Monday, April 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: verdict

தமிழக ஆளுநர் பொறுப்பில் இருந்து வித்யாசாகர் ராவ் விடுவிக்கப்பட்டது ஏன்?; பரபரப்பு தகவல்கள்

தமிழக ஆளுநர் பொறுப்பில் இருந்து வித்யாசாகர் ராவ் விடுவிக்கப்பட்டது ஏன்?; பரபரப்பு தகவல்கள்

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழகத்தில் கிட்டத்தட்ட ஓராண்டாக பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் விடுவிக்கப்பட்டதன் பின்னணி குறித்து பரபரப்பு தகவல்கள் உலா வருகின்றன. தமிழக ஆளுநராக இருந்த ரோசய்யா கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற்றார். அதையடுத்து, புதிய ஆளுநர் நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மஹாராஷ்டிரா மாநில ஆளுநரான வித்யாசாகர் ராவ், தமி-ழக பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஜெயலலிதா உடல்நலக்குறைவு, அவருடைய மரணம், ஆளுங்கட்சியில் பிளவு போன்ற அரசியல் பரபரப்பு நிலவிய காலங்களில் நேரடி ஆளுநர் இருந்திருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை முன்னெப்போதும் இல்லாத நடைமுறையை நடுவண் பாஜக அரசு மேற்கொண்டது. ஒருகட்டத்தில், முதல்வர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் விலக்கப்பட்டு, வி.கே.சசிகலா பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது அவரை முதல்வராக பதவியேற்க ஆளுநர் முறைப்படி அழ
குர்மீத் ராமுக்கு 20 ஆண்டு சிறை

குர்மீத் ராமுக்கு 20 ஆண்டு சிறை

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள்
பாலியல் வன்புணர்வு வழக்கில், தேரா சச்சா சவுதா ஆன்மீக அமைப்பின் தலைவரான குர்மீத் ராம் சிங்குக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் பாபா குர்மீத் ராம் ரஹீம் சிங், இரண்டு பெண் பக்தர்களை பாலியல் வன்புணர்வு செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கடந்த 2002ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. கடந்த 25ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது, குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டது. தண்டனை விவரங்கள் 28ம் தேதி (இன்று) கூறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் மாநிலங்களில் தேரா சச்சா சவுதா ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இரண்டு நாட்கள் நீடித்த இந்த கலவரத்தில் மொத்தம் 38 பேர் ப
அந்தரங்கத்தை உளவு பார்க்கக் கூடாது : ஆதார் வழக்கில் ‘குட்டு’

அந்தரங்கத்தை உளவு பார்க்கக் கூடாது : ஆதார் வழக்கில் ‘குட்டு’

இந்தியா, முக்கிய செய்திகள்
புது டில்லி: தொழில்நுட்பம் என்ற பெயரில் பிறரின் அந்தரங்கத்தை உளவு பார்ப்பது, மாண்பை குலைக்கும்  செயல் என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு குட்டு வைத்துள்ளது. ஆதார் அடையாள அட்டையை அரசு சேவைகளுக்கு கட்டாயமாக்குவது தனிப்பட்ட உரிமையை மீறும் செயல் என்ற வழக்கை 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சு விசாரித்தது. அந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியது. அந்தரங்க உரிமை என்பது அரசியல் சாசனத்தில் கூறியுள்ளபடி அடிப்படை உரிமைதான் என்று இந்த பெஞ்ச் அதிரடி தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பின் முக்கிய அம்சம்: ஒருவர், தனது வீட்டுக்குள் யாரை அனுமதிக்க வேண்டும் என்பது அவரது உரிமை. அவருடைய வீட்டில் ஒருவரை அனுமதித்தால், அனைவரையும் அனுமதிக்க வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது. வீட்டுக்குள் யார் வரவேண்டும் என்பது அவருடைய தனிப்பட்ட உரிமை. ஒரு வீட்டில் அந்தரங்கம் என்பது பாதுகாக்கப்பட வேண்டிய அம்சம். அதுதா