Monday, September 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

இளநிலை துணை மருத்துவ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்!

பிஎஸ்சி நர்சிங் உள்ளிட்ட இளநிலை துணை மருத்துவப் படிப்புகளில் சேர மாணவ, மாணவிகள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு மருத்துவக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட
நேரடி மருத்துவப் படிப்புகள்
மட்டுமின்றி அத்துறையைச் சார்ந்த
ஏராளமான தொழில்சார் துணை
மருத்துவப் படிப்புகளும் இருக்கின்றன.
சான்றாக, பிஎஸ்சி செவிலியர்,
ரேடியோதெரபிஸ்ட், இமேஜிங்
டெக்னீஷியன் உள்ளிட்ட
படிப்புகளைச் சொல்லலாம்.

எந்த விதமான
நுழைவுத்தேர்வுகளுமின்றி,
முற்றிலும் பிளஸ்2 மதிப்பெண்
மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில்
மட்டுமே இதுபோன்ற துணை
மருத்துவப் படிப்புகளில்
சேர்க்கை நடத்தப்படுகிறது.

இந்நிலையில்,
இளநிலை பிரிவில் துணை
மருத்துவப் படிப்புகளில் சேர
மாணவ, மாணவிகளிடம் இருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படும்
என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி,
தமிழகத்தில் நடப்பு 2021 – 2022ம்
கல்வி ஆண்டிற்கான மருத்துவம்
சார்ந்த படிப்புகளுக்கு மாணவர்
சேர்க்கை தொடங்கி உள்ளது.

இதையடுத்து பிஎஸ்சி நர்சிங்,
செவித்திறன் பேச்சு மற்றும் மொழி
நோய்க்குறியியல் பட்டப்படிப்பு,
பிபிடி, பிஎஸ்இ ரேடியோகிராபி மற்றும்
இமேஜிங் டெக்னாலஜி,
பிஎஸ்சி ரேடியோதெரபி டெக்னாலஜி,
பிஎஸ்சி கார்டியோ பல்மனரி
பர்பியூஷன் டெக்னாலஜி;

பிஎஸ்சி மெடிக்கல்
லெபாரட்டரி டெக்னாலஜி,
ரெஸ்பரேட்டரிதெரபி,
பிஓடி, பி.ஆப்டம்,
பிஎஸ்சி நியூரோ எலக்ட்ரோ பிசியாலஜி,
பிஎஸ்சி கிளினிக்கல் நியூட்ரிஷியன்
ஆகிய துணை மருத்துவப்படிப்புகளில்
சேர மாணவ, மாணவிகள்
விண்ணப்பிக்கலாம்.

மாணவ, மாணவிகள் விரும்பும்
துறைகளில் சேர உரிய
விண்ணப்பத்தை முழுமையாக
பூர்த்தி செய்து, இணையதளத்தில்
பதிவேற்றம் செய்த பிறகு,
அதை அச்சுப்படி எடுத்து
அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் மற்றும் தகவல்
தொகுப்பேடுகளை
www.tnhealth.tn.gov.in,
www.tnmedicalselection.org
ஆகிய இணையதளங்களில் இருந்து
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இணையதளம் வாயிலாக
அக். 25ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை பதிவு செய்ய
கடைசி நாள் நவம்பர் 8ம் தேதி ஆகும்.
அதேபோல் பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான
கடைசி நாள் நவம்பர்
10ம் தேதி ஆகும்.

இவ்வாறு தமிழ்நாடு
மருத்துவக்கல்வி இயக்ககம்
தெரிவித்துள்ளது.

 

– பேனாக்காரன்