விஜய்யின் இருவேறு முகம்; ஆளுநர் உரையில் அம்பலம்!
தவெக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் வியாழக்கிழமை (ஜூன் 18) தொடங்கியது. கடந்த திமுக ஆட்சியின்போது ஆளுநருக்கும், அரசுக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்த நிலையில், இன்று அத்தகைய மோதல் போக்கு இல்லாமல் சுமூகமாக அவை நடந்தது.
ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் வாசித்த உரையில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள்:
தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை ஏற்கப்படாது. இரு மொழி கொள்கையே தொடரும்.
தமிழகத்திற்கான உரிய நிதிப்பகிர்வை பெறுவது ஒன்றிய அரசிடம் உறுதி செய்யப்படும். நிதிப்பகிர்வில் உள்ள பாரபட்ச நடவடிக்கைகள் குறித்து அறிக்கை வெளியிடப்படும்.
வருவாய் வரவுகளில் உள்ள இழப்புகள், அரசுச் செலவினங்களில் ஏற்படும் இழப்புகளையும் சரி செய்த பிறகு, மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளும் முழுமையாக நிறைவேற்றப்படும்.
தேசிய கல்விக்கொள்கை 2020ஐ இந்த அரசு கடுமையாக எதிர்க்கும். மும்மொழிக் கொள்கையை கடைப்பிட...









