Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Stalin

நகர்ப்புறம்? நகர்ப்புரம்? எது சரி?; முதல்வர் விழாவில் தமிழுக்கு வந்த சோதனை!

நகர்ப்புறம்? நகர்ப்புரம்? எது சரி?; முதல்வர் விழாவில் தமிழுக்கு வந்த சோதனை!

சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், டிச. 11ம் தேதி, சேலத்தில் நடந்த அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, 31 ஆயிரம் பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அன்றைய தினமே, சேலம் மாவட்டத்தில் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட உள்ள 1242 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களையும் அறிவித்து, மாங்கனி மாவட்ட மக்களை திக்குமுக்காடச் செய்தார்.   அதே விழாவில், மாநில அளவில் 300 கோடி ரூபாயில் நமக்கு நாமே திட்டத்தையும், 100 கோடி ரூபாயில் நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தையும் தொடங்கி வைத்தார். தாரை தப்பட்டை, நாட்டுப்புறக் கலைகள் என முதல்வருக்கு மிக பிரம்மாண்டமான வரவேற்பும் களைகட்டின. நடந்த வரை எல்லாமே சிறப்புதான் என்றாலும், விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த நிகழ்ச்சி குறித்த விளம்பர பலகையில் இடம் பெற்றிருந்த பிழையான ஒரு சொல், தமிழார்வலர்களின் மனதை நோகச்செய்தி
‘நச்’ கேள்விகள்; ‘பன்ச்’ பதில்கள்!; டெல்லியில் தெறிக்கவிட்ட மு.க.ஸ்டாலின்!

‘நச்’ கேள்விகள்; ‘பன்ச்’ பதில்கள்!; டெல்லியில் தெறிக்கவிட்ட மு.க.ஸ்டாலின்!

அரசியல், இந்தியா, முக்கிய செய்திகள்
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று 42 நாள்கள் ஆன நிலையில், பிரதமர் நரேந்திரமோடியை மரியாதை நிமித்தமாக டெல்லியில் வியாழனன்று (ஜூன் 17) நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார். மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்கக் கூடியவர்கள் பெரும்பாலும் முப்பது நாள்களுக்குள்ளாகவே பிரதமருடனான சம்பிரதாயமான சந்திப்பை முடித்து விடுவார்கள். ஆனால் கொரோனா பெருந்தொற்றால் தமிழகமே ஆக்சிஜன் கிடைக்காமல் மூச்சுத்திணறிய வேளையில் பொறுப்பேற்றதால் இந்த சந்திப்புக்கு 42 நாள்கள் ஆகியிருக்கின்றன.   டெல்லி சென்ற ஸ்டாலினுக்கு திமுக எம்பிக்கள் அளித்த உற்சாக வரவேற்பு லோக்கல் மீடியாக்களையும், வடக்கத்திய அரசியல் தலைவர்களையும் கவனிக்க வைத்திருக்கிறது.   பிரதமரிடம் அதிமுக முன்னாள் முதல்வர் மற்றும் முக்கிய அமைச்சர்கள் மீதான ஊழல்கள் பற்றியும் ஸ்டாலின் புகார் புஸ்தகம் வாசிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனா
ஸ்டாலின் அடித்த சிக்ஸர்!; கன்னி உரையில் கனல் கக்கிய ‘தலைவர்’!! #DMK #MKStalin

ஸ்டாலின் அடித்த சிக்ஸர்!; கன்னி உரையில் கனல் கக்கிய ‘தலைவர்’!! #DMK #MKStalin

அரசியல், சென்னை, தமிழ்நாடு, திண்ணை, முக்கிய செய்திகள்
  திமுக தலைவராக பதவியேற்ற பின்னர் நிகழ்த்திய முதல் உரையிலேயே, 'பாஜகவுடன் நெருக்கம் காட்டுகிறதா திமுக?' என்ற யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்ததோடு, திராவிட இயக்கத்தின் அடிப்படை சித்தாந்தங்களைக்காக்க தொண்டர்களுக்கு அறைகூவல் விடுத்து, முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து, தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கவனத்தையும் இன்று ஈர்த்து இருக்கிறார் மு.க.ஸ்டாலின். திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பின்னர் எல்லோரும் எதிர்பார்த்தது போலவே செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று (ஆகஸ்ட் 28, 2018) அக்கட்சியின் தலைவராக மகுடம் சூடினார். சென்னை அறிவாலயத்தில் இன்று நடந்த பொதுக்குழுவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்தார். இதுவரை ஸ்டாலின் வகித்து வந்த பொருளாளர் பதவிக்கு, தலைமை நிலையச் செயலாளரான துரைமுருகன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   கருணாநிதி மறைந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியில் ம
கருணாநிதி மரணம்… தலைவராகும் தளபதி… எதையும் இழக்கத் தயாரான ஸ்டாலின்! கண்ணீர்மயமான திமுக செயற்குழு!!

