Thursday, December 5மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: wedding ceremony

நடிகை ஸ்ரீதேவி திடீர் மரணம்;  துபாயில் உயிர் பிரிந்தது

நடிகை ஸ்ரீதேவி திடீர் மரணம்; துபாயில் உயிர் பிரிந்தது

இந்தியா, சினிமா, முக்கிய செய்திகள்
பிரபல நடிகை ஸ்ரீதேவி, துபாயில் உறவினர் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்ளச் சென்றிருந்தபோது மாரடைப்பால் திடீரென்று காலமானார். அவருக்கு வயது 55. விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 1963ம் ஆண்டு பிறந்தார் ஸ்ரீதேவி. நான்கு வயதாக இருக்கும்போதே தமிழில் வெளியான 'துணைவன்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக திரைப்பயணத்தை தொடங்கினார். பத்துக்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே நடித்தவர், தனது பதினான்காவது வயதில் கே.பாலசந்தர் இயக்கிய 'மூன்று முடிச்சு' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். கமல்ஹாசன், ரஜினிகாந்த் என தமிழகத்தின் உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்து, ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த ஸ்ரீதேவி, தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிப் படங்களிலும் நடித்தார். பின்னர் பாலிவுட்டில் தடம் பதித்த அவர், இந்தியாவின் கனவுக்கன்னியாக உருவெடுத்தார். அதன்பிறகு பாலிவுட் சினிமா தயாரிப்ப...
பணமதிப்பிழப்பு: காவிகளின் பெரும் தோல்வி

பணமதிப்பிழப்பு: காவிகளின் பெரும் தோல்வி

அரசியல், இந்தியா, உலகம், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், வர்த்தகம்
கருப்பு பணம் - ஊழல் ஒழிப்பு கோஷங்களை, தேர்தல் சுலோகமாக பயன்படுத்தி, அரியணையேறிய மோடி உள்ளிட்ட காவி கும்பலின், பணமதிப்பிழப்பு நடவடிக்கை பெரும் சறுக்கலை சந்தித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி இரவு, பிரதமர் நரேந்திர மோடி டிவியில் தோன்றி, அதுவரை புழக்கத்தில் இருந்து வந்த ரூ.1000, ரூ.500 பணத்தாள்கள் இனி செல்லாது என்று ஓர் அறிவிப்பை திடீரென்று வெளியிட்டார். இந்திய தேசத்தின் மீது இந்திய அரசாங்கமே நடத்தியிராத மிகப்பெரும் தாக்குதல் அது. மோடியின் பாணியில் சொல்வதென்றால் சொந்த நாட்டினர் மீதான 'சர்ஜிகல் ஸ்டிரைக்'. இந்த அறிவிப்பினால் சாமானியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அடுக்களையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒளித்து வைத்திருக்கும் 1000, 500 பணத்தாள்களை உடனடியாக மாற்றியாக வேண்டுமே. அவர்களின் கவலை அவர்களுக்கு. அடுத்த நாளே வங்கிகளில் தங்களிடம் உள்ள உயர்மதிப்பு பணத்தாள்களை டெபாசிட்...