Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: rain

”புயலோ மழையோ குளிரோ எதுவும் எங்களுக்கு துன்பமில்லை!” – செய்தித்தாள் ‘லைன் பாய்’கள் கதை!

”புயலோ மழையோ குளிரோ எதுவும் எங்களுக்கு துன்பமில்லை!” – செய்தித்தாள் ‘லைன் பாய்’கள் கதை!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சில பணிகளில் குறைந்த உழைப்பு இருக்கும். அதீத லாபம் கிடைக்கும். சில பணிகளில் உழைப்பு விழுங்கும் அளவுக்கு பணப்பலன்கள் இருக்காது. இதில் இரண்டாவது வகையிலானது, வீட்டுக்கு வீடு செய்தித்தாள் போடும் 'லைன் பாய்'களின் வாழ்க்கை. செய்தித்தாளும் ஒரு கோப்பை தேநீரும்:   ''காலையில பேப்பர் பார்க்கலைனா எனக்கு பொழுதே ஓடாது. அதுவும், ஒரு கையில தேநீர் கோப்பையை பிடித்து ஒவ்வொரு மிடறாக உறிஞ்சி சுவைத்தபடி, செய்தித்தாள் வாசிக்கும் அனுபவமே தனிதான்,'' என பலர் சுகானுபவமாக சொல்வதுண்டு.     அவர்களில் பலர், செய்தித்தாள் விநியோகத்தில் இருக்கும் வலைப்பின்னல் அமைப்பு, உழைப்பு, கூலி, 'லைன் பாய்'களின் வாழ்க்கை போராட்டம் பற்றி அறிந்து இருக்க வாய்ப்பே இல்லை.   முகவர்கள்:   தினசரி செய்தித்தாளோ அல்லது வார / மாத சஞ்சிகைகளோ எதுவாக இருந்தாலும், அவை மாவட்ட அளவில் நியமிக்
மூன்றாவது டுவென்டி-20 ரத்து; இந்தியா – ஆஸி. ஏமாற்றம்!

மூன்றாவது டுவென்டி-20 ரத்து; இந்தியா – ஆஸி. ஏமாற்றம்!

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
ஹைதராபாத்தில் இன்று (அக்டோபர் 13, 2017) நடக்க இருந்த மூன்றாவது மற்றும் இறுதி டுவென்டி-20 கிரிக்கெட் போட்டி, மைதானத்தின் ஈரப்பதம் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி, ஏற்கனவே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 4-1 என்ற கணக்கில் இழந்திருந்தது. அடுத்து, மூன்று 20 ஓவர்கள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றது. முதல் இரண்டு டுவென்டி-20 போட்டியில் இந்தியாவும், ஆஸி அணியும் தலா ஒரு போட்டியில் வென்று சமநிலையில் உள்ளன. மூன்றாவது மற்றும் இறுதி டுவென்டி-20 போட்டி இன்று ஹைதராபாத்தில் நடக்க இருந்தது. அங்கு கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. இன்று மழை இல்லை. எனினும், மைதானம் ஈரப்பதத்துடன் இருந்தது. இரவு 7 மணிக்கும், பிறகு 7.45 மணிக்கும் மைதான ஈரப்பதம் சோதிக்கப்பட்டது. ஆடுகளம் போட்டி நடத்துவதற்கு உகந்ததாக இல்லை என அறிக்கை அளிக்கப்பட்டது. இதையடுத்து,