செவிலியர், மருந்தாளுநர் படிப்புகளுக்கு விண்ணப்பம் வரவேற்பு
செவிலியர், மருந்தாளுநர் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அறிவித்துள்ளது.
பிளஸ்2 தேர்ச்சி பெற்ற பிறகு அடுத்து என்ன படிக்கலாம் என்ற யோசனையில் இருக்கும் மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் மட்டுமின்றி, துணை மருத்துவப் படிப்புகளும் எளிதில் வேலைவாய்ப்பு அளிக்கும் துறையாக உள்ளது. துணை மருத்துவப் படிப்புகளில் சேர நீட் உள்ளிட்ட எந்த ஒரு தகுதித் தேர்வும் தேவை இல்லை.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகள் மற்றும் அவற்றைச் சார்ந்த கல்லூரிகளில் 2026 - 2027ம் கல்வி ஆண்டில், துணை மருத்துவப் படிப்புகளில் சேர பிளஸ்2 மாணவர்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. டிகிரி, டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
அனைத்து வகை துணை மற்றும் அலைடு ஹெல்த்கேர் படிப்புகளுக்கும் ஆன்லைன் மூலம் மட...