கருணாநிதி மரணம்… தலைவராகும் தளபதி… எதையும் இழக்கத் தயாரான ஸ்டாலின்! கண்ணீர்மயமான திமுக செயற்குழு!!

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  திமுக தலைவர் கருணாநிதி மறைந்த எட்டாம் நாளான இன்று (ஆகஸ்ட் 14, 2018), அக்கட்சி செயற்குழுவின் அவசரக்கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. நேற்றைய தினம் மு.க. அழகிரி, ''கட்சியின் மூத்த தலைவர்கள், தொண்டர்கள் என் பின்னால் இருக்கிறார்கள். முக்கிய தலைவர்கள் ரஜினிகாந்துடன் தொடர்பில் இருக்கின்றனர்,'' என்று சரவெடி கொளுத்திப் போட்டார். இதனால் இன்றைய அவசர செயற்குழுக் கூட்டத்தில் அனல் பறக்கும் என்ற பரபரப்பும், எதிர்பார்ப்பும் அரசியல் களத்தில் நிலவியது. 325 செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பலரும் கலந்து கொண்ட இக்கூட்ட அரங்கம், ஆரம்பத்தில் இருந்தே இறுக்கமாக காணப்பட்டது. எவர் முகத்திலும் மகிழ்ச்சி ரேகைகள் தென்படவில்லை.   மேடையின் பின்னணியில் பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோருடன் ஸ்டாலின் முகமும் அச்சிடப்பட்ட பேனர் வைக்கப்பட்டு இருந்தது. இதற்கு முன்பே
இந்திய அளவில் டிவிட்டரில் டிரெண்டிங்  ஆன ரஜினியின் ‘#ஒரு நிமிஷம்-_ தலைசுத்திருச்சு!’

இந்திய அளவில் டிவிட்டரில் டிரெண்டிங் ஆன ரஜினியின் ‘#ஒரு நிமிஷம்-_ தலைசுத்திருச்சு!’

அரசியல், இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சினிமாவில் மட்டுமில்லாமல் தனது சொந்த வாழ்க்கையில் ரஜினிகாந்த் பேசிய பேச்சும் இப்போது டிவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டிங் ஆகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரஜினி, விஜய், அஜீத், கருணாநிதி, ஸ்டாலின் உள்ளிட்டோரையும் நெட்டிஸன்கள் கிண்டலடித்துள்ளனர். கடந்த டிசம்பர் 31ம் தேதி தனது ரசிகர்களை சந்தித்த ரஜினி, தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றதுடன், ஆன்மிக அரசியல்தான் தனது கொள்கை என்றும் அறிவித்தார். அப்போது பேசுகையில், ''திடீரென்று ஒரு டிவி கேமராமேன் என்னிடம் வந்து உங்க கட்சியின் கொள்கைகள் என்ன என்று கேட்டார். எனக்கு அப்படியே ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு,'' என்று பேசினார். சமூக வலைத்தளமான ட்விட்டரில் ரஜினிகாந்த் சொன்ன, 'ஒரு நிமிஷம் தலைசுத்திருச்சு' என்ற பேச்சுதான் இன்று இந்திய அளவில் டிரெண்டிங் ஆகியிருக்கிறது. '#ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு' என்ற பெயரில் ஹேஸ்டேக் செய்துள்ளனர்.
பாஜக 100 சதவீதம் மதவாத கட்சியேதான்!: திருமாவளவன்

பாஜக 100 சதவீதம் மதவாத கட்சியேதான்!: திருமாவளவன்

அரசியல், இந்தியா, சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
திராவிட கட்சிகளிடம் சாதிய உணர்வு இருந்தாலும், ஜனநாயகத் தன்மை கொண்டது; ஆனால் பாஜக அப்படி அல்ல. அது முழுக்க முழுக்க மதவாதம் பேசக்கூடிய கட்சி என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இன்று (நவம்பர் 5, 2017) ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். திராவிடக் கட்சிகள், பாஜக, தலித் அரசியல், ரஜினி, கமல் அரசியல், மதவாதம், சாதியம் என பல்வேறு கேள்விகளுக்கும் பதில் அளித்தார். அவருடைய பேட்டியில் இருந்து... பாஜக தலித் கட்சிகளை வளைக்கும் திட்டத்துடன்தான் செயல்பட்டு வருகிறது. ராம்விலாஸ் பாஸ்வான் முதல் மாயாவதி வரை அதற்கு பல உதாரணங்களைச் சொல்ல முடியும். தமிழ்நாட்டிலும் அதற்கு முயற்சித்தார்கள். அதை குறிப்பிடும் வகையில்தான் என்னை வளைக்க முடியாமல் தோற்றுப்போன வருத்தத்தில் என் மீது பாஜக தலைவர் தமிழிசை விமர்சனங்களை முன்வ