Tuesday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Shikhar Dhawan

கிரிக்கெட்: இந்திய பந்துவீச்சை தென்னாப்பிரிக்கா கிழி… கிழி… கிழி…;  ஷிகர் தவான் சாதனை சதம் வீண்

கிரிக்கெட்: இந்திய பந்துவீச்சை தென்னாப்பிரிக்கா கிழி… கிழி… கிழி…; ஷிகர் தவான் சாதனை சதம் வீண்

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
ஜோகன்னஸ்பெர்க்கில் நேற்று (பிப்ரவரி 10, 2018) நடந்த நான்காவது ஒரு நாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இந்திய வீரர் ஷிகர் தவானின் சதம் வீணானது.  தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே தொடர்ச்சியாக மூன்று போட்டிகளை வென்றுள்ள இந்திய அணி, இந்தப் போட்டியிலும் வென்று, தொடரை கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்கியது. பிங்க் நிற சீருடை: மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தென்னாப்பிரிக்கா வீரர்கள் தங்களது வழக்கமான பச்சை நிற சீருடையை தவிர்த்து, பிங்க் நிற சீருடையில் களம் புகுந்தனர். போட்டி நடைபெறும் ஜோகன்னஸ்பெர்க்கின் வாண்டரர்ஸ் மைதானத்திலும் ஏராளமான ரசிகர்கள் பிங்க் நிற உடை அணிந்து வந்திருந்தனர். இந்திய அணி வீரர்கள் தங
கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவுக்கு 290 ரன்கள் இலக்கு; ஷிகர் தவான் சாதனை சதம்

கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவுக்கு 290 ரன்கள் இலக்கு; ஷிகர் தவான் சாதனை சதம்

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
ஜோகன்னஸ்பெர்க்கில் இன்று (பிப்ரவரி 10, 2018) நடந்து வரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நான்காவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 290 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. அபாரமாக விளையாடிய இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் தனது 100 வது போட்டியில் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே தொடர்ச்சியாக மூன்று போட்டிகளை வென்றுள்ள இந்திய அணி, இன்றைய போட்டியிலும் வென்று, தொடரை கைப்பற்றும் முனைப்புடன் விளையாடி வருகிறது. மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தென்னாப்பிரிக்கா வீரர்கள் இன்றைய போட்டியில் தங்களது வழக்கமான பச்சை நிற சீருடையை தவிர்த்து, பிங்க் நிற சீருடையில் களம் புகுந்தனர். போட்டி நடைபெறும் ஜோகன்னஸ்பெர்க்கின் வாண்டரர
3வது ஒருநாள்: விராட் கோலி, ஷிகர் தவான் அரை சதம்

3வது ஒருநாள்: விராட் கோலி, ஷிகர் தவான் அரை சதம்

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், கேப்டன் விராட் கோலி ஆகியோர் அரை சதம் கடந்தனர். இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கேப்டவுன் நகரில் இன்று (பிப்ரவரி 7, 2018) தொடங்கியது. இதில் 'டாஸ்' வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் எய்டன் மார்க்ரம் பவுலிங்கை தேர்வு செய்தார். ஆறு போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் வென்றுள்ளதால், இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை. அதேசமயம், தென்னாப்பிரிக்க அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய விக்கெட் கீப்பராக ஹெய்ன்ரிச் கிளாசீன் என்பவரும், ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள லுங்கி நிகிடியும் முதல் முறையாக தென்னாப்பிரிக்க ஒருநாள் அணியில் இடம் பிடித்துள்ளனர். இப்போட்டியிலும் ரோ
கிரிக்கெட்: இலங்கை உடனான 3வது ஒருநாள் போட்டியையும் இந்தியா வென்றது;  தொடரையும் கைப்பற்றி அசத்தல்

கிரிக்கெட்: இலங்கை உடனான 3வது ஒருநாள் போட்டியையும் இந்தியா வென்றது; தொடரையும் கைப்பற்றி அசத்தல்

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
இலங்கைக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஷிகர் தவான் சதம் மற்றும் சுழல் பந்து வீச்சாளர்கள் அற்புதமான ஆட்டத்தால் எளிதாக வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒரு நாள் தொடரையும் 2-1 கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இலங்கைக்கு கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி விசாகபட்டினத்தில் இன்று (டிசம்பர் 17, 2017) நடந்தது. ஏற்கனவே முதல் போட்டியில் இலங்கை அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றிருந்தது. அதனால் இன்றைய போட்டி, இரு அணிகளுக்கும் தொடரை வெல்லப்போவது யார் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக அமைந்தது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, பந்து வீச்சை தேர்வு செய்தார். உபுல் தரங்காவின் அதிரடியால் ஒரு கட்டத்தில் இலங்கை அணி 22.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 136 ரன்கள் எடுத்திருந்தது. சீரான ஆட்டத்
முதல் ட்வென்டி-20; நியூஸிலாந்தை புரட்டி எடுத்தது இந்தியா!

முதல் ட்வென்டி-20; நியூஸிலாந்தை புரட்டி எடுத்தது இந்தியா!

