Tuesday, December 3மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: Periyar

பயந்துட்டீங்களா சீமான்? விஜய் மீதான விமர்சனத்தின் பின்னணி!

பயந்துட்டீங்களா சீமான்? விஜய் மீதான விமர்சனத்தின் பின்னணி!

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் கட்சியைத் தொடங்கி, கொடி அறிமுகம், கொள்கை விளக்க மாநாடு என்று நின்று நிதானமாக, டெஸ்ட் கிரிக்கெட் போல ஆடத் தொடங்கி இருக்கிறார்.  கடந்த அக். 27ஆம் தேதி, கள்ளக்குறிச்சி மாவட்டம் விக்கிரவாண்டியில் நடந்த, த.வெ.க., மாநாட்டில், கட்சியின் கொள்கை விளக்கம் குறித்து பேசினார், விஜய். அந்த மாநாட்டில், ''தந்தை பெரியார், அண்ணா பெயரைச் சொல்லிக்கொண்டு, திராவிட மாடல் என்ற பெயரில் தமிழ்நாட்டைச் சுரண்டி கொள்ளையடிக்கிறது ஒரு குடும்பம். அந்த சுயநலக் கூட்டம்தான் நமது அரசியல் எதிரி,'' என திமுகவின் பெயரைச் சொல்லாமலேயே சம்மட்டி அடி கொடுத்தார் விஜய். அதேபோல, ''சாதி, மதத்தின் பெயராலே பெரும்பான்மை, சிறுபான்மை பயத்தைக் காட்டும் பிளவுவாத அரசியல் செய்பவர்கள்தான் நமது கொள்கை எதிரி,'' என்று பாஜக, ஆர்எஸ்எஸ் சங்பரிவாரங்களின் மண்டையிலும் 'பொளேர்' என ஒரு போடு போட்டார...
தமிழர் வழிபாட்டில் இறக்குமதி கடவுளர்கள்!

தமிழர் வழிபாட்டில் இறக்குமதி கடவுளர்கள்!

சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
கந்த சஷ்டி கவசத்திற்கு  கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் பொழிப்புரை ஒருபுறம்; கோவையில் பெரியார் சிலை மீது காவிச்சாயம் ஊற்றப்பட்டு உள்ளது, மற்றொருபுறம். பெரியார் சிலை அவமதிப்பு என்பது, கருப்பர் கூட்டத்தின் செயலுக்கு எதிர்வினையாகவே கருத முடியும்.   தமிழர் நாகரிகம், ஆரியப் பார்ப்பனர் படையெடுப்புக்குப் பின்னர் பெருமளவில் சிதிலமடைந்து இருக்கிறது. இப்போதுள்ள தமிழர்கள், முற்றாக ஆரிய டிஎன்ஏ ஆகவும் இல்லாமல், பழந்தமிழரின் டிஎன்ஏ ஆகவும் இல்லாமல் புதிய மூலக்கூறுகளுடன் இருக்கிறார்கள். சோறு என்பது சாதம் ஆனபோதே தமிழர்கள் ஆரியத்தின்பால் மூழ்கி விட்டார்கள் என்பதாக புரிந்து கொள்ளலாம். அதனால்தான் அவர்களுக்கு தமிழ்க்கடவுள் முருகன் யார்? ஆரியக்கடவுளான ஸ்கந்தன் (கந்தன்), சுப்ரமணியஸ்வாமி யார் என்பதில் எல்லாம் பெருங்குழப்பம் காணப்படுகிறது.   உ...
தமிழகம்: அணையா நெருப்பு!:  ஒன்றுபட வேண்டிய நேரமிது!!

தமிழகம்: அணையா நெருப்பு!: ஒன்றுபட வேண்டிய நேரமிது!!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தவறான நீதி வழங்கிய பாண்டிய மன்னனுக்கு எதிராக அன்று கண்ணகி பற்ற வைத்த நெருப்பு, காவிரி விவகாரத்தில் பாஜகவின் அநீதிக்கு எதிராகவும் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது.     இந்திய அளவில் மிகப்பெரும் போராட்டக் களமாக, கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகம் முதலிடத்தில் இருந்து வருகிறது. குறிப்பாக ஈழ இறுதி யுத்த நாள்களில் தொடங்கிய போராட்டம் வெப்பம் குறையாமல் தொடர்கிறது. ஈழத்தமிழர்கள், கூடங்குளம், டாஸ்மாக், நெடுவாசல், விவசாயிகள் தற்கொலை, நியூட்ரினோ, காவிரி என அடுத்தடுத்து உஷ்ணம் கிளம்பிக் கொண்டே இருக்கிறது.   இதற்கான பொறி, கண்ணகி விதைத்தது. செங்கோல் முறைமையில் இருந்து வழுவிய பாண்டிய மன்னனுக்கு எதிராக அன்று கண்ணகி பற்ற வைத்த நெருப்பு அணையாமல் தணலாக விசும்பிக் கொண்டே இருக்கிறது.   எங்கெல்லாம் எப்போதெல்லாம் நீதி வழுவுகிறதோ அப்போதெல்லாம் தணல் கனிந்து பெரும் ஜூவா...
தமிழ்நாட்டின் மிகச்சிறந்த சமுதாய சீர்திருத்தவாதி யார்?;  காவலர்  போட்டித்தேர்வில் கேள்வி

