியராஜனுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. செம்மலைக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா உடல் நலக்குறைவால் கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மரணம் அடைந்தார். அதையடுத்து, நிதி அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்றார். அதிமுகவுக்குள் சசிகலா குடும்பத்தினரின் தலையீடு காரணமாக அக்கட்சி பன்னீர்செல்வம் அணி, எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஓர் அணி என இரண்டு அணிகளாக உடைந்தன. இதற்கிடையே, டிடிவி தினகரன் சில எம்எல்ஏக்ளை வளைத்துப் போட்டுக்கொண்டு தனி அணியாக செயல்பட்டார். அவருடைய குடைச்சல் நாளுக்குநாள் அதிகரித்ததை அடுத்து, ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகள் இணைவது குறித்த பேச்சுவார்த்தை
ஓபிஎஸ் – இபிஎஸ் அணிகள் இணைந்தன!

ஓபிஎஸ் – இபிஎஸ் அணிகள் இணைந்தன!

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சென்னை : அதிமுகவில் இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வந்த எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் இன்று இணைந்தன. கட்சி அலுவலகத்திற்கு வந்த முதல்வர் பழனிசாமியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்து, அணிகள் இணைப்பை உறுதி செய்தனர். இருவரும் கைகுலுக்கி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். முதல்வர் பழனிசாமியைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்தார். முதல்வர் பதவியில் இருந்து விலகி பிறகு, 6 மாதங்களுக்கு பிறகு கட்சி அலுவலகத்திற்கு ஓபிஎஸ் வந்தார். முதல்வர் உடனான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, ஓபிஎஸ் வீட்டிற்கு சென்ற அமைச்சர் தங்கமணி, வேலுமணி மற்றும் எம்.பி., வைத்தியலிங்கம் அவரை கட்சி அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். கட்சி அலுவலகம் வந்த ஓபிஎஸ்.,க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, ஓபிஎஸ் ம
வளரத் துடிக்கும் கல்லுக்கட்டு மலைக்கிராம பள்ளி!

வளரத் துடிக்கும் கல்லுக்கட்டு மலைக்கிராம பள்ளி!

கல்வி, சேலம், முக்கிய செய்திகள்
''வாய்ப்பும், வசதியும் கிடைத்தால் உச்சம் தொடுவார்கள்'' தகவல் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கும் கல்லுக்கட்டு மலைக்கிராமப் பள்ளிக்கு போதிய தொழில்நுட்ப வசதிகள் கிடைத்தால், கல்வியில் உச்சம் தொடுவார்கள். சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில், மலைப்பகுதியில் அமைந்துள்ளது, கல்லுக்கட்டு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மொத்தமே 20 மாணவர்கள்தான் படிக்கின்றனர். இவர்களில் 7 பேர் பெண் குழந்தைகள். மலைக்கிராமங்களில் குறிப்பாக பழங்குடியினர் படிக்கும் பள்ளிகளில் பணியாற்றவே விருப்ப முன்னுரிமை தெரிவிக்காத இந்த நாளில், பழங்குடியின குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஆங்கில வாசிப்புப் பயிற்சி அளித்து வருகிறார், ஆசிரியர் நடராஜன். அவரை சந்திப்பதற்காக நாம் கல்லுக்கட்டு அரசுப்பள்ளிக்கு நேரில் சென்றிருந்தோம். பள்ளி வேலை தொடர்பாக அ
சேலத்தின் ஜோதிட கிராமம்…!

சேலத்தின் ஜோதிட கிராமம்…!

சேலம், முக்கிய செய்திகள், ராசிபலன்
''குலத்தொழிலை மறக்காத இளம் தலைமுறையினர்'' சேலத்திற்கென்று இருக்கும் சில தனித்த அடையாளங்களில், வீராணம் கிராமத்திற்கும் இடம் உண்டு. பழைய பேருந்து நிலையத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் இருக்கிறது வீராணம். இந்த ஊரில், சுமார் 25 குடும்பத்தினர் மூன்று தலைமுறைகளைக் கடந்தும் இன்றும் ஜோதிடத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுவாக ஒரே பொருளை விற்கும் கடைகள் அடுத்தடுத்து தொடர்ச்சியாக இருந்தாலே தொழில் போட்டி வந்து விடும் அல்லது வியாபாரம் படுத்து விடும். ஆனால் இங்குள்ள ஜோதிடர்களுக்கு அப்படி அல்ல. வீராணத்தில் அடுத்தடுத்து 'ஜோதிட நிலையம்' பெயர் பலகை இருப்பதைக் காண முடியும். வள்ளுவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பல தலைமுறை களாக ஜோதிடத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலும் ஒரே குடும்ப வகையறாவைச் சேர்ந்தவர்கள்தான் இங்கு வசிக்கின்றனர்.  சமீப காலங்களாக வேறு சமூகத்தைச் சேர்ந்த சிலரும் இப்பகுதிய
சேலம் வாலிபர் மீது தாக்குதல்; பணம், நகை பறிப்பு

