Tuesday, June 2மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

முக்கிய செய்திகள்

சேலம்: மாஸ்க் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம்! இன்று முதல் அமல்!!

சேலம்: மாஸ்க் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம்! இன்று முதல் அமல்!!

சேலம், முக்கிய செய்திகள்
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பொது இடங்களில் நடமாடுவோர் கண்டிப்பாக முகக்கவசம் (மாஸ்க்) அணியவேண்டும் என்றும், இல்லாவிட்டால் அந்த இடத்திலேயே 500 ரூபாய் உடனடி அபராதம் விதிக்கப்படும் என்றும் சேலம் மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்த புதிய உத்தரவு, வியாழன் (ஏப். 16) முதல் அமலுக்கு வருகிறது.   கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் ஒருபுறம் தீவிரமாக நடந்து வந்தாலும், இப்போதைக்கு தனிமைப்படுத்தலும், சமூக விலகல் மூலம் மட்டுமே வைரஸ் பரவலில் இருந்து ஓரளவு தற்காத்துக் கொள்ள முடியும் என்ற நிலை உள்ளது. இதற்காகவே நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக ஏப்ரல் 14 மாலை வரை அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, தற்போது மே 3ம் தேதி வரை இரண்டாம் கட்டமாக நீட்டிக்கப்பட்டு உள்ளது.   சேலம் மாவட்டத
ஊரடங்கு: கடும் உளவியல் சிக்கலில் பெண்கள்!

ஊரடங்கு: கடும் உளவியல் சிக்கலில் பெண்கள்!

உலகம், சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
கொரோனா வைரஸ், உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. கடந்த மூன்று மாதங்களாக உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் இந்த வைரஸ் எங்கிருந்து, எதிலிருந்து பரவியது என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. கொரோனாவுக்கு தடுப்பு மருந்துகளும் ஆராய்ச்சி அளவிலேயே இருக்கின்றன.   இன்றைய நிலையில், 211 நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளதாக சொல்கிறது உலக சுகாதார நிறுவனம். 2020 ஏப்ரல் 7ம் தேதி நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 12 லட்சத்து 14466 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 67 ஆயிரத்து 767 பேர் பலியாகி உள்ளனர். இத்தாலி, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகள் பெரும் இழப்பைச் சந்தித்து வருகின்றன. கொரோனா தாக்குதலில் இந்தியாவும் தப்பவில்லை. இங்கும் ஏப். 7ம் தேதி வரை 4281 பேருக்கு இத்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை, கொரோனாவால்
கொரோனா: வங்கிகள் கடன் வசூலிக்க தடை!

கொரோனா: வங்கிகள் கடன் வசூலிக்க தடை!

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், மறு உத்தரவு வரும் வரை வங்கிகள், நிதி நிறுவனங்கள், சுய உதவிக்குழு நிறுவனங்கள் உறுப்பினர்கள், வாடிக்கையாளர்களிடம் இருந்து கடன் அசல், வட்டி வசூலிக்கக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.   கோரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுக்க தீவிர நடவடிக்கைகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. இதற்கென பொது மக்களின் நன்மை கருதி, குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144ன் படி, ஊரடங்கு உத்தரவு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது. இந்த உத்தரவுகளை அனைத்து மாவட்டங்களிலும் முறையாக நடைமுறைப்படுத்திட உத்தரவுகள் வழங்கப்பட்டன. இதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள், பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர்கள் ஆகிய
கொரோனா அச்சம்! தேனிலவு ஜோடிக்கு வந்த சோதனை!!

கொரோனா அச்சம்! தேனிலவு ஜோடிக்கு வந்த சோதனை!!

சேலம், முக்கிய செய்திகள்
கொரோனா வைரஸ் தொற்று பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், ஒட்டுமொத்த சமூகத்தின் அன்றாட நடவடிக்கைகளையும் முடக்கிப் போட்டுள்ளது. இதுவரை கோவிட்-19 தொற்றுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், சமூக விலக்கல் மட்டுமே ஆகச்சிறந்த தடுப்பு அரண் என்கிறது மக்கள் நல்வாழ்த்துறை. மார்ச் 24ம் தேதி மாலை முதல் தொடர்ந்து 21 நாள்களுக்கு 144 தடை உத்தரவு நாடெங்கும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், வெளிநாடு சென்று ஊர் திரும்பியவர்கள் மூலமாக கோவிட்-19 தொற்று பரவ கூடுதல் வாய்ப்பு உள்ளதால், அவர்களைப் பற்றிய தகவல்களை உடனடியாக தெரிவிக்கும்படி சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் உத்தரவிட்டுள்ளார். மூன்றாம் நபர் சொல்வதற்கு முன், சம்பந்தப்பட்ட நபர்களே இதுகுறித்த தகவல்களை தெரிவித்து, மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளனர். ஆனால
கொரோனா எச்சரிக்கை: 144 தடை உத்தரவு அமல்; கும்பலாக கூடினால் கைது!