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ட்வென்டி - 20 கிரிக்கெட் போட்டியில், அந்த அணியை இந்தியா துவம்சம் செய்து, 53 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ட்வென்டி-20 கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று (நவம்பர் 1, 2017) நடந்தது. இரவு 7 மணிக்கு போட்டி துவங்கியது. இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஆஷிஸ் நெஹ்ரா இன்றைய போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். இதை கவுரவிக்கும் விதமாக அவருக்கு இந்த ஆட்டத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதேபோல் இளம் வீரரான ஸ்ரேயாஸ் அய்யர், முதன்முதலாக சர்வதேச ட்வென்டி - 20 கிரிக்கெட்டில் அறிமுக வீரராக களம் இறங்கினார். தவான் - ரோஹித் அபாரம்: டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், தனது அணி முதலில் பந்து வீச அழைத்தார். போல்ட், டிம் சவுத்
கிரிக்கெட்: நியூஸிக்கு 281 ரன் இலக்கு; கோஹ்லி புதிய சாதனை!

கிரிக்கெட்: நியூஸிக்கு 281 ரன் இலக்கு; கோஹ்லி புதிய சாதனை!

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
கனே வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவுடன் மூன்று ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முதல் ஒரு நாள் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (அக். 22, 2017) மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது. இந்திய அணியில் நீண்ட நாள்களுக்குப் பிறகு, தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இடம் பிடித்தார். டாஸ் வென்ற இந்திய அணி முதலில் மட்டை வீச்சை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான் ஜோடி பெரிய அளவில் சோபிக்கவில்லை. சிக்ஸர் அடித்து அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்கிய ரோஹித் ஷர்மா, 20 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷிகர் தவானும் 9 ரன்களில் வெளியேறினார். இருவருமே நியூஸியின் டிரன்ட் போல்ட் வேகத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். தினேஷ்கார்த்திக் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்தார். அவரும் ஒருகட்டத்தில் 37 ரன்களில் த
கிரிக்கெட்: இலங்கை மீண்டும் ‘வாஷ் – அவுட்’

கிரிக்கெட்: இலங்கை மீண்டும் ‘வாஷ் – அவுட்’

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
கொழும்பு: இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரிலும் இலங்கை அணி 5 ஆட்டங்களிலும் தொடர்ச்சியாக தோற்று வாஷ் - அவுட் ஆனது. இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, அந்த நாட்டுடன் 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி, ஒரு டி-20 போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இந்திய அணி, 3&0 கணக்கில் வென்று இருந்தது. நான்காவது போட்டியிலும் இந்திய அணி வெற்றி வாகை சூடியது. இந்நிலையில், கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் ஐந்தாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நேற்று (செப். 3) நடந்தது. இந்தப் போட்டியிலாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்ற முனைப்பில் இலங்கை அணி வீரர்கள், கடந்த இரு நாட்களாக தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். டாஸ் ஜெயித்த இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஹர்திக் பா
கிரிக்கெட்: இலங்கையை பந்தாடியது இந்தியா

கிரிக்கெட்: இலங்கையை பந்தாடியது இந்தியா

இந்தியா, முக்கிய செய்திகள், விளையாட்டு
இலங்கைக்கு எதிரான நான்காவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்றது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அந்நாட்டு அணியுடனான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாக வென்றுள்ளது. தற்போது 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரையும் ஏற்கனவே இந்திய அணி 3-0 கணக்கில் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், நான்காவது ஒரு நாள் போட்டி கொழும்பு மைதானத்தில் இன்று (31/8/17) நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட் செய்தது. ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு களமிறங்கினர். 4 ரன்களில் ஷிகர் தவான் அவுட்டாகி வெளியேறினார். இரண்டாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய கேப்டன் விராட் கோஹ்லி ஆரம்பம் முதலே இலங்கை பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். அவர் இந்த போட்டியில் 29வது சதத்தை பூ
கிரிக்கெட்: தொடரை வென்றது இந்தியா

கிரிக்கெட்: தொடரை வென்றது இந்தியா

உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
பல்லேகெலே: இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி வென்றது. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் இலங்கை அணி தொடர்ந்து சொதப்பி வந்ததால், அந்நாட்டு ரசிகர்கள் மைதானத்திற்குள் குடிநீர் பாட்டில்கள வீசி எறிந்து ரகளையில் ஈடுபட்டனர். இதனால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டாலும், இந்திய அணி வென்றதாக அறிவிக்கப்பட்டது. விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இலங்கை அணியுடன் ஏற்கனவே மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய இந்திய அணி, தொடரை முழுமையாக வென்று புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. தற்போது 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடந்து வருகிறது. ஏற்கனவே முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளை வென்று, தொடரில் முன்னிலை வகிக்கும் இந்திய அணி, இந்த தொடரையும் முழுமையாக கைப்பற்றும் முனைப்புடன் இன்று (27/8/17) மூன்றாவது போட்டியில் களமிறங்கி