Wednesday, December 4மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: water

நீயும் நானும் செம்மண்ணில் கலந்த நீர் போல…!

நீயும் நானும் செம்மண்ணில் கலந்த நீர் போல…!

இலக்கியம், முக்கிய செய்திகள்
காதலிப்பதும் காதலிக்கப்படுவதும் மானுடப் பிறவிக்கு மட்டுமேயானது. காதலில் விழுந்தோர்க்கு வெற்றி, தோல்வி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் காதல் மட்டும் தோற்பதில்லை. இப்பிறவியில் காதல் அனுபவங்கள் இல்லாதவர்கள், எத்தகைய சுகபோகங்களை பெற்றவராக இருந்தாலும் கூட, ஒரு வகையில் குறை உடையவர்களாகவே கருதுகிறேன். காதலே தலைமை இன்பம் என்கிறான் பாரதி. காதலிப்போருக்கு மரணம் பொய்யாகும்; கவலைகள் போகும்; ஆதலினால் காதல் செய்வீர், உலகத்தீரே! என்று அறைகூவல் விடுக்கின்றான்.   மார்க்ஸ் - ஜென்னியின் காதல் பேசப்பட்ட அளவுக்கு, செல்லம்மா மீது பாரதி கொண்ட அளப்பரிய காதல் பேசப்படவில்லை.   நாமும் இப்போது பாரதியைப் பற்றி பேச வரவில்லை. 'இலக்கியம் பேசுவோம்' பகுதியில் மீண்டும் சங்க இலக்கியமான குறுந்தொகையில் இருந்து இன்னொரு காதல் பாடலைப் பற்றி பேசுவோ...
அறம் – சினிமா விமர்சனம்;  ‘துகிலுறியப்படும்  அதிகாரவர்க்கம்!’

அறம் – சினிமா விமர்சனம்; ‘துகிலுறியப்படும் அதிகாரவர்க்கம்!’

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழில் எப்போதேனும் மிக அரிதான தருணங்களில் மட்டுமே குரலற்றவர்களின் குரலை, எந்த வித சமரசமுமின்றி திரைப்படமாக எடுக்கப்படுவதுண்டு. 'தண்ணீர் தண்ணீர்', 'ஜோக்கர்' போன்ற படங்களை உதாரணங்களாகச் சொல்லலாம். அந்த வகைமையிலான படம்தான், அறம். இந்தப் படத்திற்கு இதைவிட பொருத்தமான தலைப்பு வேறொன்றைச் சூட்டிவிட முடியாது. அண்மைக் காலங்களாக நயன்தாரா, நாயகி பிம்பத்தை தூக்கிப்பிடிக்கும் பாத்திரங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். அவருடைய ஒட்டுமொத்த சினிமா கேரியரில் இந்தப்படம் மறக்க முடியாததாக இருக்கும். நயன்தாராவைத் தவிர ஆட்சியர் பாத்திரத்திற்கு வேறு நாயகிகள் பொருந்துவார்களா என்பதும் கேள்விக்குறிதான். ஆட்சியருக்கான மிடுக்கு, கோபம், ஒடுக்கப்பட்டவர்கள் மீதான பரிவு என நவரசங்களையும் வெளிப்படுத்துகிறார். அவருடைய உடல்மொழி ரொம்பவே ரசிக்க வைக்கிறது. படம் முழுக்க அவருக்கு இரண்டே இரண்டு புடவைகளில்தான் வருகிறார...
பூவனம்: நீரில் ஆடும் நிலா (கவிதை)

பூவனம்: நீரில் ஆடும் நிலா (கவிதை)

இலக்கியம், திண்டுக்கல், புத்தகம், மதுரை
நீரில் ஆடும் நிலா...!  திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த கவிஞர் பெ.அறிவுடைநம்பி எழுதி இருக்கிறார். தமிழக அரசின் கதர் வாரியத்தில் பணியாற்றி, ஓய்வுபெற்றவர். பல்வேறு சிற்றிதழ்களிலும் இவருடைய படைப்புகள் வெளியாகி உள்ளன. கவிஞர் மு.மேத்தாவின் முன்னுரையுடன், திண்டுக்கல் அய்யனார் பதிப்பகம் நூலை வெளியிட்டு உள்ளது. நூலில் இருந்து... கீழே விழுவது புவி ஈர்ப்பு மேலே எழுவது விலைவாசி அது நியூட்டன் விதி இது அரசியல் சதி என நையாண்டி செய்கிறார். ஒவ்வொருமுறை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயரும்போதும் நாட்டில் விலைவாசியும் உயர்ந்து விடுகிறது என்பதை அனுபவ ரீதியாக அறிந்தவர்தானே நம் கவிஞர். மற்றொரு இடத்தில், தீச்சட்டி எடுப்போம் பேருந்தையும் உடைப்போம் இது நேர்த்திக்கடன்! என்று சமீபத்திய தமிழக அரசியல் நிகழ்வுகளை பகடி செய்கிறார். இதைவிட கவிஞரின் இன்னொரு நுட்பமான பதிவு, ந...