கொரோனா எச்சரிக்கை: 144 தடை உத்தரவு அமல்; கும்பலாக கூடினால் கைது!

சேலம், முக்கிய செய்திகள்
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) மாலை 6 மணி முதல் வரும் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தடை உத்தரவு அமலில் உள்ள காலத்தில், கும்பலாக நடமாடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் எச்சரித்துள்ளார். சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் கூறியுள்ளதாவது:   கொரோனா-19 வைரஸ் தொற்று நோய் சேலம் மாவட்டத்தில் பரவுவதை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973, பிரிவு 144ன் கீழ் சேலம் மாவட்டம் முழுவதும் தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிடப்பட்டு உள்ளது. இத்தடை உத்தரவு, மார்ச் 24 மாலை 6 மணி முதல் வரும் 31ம் தேதி நள்ளிரவு வரை 7 நாள்களுக்கு நடைமுறையில் இருக்கும் எனவும் உத்தரவிடப்படுகிறது. இத்தடைக் காலத்தில், பொதுமக்கள் ஒன்றாக 5 அல்லது அத
ஒற்றை சாக்கு மூட்டையும் ஒரு கிரவுண்டு நிலமும்! அடமானம் வைக்கப்பட்ட பெண் ஊரின் அடையாளமானார்!!

ஒற்றை சாக்கு மூட்டையும் ஒரு கிரவுண்டு நிலமும்! அடமானம் வைக்கப்பட்ட பெண் ஊரின் அடையாளமானார்!!

சேலம், மகளிர், முக்கிய செய்திகள்
சேலம் மாவட்டம் புத்தூர் அக்ரஹாரம் சந்தனக்காரன் காடு பகுதியில், 'செட்டியாரம்மா' என்றால் சின்ன குழந்தைகளும் சொல்லி விடும். ஆமாம். பண்ணாரியம்மன் களஞ்சியம் குழுவின் மூத்த உறுப்பினரான ஜெயந்தியை (50) அப்பகுதியில் 'செட்டியாரம்மா' என்றே அழைக்கிறார்கள். சத்தியமங்கலத்தில் இருந்து மூட்டை முடிச்சுகளுடன் பிழைப்புத்தேடி கைக்குழந்தைகளுடன் சேலம் வந்த அவர், சந்தனக்காரன்காடு கிராமத்தின் அடையாளமாக வளர்ந்திருக்கிறார். அந்தளவுக்கு அவர் எட்டிப்பிடித்த உயரங்கள் அளப்பரியது.   ''தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்து சோர்விலாள் பெண்'' என்ற அய்யன் வள்ளுவன் வாக்கிற்கு ஏற்ப, தன்னையும் உயர்த்திக்கொண்டு கரம் பற்றிய கணவரையும், பெற்றெடுத்த பிள்ளைகளையும் கரை சேர்த்திருக்கிறார் ஜெயந்தி. பண்ணாரியம்மன் களஞ்சியம் மகளிர் குழுவில் பதினைந்து ஆண்டுகளுக்கும் மே
தொல்காப்பியப் பெயர்த்தி – கவிதை நூல் விமர்சனம்! சாதி வெறியர்களுக்கு இன்னொரு சாட்டையடி!!

தொல்காப்பியப் பெயர்த்தி – கவிதை நூல் விமர்சனம்! சாதி வெறியர்களுக்கு இன்னொரு சாட்டையடி!!

இலக்கியம், புத்தகம், முக்கிய செய்திகள்
பூ-வ-ன-ம்   'தொல்காப்பியப் பெயர்த்தி' என்ற பெயரில் விரைவில் கவிதை நூல் வெளியிட இருப்பதாக இந்நூலாசிரியர் மழயிசை ஒருநாள் எனக்கு குறுந்தகவல் அனுப்பி இருந்தார். அப்போதுமுதல், அவரைவிடவும் இந்த நூலுக்காக பேரார்வத்துடன் காத்திருந்தேன். எனக்குத் தொல்காப்பியம் பிடிக்கும் என்பது மாத்திரமல்ல; வேறு இரண்டு காரணங்களும் இருந்தன. ஒன்று, தொல்காப்பியரின் பெயர்த்தி என்று சொல்லிக்கொள்ளும் அசாத்திய துணிச்சலும் ஒருவருக்கு இருக்கிறதா? என்ற வியப்பு; அடுத்து, மழயிசை என்ற நூலாசிரியரின் புனைப்பெயர். இரண்டு தனித்துவ அடையாளங்களும் எதிர்பார்ப்பை உண்டாக்கின. நூலின் தலைப்பிற்கேற்றவாறு தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, நவீனத்தையும் இணைத்து நிகழ்கால சமூக அவலங்களை சாடியிருக்கிறார் மழயிசை. எல்லா புதுமுக படைப்பாளிகளும் பேசுகிற பாடுபொருள்களைத்தான் இந்நூலாசிரியரும் பேசுகிறார் என்
எல்எஸ்டி எனும் எமன்! மாணவர்களை சீரழிக்கும் புதுவித போதை!!

