Wednesday, December 4மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: Real Estate

ராசிபுரம் பஸ் நிலைய விவகாரம்: திமுகவுக்கு எதிராக கூட்டணி கட்சிகள்!

ராசிபுரம் பஸ் நிலைய விவகாரம்: திமுகவுக்கு எதிராக கூட்டணி கட்சிகள்!

நாமக்கல், முக்கிய செய்திகள்
ராசிபுரம் பேருந்து நிலைய இடமாற்றத் திட்டத்தின் பின்னணியில் பல்வேறு தகிடுதத்தங்கள் இருப்பதாக திமுகவுக்கு எதிராக கூட்டணி கட்சிகள் பகீர் புகார்களைக் கிளப்பி இருக்கின்றன. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் நகரம், நெய் மற்றும் ஜவுளி உற்பத்திக்கு பெயர் பெற்றது. இங்குள்ள பேருந்து நிலையத்தில் இருந்து அரசு மற்றும் தனியார் என மொத்தம் 120 பேருந்துகள் பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நகரத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, மையப்பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தை, ராசிபுரத்தில் இருந்து 8.50 கி.மீ. தொலைவில் 1200 பேர் மட்டுமே வசிக்கும் அணைப்பாளையம் என்ற குக்கிராமத்திற்குக் கொண்டு செல்ல நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அணைப்பாளையத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான மின்னணு ஏலம் விட்டு, பணி ஆணை வழங்கும் நிலையில் உள்ளது. இந்நிலையில்தான், ரியல...
50 கோடி ரூபாய் சுருட்டல்; அரசுப்பள்ளி பெண் ஆசிரியர் கைது! கரும்பலகை குற்றத்தில் இது வேற லெவல்!

50 கோடி ரூபாய் சுருட்டல்; அரசுப்பள்ளி பெண் ஆசிரியர் கைது! கரும்பலகை குற்றத்தில் இது வேற லெவல்!

முக்கிய செய்திகள், வேலூர்
வட்டித்தொழில் தொடங்கி பாலியல் அத்துமீறல் வரை குற்றங்களில் அனாயசமாக ஈடுபட்டு வந்த ஆசிரியர்களை தூக்கிச் சாப்பிட்டிருக்கிறார் வேலூரைச் சேர்ந்த அரசுப்பள்ளி பெண் ஆசிரியர் ஒருவர்.   வேலூர் மாவட்டம் கொணவட்டத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வரி (55). அப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய கணவர் தர்மலிங்கம் (60). காவல்துறை உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கணவன், மனைவி இருவரும் இணைந்து வேலூரில் கடந்த 2018ம் ஆண்டு கார், லாரி, ரியல் எஸ்டேட் தொழில்களை அடுத்தடுத்து தொடங்கினர். இவர்கள் நடத்தி வரும் தொழில்களில் முதலீடு செய்தால் அதிக வட்டி கொடுப்பதாக ஆசை வலை விரித்தனர்.   வெறும் 175 ரூபாய் ஊக்கத் தொகைக்காக பணம் கொடுத்தாவது எம்.ஃபில் பட்டத்தைப் பெறுவதில் முனைப்பு காட்டும் ஆசிரியர்களிடம், முதலீட்டுக்கு அதிக வட்டி என்றால் சும்மா ...
பல நூறு கோடி ரூபாய் சுருட்டிய வின் ஸ்டார் சிவக்குமார் செட்டில்மென்ட் கமிஷனுக்கும் டிமிக்கி! ஜாமினை ரத்து செய்ய பரிந்துரை!!

பல நூறு கோடி ரூபாய் சுருட்டிய வின் ஸ்டார் சிவக்குமார் செட்டில்மென்ட் கமிஷனுக்கும் டிமிக்கி! ஜாமினை ரத்து செய்ய பரிந்துரை!!

