Saturday, February 8மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: tamil development

வினாடி? விநாடி? எது சரி? தமிழ் வளர்ச்சித்துறை விழித்தெழுமா?

வினாடி? விநாடி? எது சரி? தமிழ் வளர்ச்சித்துறை விழித்தெழுமா?

சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பள்ளி, கல்லூரிகள் மட்டுமின்றி ஊடகங்களிலும் 'வினாடி-வினா' போட்டிகள் நடத்தப்படுவது நீண்டகாலமாக இருந்து வருகிறது. கேட்கப்படும் வினாவுக்கு நொடிப்பொழுதில் விடை அளிக்க வேண்டும் என்பதால்தான் இத்தகைய நிகழ்ச்சிக்கு விநாடி - வினா என்று பெயர் வந்தது. இப்போது பிரச்சினை அதுவன்று. வினாடி, விநாடி ஆகியவற்றில் எந்த சொல் சரியானது என்பதுதான். வினாடி என்ற சொல்லைவி+னாடி என்றும்;விநாடி என்ற சொல்லைவி+நாடி என்றும் பிரித்து எழுதலாம். இவற்றில், 'னாடி' என்றால்எந்தப் பொருளும் தராது. 'நாடி' என்பது ஒரு வினையைக் குறிக்கும். நாடிச்செல்வது என்றும் பொருள் கொள்ளலாம். நாடித்துடிப்பையும் குறிக்கும். விநாடியில் உள்ள 'வி' என்ற முன்னொட்டானது விசை, விரைதல், சிறந்த, உயர்வான என பல பொருள்கள் தருகின்றன. விரைந்து நாடுதல் எனலாம். நொடியின் அடிப்படையில்உருவானச் சொல்தான் விநாடி.விரைந்து துடிப்பதுதான் நாடி.நாடியின் கால ...
நகர்ப்புறம்? நகர்ப்புரம்? எது சரி?; முதல்வர் விழாவில் தமிழுக்கு வந்த சோதனை!

நகர்ப்புறம்? நகர்ப்புரம்? எது சரி?; முதல்வர் விழாவில் தமிழுக்கு வந்த சோதனை!

சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், டிச. 11ம் தேதி, சேலத்தில் நடந்த அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, 31 ஆயிரம் பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அன்றைய தினமே, சேலம் மாவட்டத்தில் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட உள்ள 1242 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களையும் அறிவித்து, மாங்கனி மாவட்ட மக்களை திக்குமுக்காடச் செய்தார்.   அதே விழாவில், மாநில அளவில் 300 கோடி ரூபாயில் நமக்கு நாமே திட்டத்தையும், 100 கோடி ரூபாயில் நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தையும் தொடங்கி வைத்தார். தாரை தப்பட்டை, நாட்டுப்புறக் கலைகள் என முதல்வருக்கு மிக பிரம்மாண்டமான வரவேற்பும் களைகட்டின. நடந்த வரை எல்லாமே சிறப்புதான் என்றாலும், விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த நிகழ்ச்சி குறித்த விளம்பர பலகையில் இடம் பெற்றிருந்த பிழையான ஒரு சொல், தமிழார்வலர்களின் மனதை நோகச்செய்தி...