எல்எஸ்டி எனும் எமன்! மாணவர்களை சீரழிக்கும் புதுவித போதை!!

குற்றம், சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
மெட்ரோ நகரங்களில் மேல்வர்க்கத்து இளைஞர்கள், கல்லூரி மாணவர்களிடையே பரவி வரும் புதுவித போதை கலாச்சாரம், தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்திலும் எட்டிப்பார்க்கத் தொடங்கி இருப்பது, காவல்துறைக்கு கூடுதல் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.   சேலம் மண்டல போதைப்பொருள் தடுப்புப்பிரிவு டிஎஸ்பி திருநாவுக்கரசுவுக்குக் கிடைத்த ரகசிய தகவலின்பேரில், ஆய்வாளர் அம்பிகா தலைமையில் காவலர்கள் தர்மபுரி மாவட்ட எல்லையான தொப்பூர் சுங்கச்சாவடி அருகே, அண்மையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். சந்தேகத்தின்பேரில், மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்களை தடுத்து, அவர்களிடம் பையை சோதனை செய்தபோது 2.60 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. ஒரு இளைஞரின் பேன்ட் பாக்கெட்டில் உள்ள பொருள்களை எடுத்து சோதித்தபோது, அதில் தபால்தலை வடிவத்தில் உள்ளங்கை அளவிலான ஒரு அட்டையைக்
ஜிப்ஸி – சினிமா விமர்சனம்! ”மனிதனாக வாழ மதம் அவசியமா?”

ஜிப்ஸி – சினிமா விமர்சனம்! ”மனிதனாக வாழ மதம் அவசியமா?”

சினிமா, முக்கிய செய்திகள்
'குக்கூ', 'ஜோக்கர்' படங்களின் வாயிலாக கவனம் ஈர்த்த ராஜூ முருகன் இயக்கத்தில், மார்ச் 6ம் தேதி வெளியாகி இருக்கிறது, 'ஜிப்ஸி'. தாய், தந்தையை இழந்த, நாடு முழுவதும் சுற்றி வரும் ஒரு நாடோடிக்கும், இஸ்லாமிய பழமைவாதங்களில் ஊறிப்போயிருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்குமான காதலையும், எதிர்பாராத மதக்கலவரத்தில் அவர்களின் வாழ்வில் ஏற்பட்ட விளைவுகளையும் பேசுகிறது, ஜிப்ஸி. சபாஷ் ராஜூ முருகன்!   கடந்த 2002ல் நடந்த குஜராத் கலவரத்தில், உயிரைக் காப்பாற்றிக்கொள்ள போராடும் ஏதுமற்ற ஒரு சாமானியனின் பீதியடைந்த முகமும், அருகே கொலைவெறியுடன் கையில் வாளேந்தி நிற்கும் ஓர் இந்து பயங்கரவாதியின் படமும் அன்றைய காலக்கட்டத்தில் பத்திரிகைகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோன்ற காட்சியை, சமகால பிரச்னைகளுடன் கோத்து, கதை சொன்ன விதத்தில் ராஜூமுருகனின் சமூகப்
மாணவனின் சொந்த கருத்திற்கும் மதிப்பெண் உண்டு! பிளஸ்-2 தமிழ் வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றம்!

மாணவனின் சொந்த கருத்திற்கும் மதிப்பெண் உண்டு! பிளஸ்-2 தமிழ் வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றம்!

கல்வி, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பிளஸ்-2 பொதுத்தேர்வில், மாணவர்கள் பாடப்புத்தகத்தின் துணையின்றி தானாகவே சிந்தித்து எழுதும் வகையில் வினாத்தாள் வடிவமைக்கப்பட்டு இருந்தது, கல்வியாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறையில் நடப்புக் கல்வி ஆண்டில் (2019-2020) பிளஸ்-2 வகுப்பிற்கு புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதற்காக, முன்னாள் பள்ளிக்கல்வித்துறை செயலர் உதயசந்திரன் தலைமையில் புதிய பாடங்களை எழுதுவதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டது. இக்குழு, மெதுவாக கற்கும் மாணவர்கள் முதல் அதிபுத்திசாலி மாணவர்கள் வரை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு ஏற்றபடி புதிய பாடங்களை வடிவமைத்தது.   இந்த மாற்றமானது, மார்ச் 2ம் தேதி நடந்து முடிந்த பிளஸ்-2 பொதுத்தேர்வு தமிழ் வினாத்தாள் வடிவமைப்பிலும் எதிரொலித்தது. அதாவது, எல்லா வினாக்களுக்கும் பாடப்புத்தகத்தின் துணை கொண்டு விடை அளிக்க வேண்டிய தேவை இருக