Saturday, December 7மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: periyarism

கமல்ஹாஸனின் இலக்கு யார்? அடுத்த பயணம் எங்கே?

கமல்ஹாஸனின் இலக்கு யார்? அடுத்த பயணம் எங்கே?

அரசியல், தமிழ்நாடு, திருச்சி, மதுரை, முக்கிய செய்திகள்
'பிக்பாஸ்' நிகழ்ச்சி ஒளிபரப்பான நேரம் அது. டெங்கு காய்ச்சல், நீட் தேர்வு, அனிதா மரணம் குறித்து கமல்ஹாஸன் ட்விட்டர் பக்கங்களில் ஆளுங்கட்சியை காட்டமாக விமர்சிக்க, பதிலுக்கு ஆளும் தரப்பும் வார்த்தைப் போரில் ஈடுபட்டது. ''ட்விட்டரில் மட்டும் அரசியல் செய்தால் போதாது. துணிச்சல் இருந்தால் களத்திற்கு வரட்டும்'' என அதிமுகவின் இரண்டாம்கட்டத் தலைவர்கள் கமல்ஹாஸனை சீண்டிக்கொண்டே இருந்தனர். நேற்றைய தினம், கமல்ஹாஸன் புதிய கட்சியை தொடங்கி, எல்லோரையும் அதிரடித்துவிட்டார். நேற்றைய தினம் கமல்ஹாஸன் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார் என்றே சொல்லலாம். காலை 7.45 மணிக்கு துவங்கிய பயணம் இரவு 10 மணிக்குதான் முடிந்திருக்கிறது. ராமேஸ்வரத்தில் உள்ள, மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வீடு, அவருடைய நினைவிடம், சொந்த ஊரான பரமக்குடி விஜயம், பிறகு மதுரை மாநாடு என புயலாகச் சுழன்றடித்துள்ளார். கமல், சினிமாவில் உ...
கம்யூனிஸம் + பெரியாரிஸம் = கமலிஸம்!

கம்யூனிஸம் + பெரியாரிஸம் = கமலிஸம்!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
திராவிட சிந்தனையை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் முகமாகவே கமல்ஹாசனின் அரசியல் செயல்பாடுகள் அமையும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் பலமாக உருவாகி உள்ளன. ஜல்லிக்கட்டு போராட்டம் வலுப்பெற்ற நேரத்தில் இருந்தே கமலின் அரசியல் விமர்சனங்கள் சமூகவலைத்தளங்களில் ரொம்பவே 'வைரல்' ஆகி வருகின்றன. பல படங்களில், கமல் பேசிய முற்போக்கு வசனக் காட்சிகளை அவருடைய ரசிகர்கள் தேடிப்பிடித்து 'வைரல்' ஆக்கி வருகின்றனர். தமிழ் சினிமாக்களில் அவர் எந்தளவுக்கு திராவிடம் பேசினாரோ, அதற்கு நிகராக வைணவக் கருத்துகளையும், கடவுள் மீதான நம்பிக்கைகளையும் எதிர் பாத்திரங்கள் மூலம் வார்த்தெடுத்திருக்கிறார். ஒருவேளை, தன் கருத்துகளை ஆழமாகச் சொல்வதற்காக அத்தகைய பாத்திரங்களை சித்தரித்திருக்கலாம். அல்லது, வணிக நோக்கமாக இருக்கலாம். எனினும், தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் கமல்ஹாசன், பெரியாரிஸத்தையோ, பொதுவ...