Saturday, April 27மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

முக்கிய செய்திகள்

அழகு சாதன கிரீம்களில் ஒளிந்திருக்கும் ஆபத்து! எச்சரிக்கிறார் மருத்துவர் மேஜர். ஆர்.கனகராஜ்

அழகு சாதன கிரீம்களில் ஒளிந்திருக்கும் ஆபத்து! எச்சரிக்கிறார் மருத்துவர் மேஜர். ஆர்.கனகராஜ்

அலோபதி, பெண்கள் நலம், மகளிர், மருத்துவம், முக்கிய செய்திகள்
ஆண்களோ, பெண்களோ தங்கள் முகத்தை அழகு படுத்திக்கொள்ள விரும்பாதவர்கள் யாருமே இல்லை. இந்த உளவியலைப் புரிந்து கொண்டதால்தான் பல நுகர்பொருள் நிறுவனங்கள், அழகு சாதன பொருட்களை சந்தையில் அள்ளிக் கொட்டி வருகின்றன. இந்தியாவில் மட்டும் அழகு சாதனப் பொருட்களின் சந்தை மதிப்பு ரூ.2 லட்சம் கோடியாக உள்ளது. ஆண்டுதோறும் 20 விழுக்காடு விற்பனை கூடியும் வருகிறது. ஆனால் சந்தையில் விற்கப்படும் சோப் முதல் முகத்திற்குப் போடும் கிரீம் வரை எதுவும் நம் முகத்திற்கு நிரந்தர அழகை தராது; மாறாக வேறு சில பக்க விளைவுகளை மட்டுமே உண்டாக்கும் என எச்சரிக்கிறார், சேலம் இரண்டாம் அக்ரஹாரத்தில் உள்ள டாக்டர் ராமு லைப் கேர் மருத்துவமனை தோல் நோய் மருத்துவர் மேஜர்.கனகராஜ். "அந்தப் பெண்ணிற்கு சுமார் 22 வயது இருக்கும். விடிந்தால் திருமண நிச்சயதார்த்தம். அந்த நிலையில் அந்தப்பெண், ஏதோ ஒரு அழகு ந
வெண்குஷ்டம் உள்ளவரும் மனிதரே…! “ஒதுக்குதல் வேண்டாம்” – மருத்துவர் மேஜர் ஆர்.கனகராஜ்

வெண்குஷ்டம் உள்ளவரும் மனிதரே…! “ஒதுக்குதல் வேண்டாம்” – மருத்துவர் மேஜர் ஆர்.கனகராஜ்

அலோபதி, சேலம், மருத்துவம், முக்கிய செய்திகள்
மனித உடலின் மிகப்பெரிய உறுப்பு, தோல். ஒருவருக்கு இயல்பான தோலின் நிறம் என்பது மரபியல் சார்ந்தே அமைகின்றன. அதேநேரம் தோல் நோய்கள் ஏற்பட்டால், அவை மனதையும் உளவியல் ரீதியாக தாக்குகின்றன. குறிப்பாக, தோல் நோய்களால் ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். தோலில் ஏற்படும் முக்கிய பிரச்னைகளில் ஒன்று, வெண்குஷ்டம் (Vitiligo). உலகளவில் 1 சதவீதம் பேருக்கு வெண்குஷ்டம் பிரச்னை உள்ளதாகச் சொல்கிறது ஓர் ஆய்வு. வெண்குஷ்டம் ஏன் ஏற்படுகிறது, கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விரிவாக சொல்கிறார், சேலம் இரண்டாம் அக்ரஹாரத்தில் உள்ள 'டாக்டர் ராமு லைஃப் கேர் மருத்துவமனை' தோல் சிகிச்சை மருத்துவர் மேஜர் ஆர்.கனகராஜ். இனி அவர்... ஒருவருடைய தோலில் வெண்குஷ்டம் உருவாவதற்கு குறிப்பிட்ட காரணங்கள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மரபணுக்கள் குறைபாடு அல்லது தோலுக்கு நிறம் தரக்கூடிய 'மெலனின்'