சேலம் வாலிபர் மீது தாக்குதல்; பணம், நகை பறிப்பு

சேலம், முக்கிய செய்திகள்
சேலம்: சேலம் வாலிபரை சரமாரியாக தாக்கி, பணம், நகைகளை பறித்துச்சென்றதாக அரசு ஊழியர் மீது புகார் எழுந்துள்ளது. சேலம் ஆண்டாள் தெருவைச் சேர்ந்த சண்முகம் மகன் ராகேஷ் (37) (படம்). டெல்லியை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் தனியார் நிறுவனத்தில் தென்னிந்திய ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிறுவனம், விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சியும், பண்ணை அமைத்துக் கொடுக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. சேலம் கோரிமேட்டைச் சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கு ஏற்காடு முளுவி பகுதியில் சொந்தமாக தோட்டம் உள்ளது. இவருடைய தோட்டத்தில், கடந்த ஜூலை 23ம் தேதி தனியார் நிறுவனம் சார்பில் 245 தேனீ வளர்ப்பு பெட்டிகள் வைக்கப்பட்டன. இதன்மூலம் சேகரமாகும் தேனில் ஒரு பகுதியை நிலத்திற்குச் சொந்தமானவருக்கு வழங்கப்படும் என்ற ஒப்பந்த அடிப்படையில் தேனீ வளர்ப்புப் பெட்டிகள் வைக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த சில நா
டெங்கு காய்ச்சலுக்கு 250 பேர் பலி: தனியார் மருத்துவமனைகளுக்கு மிரட்டல்?

டெங்கு காய்ச்சலுக்கு 250 பேர் பலி: தனியார் மருத்துவமனைகளுக்கு மிரட்டல்?

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவும் வேகத்திற்கு இணையாக, முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் இல்லாததால், டெங்கு மரணங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. ஆனால், அரசு தரப்போ, டெங்கு மரணங்களை ஒட்டுமொத்தமாக மறைக்கும் முயற்சியில் கவனம் செலுத்தி வருகிறது. எப்படி பரவுகிறது?: 'ஏடிஸ்' என்ற ஒரு வகை பெண் கொசுக்கள் மனிதர்களைக் கடிப்பதன் மூலம் டெங்கு வைரஸ் உடலில் நுழைவதால், டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. இதில் டெங்கு 1, 2, 3, 4 என்று நான்கு வகைகள் உள்ளன. 3 மற்றும் 4ம் வகை டெங்கு காய்ச்சல் கொடூரமானது என்கிறது மருத்துவத்துறை. ஏடிஸ் வகை கொசுக்கள் பகலில் கடிக்கக் கூடியது. தேங்கியுள்ள சுத்தமான நீர் ஆதாரங்களில் இந்த கொசுக்கள் உற்பத்தி ஆகின்றன. மரணத்தை ஏற்படுத்தும்: டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவரின் உடல் ரத்தத்தில் உள்ள தட்டை அணுக்கள் (பிளேட்டிலெட்) எண்ணிக்கை வேகமாக குறையும். சராசரியாக ஒருவரது ரத்த
ஓராயிரம் வளர்மதிகள் வருவார்கள்!

ஓராயிரம் வளர்மதிகள் வருவார்கள்!

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
மக்களை நேசிக்கும் யார் ஒருவரும் ஒரு கட்டத்தில், ஆளும் வர்க்கத்தை எதிர்க்கத் துணிந்தவர்களாக மாறி விடுவதுதான் காலம் போட்டுக்கொடுத்திருக்கும் பாதை. தன் குடும்பம், குழந்தைகள் என்று வட்டத்திற்குள்ளேயே வாழ்வோருக்கு இது பொருந்தாது. மாறாக, மக்களைப் பற்றிய சிந்தனை யாரிடம் மேலோங்கி இருக்கிறதோ அவர்களே சாமானியர்களின் குரலாக ஒலிக்கத் தொடங்கி விடுகின்றனர். சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள பள்ளத்தானூரைச் சேர்ந்த மாதையன் மகள் வளர்மதி , பெரியார் பல்கலையில் எம்.ஏ., இதழியல் படித்து வந்தார். 'இயற்கை பாதுகாப்புக்குழு' அமைப்பின் பொறுப்பாளராக இயங்கி வந்த வளர்மதி, கடந்த மாதம் ஜூலை 12ம் தேதி, சேலம் அரசு மகளிர் கல்லூரி அருகே நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு துண்டு பிரசுரங்களை விநியோகித்தார். அரசுக்கு எதிராக மாணவிகளை தூண்டியதாக அவரை காவல்துறையினர் கைது செய்தனர். உளவுப்பிரிவு காவல் துறையினர