தமிழ்நாட்டின் மிகச்சிறந்த சமுதாய சீர்திருத்தவாதி யார்?; காவலர் போட்டித்தேர்வில் கேள்வி

ஈரோடு, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
இரண்டாம்நிலைக் காவலர் பணியிடத்திற்கான போட்டித்தேர்வில், தமிழ்நாட்டின் மிகச்சிறந்த சமுதாய சீர்திருத்தவாதி யார் என்ற கேள்வியும் கேட்கப்பட்டுள்ளது. பெரியார் பற்றிய சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், இந்தக் கேள்வி முக்கியத்துவம் பெற்றுள்ளது. தமிழகக் காவல்துறை, தீயணைப்புத்துறை ஆகிய துறைகளில் காலியாக உள்ள 6140 இரண்டாம் நிலைக்காவலர் அந்தஸ்திலான பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு, தமிழகம் முழுவதும் இன்று (மார்ச் 11, 2018) நடந்தது. 232 மையங்களில் சுமார் 3 லட்சம் பேர் தேர்வெழுதினர். இத்தேர்வு மொத்தம் 80 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டது. பொது அறிவு பகுதியில் இருந்து 50 வினாக்களும், உளவியல் பிரிவில் இருந்து 30 வினாக்களும் கேட்கப்பட்டன. இத்தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 28 மதிப்பெண்கள் பெற வேண்டும். அவர்களுக்கு உடற்திறன் தேர்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படும். எழுத்துத்தேர்வுக்கான கால வர...
எதிர்ப்புகளை எப்படி எதிர்கொண்டார் பெரியார்?

எதிர்ப்புகளை எப்படி எதிர்கொண்டார் பெரியார்?

அரசியல், ஈரோடு, கடலூர், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பெரியார் சிலைகளை தகர்ப்போம் என்ற ஹெச்.ராஜாவுக்கு கடும் கண்டனங்கள் தீக்கனலாய் பரவி வரும் நிலையில், அவரும் பாஜகவினரும் பெரியார் தன் மீதான எதிர்ப்புகளை எப்படியெல்லாம் எதிர்கொண்டு, நெஞ்சுரத்துடன் களமாடினார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்று யுனெஸ்கோ அமைப்பே பாராட்டிய ஒப்பற்ற சமூகப் போராளியான பெரியாரின் ஒட்டுமொத்த பயணமும் திராவிடர்களுக்கானது; தமிழர்களுக்கானது. அவருடைய பயணத்தில் அவர் எதிர்கொண்ட எதிர்ப்புகளும், அவற்றை எதிர்கொண்ட விதமும் பற்றிய சில பதிவுகள் இங்கே... திராவிடர் கழகத்தினர், சேலத்தில் 1971ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதி மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாடு ஒன்றை நடத்தினர். அந்த மாநாட்டையொட்டி ஓர் ஊர்வலம் நடத்தப்பட்டது. அதில், திராவிடர் கழகத்தினர் ஹிந்து மத கடவுளர்களை அவமதித்ததாகக் கூறி, அவருடைய எதிர்ப்பாளர்கள் பெரியார் படத்தை எரித்தும், செருப்பால் அடித...
பெரியார், பாரதிதாசன் பல்கலைகளுக்கு புதிய துணைவேந்தர்கள் நியமனம்

பெரியார், பாரதிதாசன் பல்கலைகளுக்கு புதிய துணைவேந்தர்கள் நியமனம்

கோயம்பத்தூர், சிவகங்கை, சேலம், தமிழ்நாடு, திருச்சி, முக்கிய செய்திகள்
சேலம் பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கு புதிய துணைவேந்தர்களை நியமித்து, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று (ஜனவரி 6, 2018) உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு பேராசிரியர் குழந்தைவேலு புதிய துணை வேந்தராக நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் தற்போது, கோவை பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். அதேபோல், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் அறிவியல் துறை புல முதன்மையராக பணியாற்றி வரும் பேராசிரியர் பி.மணிசங்கர், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் விரைவில் பதவியேற்பார்கள் எனத்தெரிகிறது....
சாதி ஆணவப் படுகொலையும் நீதிமன்ற தீர்ப்பும்!

