முதல் டி-20: இந்தியா அபார வெற்றி; புவி. 5 விக்கெட் வீழ்த்தி புதிய சாதனை
ஜோகன்னஸ்பர்கில் இன்று (பிப்ரவரி 18, 2018) நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர்குமார் 5 விக்கெட் வீழ்த்தி புதிய சாதனை படைத்தார்.
தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ட்வென்டி-20 தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி ஜோகன்னஸ்பர்கில் இன்று நடந்தது.
'டாஸ்' வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் டுமினி, முதலில் பந்து வீச தீர்மானித்தார். இந்திய அணியில் சுழல் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு, வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனத்கட் இடம் பெற்றார்.
ஓர் ஆண்டு இடைவெளிக்குப் பின்னர், சுரேஷ் ரெய்னா மீண்டும் அணியில் இணைந்தார். தென்னாப்பிரிக்கா அதிரடி ஆட்டக்காரர் ஏபி டி வில்லியர்ஸ், காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. கிளாசன், டாலா அறிமுகமா...