குற்றம், சேலம், முக்கிய செய்திகள்
சேலத்தில், ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் பெயரில் பல நூறு கோடி ரூபாய் சுருட்டிய வின்ஸ்டார் சிவக்குமார், செட்டில்மென்ட் கமிஷன் முன்பும் விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து டிமிக்கி கொடுத்து வருகிறார். இதனால் உச்சக்கட்ட அதிருப்தி அடைந்த கமிஷனின் தலைவர், சிவகுமாருக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யவும் பரிந்துரை செய்துள்ளார்.   சேலம் அழகாபுரத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். புதிய பேருந்து நிலையம் அருகே வின்ஸ்டார் இந்தியா சிட்டி டெவலப்பர்ஸ் மற்றும் சவுபாக்கியா சிட்டி டெவலப்பர்ஸ் என்ற பெயர்களில் ரியல் எஸ்டேட் நிறுவனங்களை நடத்தி வந்தார். வீட்டு மனைகளில் முதலீடு செய்யும் நபர்களுக்கு, அத்தொகைக்கு உரிய மதிப்பில் வீட்டு மனை அல்லது ஓராண்டில் முதலீட்டு தொகையை இரட்டிப்பு மடங்காக வழங்கப்படும் என்று செய்தித்தாள்கள், உள்ளூர் சேனல்களில் விளம்பரம் செய்தார். இந்த கவர்ச்சிகரமான அறிவிப்பை ந...
இளம்பெண்கள் பலி! 55 கோடி ரூபாய் மோசடி! சேலம் தொழில் அதிபர் மீது குவியும் புகார்கள்…. திணறும் போலீசார்…!!

இளம்பெண்கள் பலி! 55 கோடி ரூபாய் மோசடி! சேலம் தொழில் அதிபர் மீது குவியும் புகார்கள்…. திணறும் போலீசார்…!!

ஈரோடு, குற்றம், சேலம், தமிழ்நாடு, திருப்பூர், நாமக்கல், முக்கிய செய்திகள்
  முதலீட்டுத் தொகை திரும்பக் கிடைக்காத விரக்தியில் தற்கொலைக்கு முயன்ற பெண்களில் இருவர் அடுத்தடுத்து உயிரிழந்தது ஒருபுறம் இருக்க, சேலம் வின்ஸ்டார் சிவகுமார் மீது புகார் அளிக்க நாள்தோறும் குவியும் முதலீட்டாளர்களால் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் திணறி வருகின்றனர்.   தற்கொலை முயற்சி சேலம் அம்மாபேட்டை நந்தனார் தெருவை சேர்ந்தவர் அழகேசன். கூலித்தொழிலாளி. இவருக்கு ஐந்து மகள்கள். இரண்டு மகள்களுக்கு திருமணம் நடந்துவிட்டது. மற்ற மூன்று மகள்களான மேனகா (33), ரேவதி (28), கலைமகள் (26) ஆகியோர் கடந்த 28.8.2018ம் தேதி திடீரென்று குருணை மருந்தை நீரில் கலக்கிக் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.   அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மேனகா, கலைமகள் ஆகியோர் உடல்நலம் மோசமானதால், தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு ...
நெல்லை: நெஞ்சை உலுக்கும் சம்பவம்; கந்து வட்டி கொடுமையால் ஒரு குடும்பமே தீக்குளிப்பு; தொடரும் துயரம்

நெல்லை: நெஞ்சை உலுக்கும் சம்பவம்; கந்து வட்டி கொடுமையால் ஒரு குடும்பமே தீக்குளிப்பு; தொடரும் துயரம்

சேலம், தமிழ்நாடு, திருநெல்வேலி, முக்கிய செய்திகள்
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (அக். 23, 2017) காலை, கந்துவட்டி கொடுமையால் கைக்குழந்தையுடன் ஒரு குடும்பமே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து (32). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சுப்புலட்சுமி (24). இவர்களுக்கு 4 வயதில் மதிசரண்யா என்ற மகளும், 2 வயதில் அக்ஷய சரண்யா என்ற பெண் கைக்குழந்தையும் உள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம் இன்று நடந்து வருகிறது. இந்த முகாமில் மனு கொடுப்பதற்காக இசக்கிமுத்து குடும்பத்துடன் ஆட்சியர் அலுவலகம் வந்தார். மனுக்கள் கொடுக்கும் அரங்கு முன்பு திடீரென்று அவர்கள் பாட்டிலில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை தங்கள் மீதும், குழந்தைகள் மீதும் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டனர். தீ மளமள...