சாதி ஆணவப் படுகொலையும் நீதிமன்ற தீர்ப்பும்!

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, திண்டுக்கல், திருப்பூர், முக்கிய செய்திகள்
உடுமலை சங்கர் ஆணவப் படுகொலை வழக்கில் திருப்பூர் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, வரலாற்றின் பக்கங்களில் நீடித்து நிலைத்து நிற்கும். ஆனால், இந்த தீர்ப்பு சமூக அடுக்குகளில் படிந்திருக்கும் சாதிய உணர்வுகளுக்கு சாவு மணி அடித்திருக்கிறதா என்றால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. ''கேளடா மானிடாவா எம்மில் கீழோர் மேலோர் இல்லை'' என்று சாதிக்கு எதிராக புரட்சி கீதம் பாடிய பாரதியின் பிறந்த நாளுக்கு மறுநாள் (டிசம்பர் 12, 2017), இந்திய திருநாடே அதுவரை எதிர்பார்த்திராத ஒரு தீர்ப்பை, திருப்பூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி அலமேலு நடராஜன் வழங்கினார். உடுமலை சங்கரின் காதல் மனைவி கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்பட 6 பேருக்கு இரட்டை தூக்கு தண்டனையும், ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், மற்றொருவருக்கு 5 ஆண்டுகள் தண்டனையும் வழங்கினார் நீதிபதி. அதுவும், ஒரு பெண் நீதிபதியே இப்படி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க...
கம்யூனிஸம் + பெரியாரிஸம் = கமலிஸம்!

கம்யூனிஸம் + பெரியாரிஸம் = கமலிஸம்!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
திராவிட சிந்தனையை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் முகமாகவே கமல்ஹாசனின் அரசியல் செயல்பாடுகள் அமையும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் பலமாக உருவாகி உள்ளன. ஜல்லிக்கட்டு போராட்டம் வலுப்பெற்ற நேரத்தில் இருந்தே கமலின் அரசியல் விமர்சனங்கள் சமூகவலைத்தளங்களில் ரொம்பவே 'வைரல்' ஆகி வருகின்றன. பல படங்களில், கமல் பேசிய முற்போக்கு வசனக் காட்சிகளை அவருடைய ரசிகர்கள் தேடிப்பிடித்து 'வைரல்' ஆக்கி வருகின்றனர். தமிழ் சினிமாக்களில் அவர் எந்தளவுக்கு திராவிடம் பேசினாரோ, அதற்கு நிகராக வைணவக் கருத்துகளையும், கடவுள் மீதான நம்பிக்கைகளையும் எதிர் பாத்திரங்கள் மூலம் வார்த்தெடுத்திருக்கிறார். ஒருவேளை, தன் கருத்துகளை ஆழமாகச் சொல்வதற்காக அத்தகைய பாத்திரங்களை சித்தரித்திருக்கலாம். அல்லது, வணிக நோக்கமாக இருக்கலாம். எனினும், தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் கமல்ஹாசன், பெரியாரிஸத்தையோ, பொதுவ...
பூவனம்: நீரில் ஆடும் நிலா (கவிதை)

பூவனம்: நீரில் ஆடும் நிலா (கவிதை)

இலக்கியம், திண்டுக்கல், புத்தகம், மதுரை
நீரில் ஆடும் நிலா...!  திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த கவிஞர் பெ.அறிவுடைநம்பி எழுதி இருக்கிறார். தமிழக அரசின் கதர் வாரியத்தில் பணியாற்றி, ஓய்வுபெற்றவர். பல்வேறு சிற்றிதழ்களிலும் இவருடைய படைப்புகள் வெளியாகி உள்ளன. கவிஞர் மு.மேத்தாவின் முன்னுரையுடன், திண்டுக்கல் அய்யனார் பதிப்பகம் நூலை வெளியிட்டு உள்ளது. நூலில் இருந்து... கீழே விழுவது புவி ஈர்ப்பு மேலே எழுவது விலைவாசி அது நியூட்டன் விதி இது அரசியல் சதி என நையாண்டி செய்கிறார். ஒவ்வொருமுறை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயரும்போதும் நாட்டில் விலைவாசியும் உயர்ந்து விடுகிறது என்பதை அனுபவ ரீதியாக அறிந்தவர்தானே நம் கவிஞர். மற்றொரு இடத்தில், தீச்சட்டி எடுப்போம் பேருந்தையும் உடைப்போம் இது நேர்த்திக்கடன்! என்று சமீபத்திய தமிழக அரசியல் நிகழ்வுகளை பகடி செய்கிறார். இதைவிட கவிஞரின் இன்னொரு நுட்பமான பதிவு, ந...