Sunday, April 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Rajya Sabha

ஓராண்டுக்குப்பின் ‘முதல் பிள்ளை’யை பார்த்து ரசித்தார் கருணாநிதி!

ஓராண்டுக்குப்பின் ‘முதல் பிள்ளை’யை பார்த்து ரசித்தார் கருணாநிதி!

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
'என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே!' என்று கரகரப்பான குரலில் ஒலிக்கும் இந்த சொற்களுக்கு மயங்காத திமுக தொண்டர்களே இருக்க முடியாது. இப்படி திமுக தலைவர் கருணாநிதி பொதுக்கூட்டங்களில் சொல்லும்போது, கட்சியையும் தாண்டி அனைத்து தரப்பினரும் ரசிப்பார்கள். தொண்டர்களின் விசில் ஒலியும், கரவொலியும் அடங்க வெகுநேரம் ஆகும். திமுகவினர் சோர்வடையும் போதெல்லாம் அவர்களை உசுப்பிவிடுவது 'என் இனிய உடன்பிறப்புகளே'தான். திமுகவினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகமும், கருணாநிதியின் 'டிரெண்டி'யான இந்த பேச்சைக் கேட்டு ஓராண்டுக்கு மேலாகிவிட்டது. தற்போது, 94 வயதாகும் மு.கருணாநிதி, உடல்நலக்குறைவால் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு தொண்டையில் டிரக்கியாஸ்டமி உபகரணம் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த சில மாதமாக அவருடைய உடல்நலம் வேகமாக முன்னேற்றம் அடைந்து வருகிறத
அமித் ஷா மகன் நிறுவனத்தின் வருமானம் ஒரே ஆண்டில் 16 ஆயிரம் மடங்கு உயர்வு?

அமித் ஷா மகன் நிறுவனத்தின் வருமானம் ஒரே ஆண்டில் 16 ஆயிரம் மடங்கு உயர்வு?

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவின் மகன் நடத்தி வரும் நிறுவனத்தின் வர்த்தகம், நரேந்திர மோடி பிரதமர் ஆன ஒரே ஆண்டில் 16 ஆயிரம் மடங்கு உயர்ந்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா. இவருடைய மகன் ஜெய் ஷா. இவர் 'ஷா'ஸ் டெம்பிள் என்டர்பிரைசஸ்' என்ற பெயரில் ஒரு நிறுவனம் நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராகவும் இருந்து வருகிறார். சில ஆயிரங்களில் வெறும் பெயரளவில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், கடந்த 2013ம் ஆண்டில் ரூ.6230ம், 2014ம் நிதியாண்டில் ரூ.1724ம் இழப்பு கண்டதாக கம்பெனிகள் பதிவாளர் அலுவலகத்திற்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த 2014-15ம் நிதியாண்டில் டெம்பிள் என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.50 ஆயிரம் என்றும், அந்த ஆண்டு ரூ.18728 லாபம் அடைந்துள்ளதாகவும் நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அடுத
மத்திய அமைச்சரவையில் அதிமுக?

மத்திய அமைச்சரவையில் அதிமுக?

அரசியல், இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆபரேஷன் தமிழ்நாட்டின் அடுத்த நகர்வாக, அதிமுகவை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைத்துக்கொள்ளும் படலம் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் நடைபெற உள்ள அமைச்சரவை மாற்றத்தின்போது அதிமுகவை சேர்ந்த இருவருக்கு அமைச்சர் பதவிகள் கிடைக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் கால் பதிப்பதுதான் பாஜகவின் ஆகப்பெரிய சாதனையாக இருக்க முடியும். இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சிகளின் கோட்டையாகப் பார்க்கப்படும் கேரளாவில்கூட பரவலாக காவி நிறம் தென்படத் தொடங்கிவிட்டது. கர்நாடகாவிலோ காங்கிரஸ் அல்லது பாஜக என்ற இரு துருவ அரசியல் இருந்து வருகிறது. ஆந்திராவில் காலூன்ற வசதியாக, அந்த மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டுவிட்டது. தென்னிந்தியாவில் பாஜகவினர் நுழைய முடியாத எஃகு கோட்டை என்றால் இன்னமும் அது, தமிழ்நாடு மட்டும்தான். இப்போது தமிழகத்தில் ஆளும் அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி குழ