
நீட் தேர்வு எப்படி இருந்தது? மாணவர்கள் சொல்வது என்ன?
நீட் தேர்வில் கேட்கப்பட்ட
வினாக்கள் எளிமையாக இருந்ததால்,
இந்த ஆண்டு தமிழகத்தில் அதிகமானோர்
தேர்ச்சி பெற வாய்ப்பு உள்ளதாக
மாணவர்கள் மகிழ்ச்சியுடன்
தெரிவித்துள்ளனர்.
இளநிலை மருத்துவப்படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் சேர தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு எனப்படும் நீட் போட்டித்தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றாக வேண்டும். இதற்காக நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (மே 5) தேர்வு நடத்தப்பட்டது. தமிழகத்தில் இருந்து இந்தாண்டு 1.50 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தமிழ்நாட்டில் மட்டும் 14 நகரங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
நீட் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் முழு கை வைத்த சட்டை அணிந்து வரக்கூடாது, அடர்த்தியான நிற உடைகள் அணியக்கூடாது, எந்த விதமான எழுதுபொருள்களும் கொண்டு மையத்திற்குள் கொண்டு செல்லக்கூடாது, மாணவிகள் கொலுசு, வளையல் உள்ளிட...