Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Pandya

நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா: 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா: 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
முதல் ஒருநாள் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பழி தீர்க்கும் வகையில் இரண்டாவது போட்டியில் விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தை பந்தாடி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இரண்டாவது போட்டி இன்று (அக். 25, 2017) மகாராஷ்டிராவில் உள்ள புனேயில் நடந்தது. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் 'பேட்டிங்' தேர்வு செய்தார். இந்திய அணியில் குல்தீப் நீக்கப்பட்டு அக்சர் படேல் வாய்ப்பு பெற்றார். பந்துவீச்சு அபாரம் நியூசிலாந்து அணிக்கு கப்டில், முன்ரோ ஜோடி ஏமாற்றியது. புவனேஷ்வர் 'வேகத்தில்' கப்டில் (11) ஆட்டமிழந்தார். பும்ரா பந்தில் கேப்டன் வில்லியம்சன் (3) சிக்கினார். முன்ரோ 10 ரன்களில் அவுட்டானார். பின், இணைந்த ராஸ் டெய்லர், லதாம் ஜோடி ந
ஆஸியை வீழ்த்தியது இந்தியா:  குல்தீப் ‘ஹாட்ரிக்’ சாதனை!

ஆஸியை வீழ்த்தியது இந்தியா: குல்தீப் ‘ஹாட்ரிக்’ சாதனை!

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது. குல்தீப் யாதவ் 'ஹாட்ரிக்' விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனை படைத்தார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி, 5 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி-20 போட்டிகளில் விளையாடுகிறது. கடந்த 17ம் தேதி சென்னையில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் இரண்டாவது ஒரு நாள் போட்டி, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று (செப். 21) நடந்தது. சதத்தை நழுவவிட்ட கோஹ்லி: டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி, முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் ஷர்மா 7 ரன்களில் ஆட்டமிழந்து, ஏமாற்றம் அளித்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ரஹானே, கேப்டன் விராட் கோஹ்லி ஆகியோர் அபாரமாக ஆடி அரை சதம் கடந்தனர். ரஹானே 5