Saturday, December 7மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: Panwarilal Purohit

தமிழ்த்தாய்க்கு அவமரியாதை; விஜயேந்திரா, மண்டியிட்டு மன்னிப்புக்கேள்!

தமிழ்த்தாய்க்கு அவமரியாதை; விஜயேந்திரா, மண்டியிட்டு மன்னிப்புக்கேள்!

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு எழுந்து நிற்காத காஞ்சி காமகோடி பீட இளைய மடாதிபதி விஜயேந்திரர், தமிழ்த்தாய் சிலை முன்பு மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். காஞ்சி மடம் அளித்துள்ள பதிலும், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் தந்தை எஸ்.ஹரிஹரன் எழுதிய தமிழ் சமஸ்கிருதம் அகராதி நூல் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று (ஜனவரி 23, 2018) நடந்தது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நூலை வெளியிட, சமஸ்கிருத பாரதியின் தேசிய அமைப்பு பொது செயலாளர் தினேஷ் காமத் பெற்றுக் கொண்டார். விழாவில், காஞ்சி காமகோடி பீடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திரர், பேராசிரியர் சாலமன் பாப்பையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின்போது, 'நீராருங் கடலுடுத்த...' எனத்தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் இசைக்கப்பட்டது. வழக்...
தமிழக அரசு ஆஹா…ஓஹோ…!; ஆளுநர் உரையில் பாராட்டு; முழு விவரம்

தமிழக அரசு ஆஹா…ஓஹோ…!; ஆளுநர் உரையில் பாராட்டு; முழு விவரம்

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக சட்டப்பேரவை நடப்பு ஆண்டில் முதல்முறையாக ஆளுநர் உரையுடன் இன்று (ஜனவரி 8, 2017) தொடங்கியது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ஆங்கிலத்தில் தனது உரையை வாசித்தார். முன்னதாக அவர், 'அனைவருக்கும் வணக்கம்' என்று தமிழில் கூறினார். இடையில் எதிர்க்கட்சிகள் கூச்சலிட்டபோதும், 'உட்காருங்க' என்று தமிழில் பேசினார். தமிழகத்தில் நிதி பற்றாக்குறை இருப்பினும் நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவது பாராட்டுக்குரியது. தமிழகத்தை வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்வதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பாராட்டினார். ஆளுநர் உரையின் முழு விவரம்: மறைந்த முதல்வர் ஜெயலலிதா காட்டிய வழியில் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்கள் நலத்திட்டங்கள் நல்ல முறையில் இடைவிடாது செயல்படுத்தப்படுகின்றன. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக...
பெரியார், பாரதிதாசன் பல்கலைகளுக்கு புதிய துணைவேந்தர்கள் நியமனம்

பெரியார், பாரதிதாசன் பல்கலைகளுக்கு புதிய துணைவேந்தர்கள் நியமனம்

கோயம்பத்தூர், சிவகங்கை, சேலம், தமிழ்நாடு, திருச்சி, முக்கிய செய்திகள்
சேலம் பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கு புதிய துணைவேந்தர்களை நியமித்து, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று (ஜனவரி 6, 2018) உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு பேராசிரியர் குழந்தைவேலு புதிய துணை வேந்தராக நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் தற்போது, கோவை பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். அதேபோல், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் அறிவியல் துறை புல முதன்மையராக பணியாற்றி வரும் பேராசிரியர் பி.மணிசங்கர், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் விரைவில் பதவியேற்பார்கள் எனத்தெரிகிறது....
கருணாநிதியை சந்தித்தபோது மோடி சொன்னது என்ன?

கருணாநிதியை சந்தித்தபோது மோடி சொன்னது என்ன?

அரசியல், சென்னை, முக்கிய செய்திகள்
பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று (நவம்பர் 6, 2017) காலை சென்னை வந்தார். முன்னதாக அவர் தினத்தந்தி நாளிதழின் பவள விழாவில் கலந்து கொண்டார். அதையடுத்து அவர் திமுக தலைவர் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று நேரில் சந்தித்தார். திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தார். கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்த நரேந்திர மோடி, ஓய்வு எடுப்பதற்காக டெல்லியில் உள்ள தனது இல்லத்திற்கு வருமாறு கருணாநிதிக்கு அழைப்பு விடுத்தார். மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது கருணாநிதிக்கு தொண்டையில் டிரக்கியாஸ்டமி உபகரணம் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அந்த உபகரணம் அகற்றப்பட்டு, தொண்டையில் தையல் போடப்பட்டு உள்ளது. இன்னும் அந்த தையல் பிரிக்கப்படவில்லை. இதனால் அவரால் உரக்கப் பேச முடியவில்லை. பணி மூப்...
தமிழக ஆளுநர் பொறுப்பில் இருந்து வித்யாசாகர் ராவ் விடுவிக்கப்பட்டது ஏன்?; பரபரப்பு தகவல்கள்

தமிழக ஆளுநர் பொறுப்பில் இருந்து வித்யாசாகர் ராவ் விடுவிக்கப்பட்டது ஏன்?; பரபரப்பு தகவல்கள்

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழகத்தில் கிட்டத்தட்ட ஓராண்டாக பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் விடுவிக்கப்பட்டதன் பின்னணி குறித்து பரபரப்பு தகவல்கள் உலா வருகின்றன. தமிழக ஆளுநராக இருந்த ரோசய்யா கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற்றார். அதையடுத்து, புதிய ஆளுநர் நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மஹாராஷ்டிரா மாநில ஆளுநரான வித்யாசாகர் ராவ், தமி-ழக பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஜெயலலிதா உடல்நலக்குறைவு, அவருடைய மரணம், ஆளுங்கட்சியில் பிளவு போன்ற அரசியல் பரபரப்பு நிலவிய காலங்களில் நேரடி ஆளுநர் இருந்திருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை முன்னெப்போதும் இல்லாத நடைமுறையை நடுவண் பாஜக அரசு மேற்கொண்டது. ஒருகட்டத்தில், முதல்வர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் விலக்கப்பட்டு, வி.கே.சசிகலா பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது அவரை முதல்வராக பதவியேற்க ஆளுநர் முறைப்படி அழ...