Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: technology

முக அடையாளம் தொழில்நுட்பத்துடன் வெளியாகியுள்ள ஆப்பிள் ஐஃபோன் எக்ஸ்!

முக அடையாளம் தொழில்நுட்பத்துடன் வெளியாகியுள்ள ஆப்பிள் ஐஃபோன் எக்ஸ்!

உலகம், தொழில்நுட்பம், முக்கிய செய்திகள், வர்த்தகம்
ஸ்மார்ட் ஃபோன் வரிசையில் இதுவரை இல்லாத வகையில் 'எட்ஜ் டூ எட்ஜ்' திரைவசதி மற்றும் முகப்பு (HOME) பட்டனே இல்லாத உயர்தொழில் நுட்ப அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட் ஃபோனை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. புதிய பிராண்டின் பெயர் ஐபோன் எக்ஸ். என்னென்ன வசதிகள்?: செல்போன் உரிமையாளரை வழக்கமாக அவரின் விரல் ரேகை பதிவு மூலம் சரிபார்க்க முடியும். ஆனால் ஐபோன் எக்ஸ் (iPHONE X) அப்படி அல்ல. விரல் ரேகைக்கு பதிலாக, முக அடையாளத்தை பதிவு செய்யும் வகையில் இதன் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு, Face ID (ஃபேஸ் ஐடி) என்று பெயரிட்டுள்ளது ஆப்பிள் நிறுவனம். வெளிச்சமே இல்லாத இருட்டுப் பகுதிக்குள் எப்படி இந்த தொழில்நுட்பம் வேலை செய்யும் என்று கவலைப்பட வேண்டாம். கும்மிருட்டுப் பகுதியிலும், 30,000 இன்ஃப்ராரெட் புள்ளிகளை உருவாக்கி, அதன் மூலம் பயனரை சரிபார்க்கும் திறனும் இந்த செல்போனில் உள்ளது. இது பழை
ரஜினியின் ‘வாய்ஸ்’ எங்கே?: நெட்டிஸன்கள் கேள்வி

ரஜினியின் ‘வாய்ஸ்’ எங்கே?: நெட்டிஸன்கள் கேள்வி

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
நதிகள் இணைப்புக்காக வீடியோவில் குரல் கொடுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நீட் தேர்வு, நெடுவாசல் பிரச்னைகளுக்கு ஏன் குரல் கொடுப்பதில்லை? என்று சமூகவலைத்தளங்களில் இணையவாசிகள் கேள்விகளால் துளைத்தெடுத்துள்ளனர். தமிழக அரசியல் களத்தை ஜெயலலிதாவுக்கு முன், ஜெயலலிதாவுக்குப் பின் என்று இரண்டு காலக்கட்டங்களாக பார்க்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். மக்களிடம் மிகப்பெரிய ஆளுமையாக விளங்கிய எம்ஜிஆர் மறைந்தபோதுகூட, அடுத்தது யார்? என்பதில் நீண்ட குழப்பங்கள் ஏற்படவில்லை. வி.என்.ஜானகியை ஆதரித்தவர்கள்கூட விரைவிலேயே ஜெயலலிதா அணியில் இணைந்து கொண்டனர். இப்போதைய நிலை அப்படி இல்லை. அடுத்து யாரெல்லாம் அரசியல் களத்திற்கு வரலாம் என்ற பட்டியல் போட்டால் அதிலும் சினிமாக்காரர்களே முதல் வரிசையை ஆக்கிரமித்துக் கொள்கின்றனர். ரஜினி, கமல், விஜய், விஷால், சூர்யா இப்படி நீள்கிறது பட்டியல். 100 படங்களைக் கடந்த முன்னணி
அந்தரங்கத்தை உளவு பார்க்கக் கூடாது : ஆதார் வழக்கில் ‘குட்டு’

அந்தரங்கத்தை உளவு பார்க்கக் கூடாது : ஆதார் வழக்கில் ‘குட்டு’

இந்தியா, முக்கிய செய்திகள்
புது டில்லி: தொழில்நுட்பம் என்ற பெயரில் பிறரின் அந்தரங்கத்தை உளவு பார்ப்பது, மாண்பை குலைக்கும்  செயல் என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு குட்டு வைத்துள்ளது. ஆதார் அடையாள அட்டையை அரசு சேவைகளுக்கு கட்டாயமாக்குவது தனிப்பட்ட உரிமையை மீறும் செயல் என்ற வழக்கை 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சு விசாரித்தது. அந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியது. அந்தரங்க உரிமை என்பது அரசியல் சாசனத்தில் கூறியுள்ளபடி அடிப்படை உரிமைதான் என்று இந்த பெஞ்ச் அதிரடி தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பின் முக்கிய அம்சம்: ஒருவர், தனது வீட்டுக்குள் யாரை அனுமதிக்க வேண்டும் என்பது அவரது உரிமை. அவருடைய வீட்டில் ஒருவரை அனுமதித்தால், அனைவரையும் அனுமதிக்க வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது. வீட்டுக்குள் யார் வரவேண்டும் என்பது அவருடைய தனிப்பட்ட உரிமை. ஒரு வீட்டில் அந்தரங்கம் என்பது பாதுகாக்கப்பட வேண்டிய அம்சம். அதுதா