Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: naam thamizhar

”அரசாங்கத்தை தனியாரிடம் விற்றுவிடுங்கள்!”- சீமான் ஆவேசம்

”அரசாங்கத்தை தனியாரிடம் விற்றுவிடுங்கள்!”- சீமான் ஆவேசம்

அரசியல், சேலம், முக்கிய செய்திகள்
எல்லா துறைகளிலும் தனியார்தான் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்றால் அரசாங்கம் எதற்கு? அதையும் தனியாருக்கு ஏலம் விட்டுவிட வேண்டியதுதானே? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக கூறினார்.   சேலம் மாவட்டம் காமலாபுத்தில் 160 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக காமலாபுரம், சிக்கனம்பட்டி, சட்டூர், பொட்டியபுரம், தும்பிப்பாடி ஆகிய கிராமங்களில் 570 ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது.   இதற்கு அந்த கிராமங்கங்களைச் சேர்ந்த மக்கள், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தவிர, சென்னை - சேலம் எட்டு வழிச்சாலைக்காகவும் சேலம் மாவட்டத்தில் 18 கிராமங்களில் விளை நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இத்திட்டத்தை எதிர்த்தும் விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நி
மோடி ஒரு சர்வதேச புரோக்கர்! – சேலத்தில் சீமான் ஆவேசம்!!

மோடி ஒரு சர்வதேச புரோக்கர்! – சேலத்தில் சீமான் ஆவேசம்!!

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  முதல்வர் என்பவர் உள்ளூர் புரோக்கர். பிரதமர் என்பவர் இன்டர்நேஷனல் புரோக்கர் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் அழைப்பின்பேரில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று (மே 12, 2018) சேலம் வந்திருந்தார். ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்த கன்னங்குறிச்சி மூக்கனேரியை, பியூஷ் மானுஷ் மற்றும் தன்னார்வலர்கள் ஒருங்கிணைந்து சீரமைத்து, பொலிவுறு ஏரியாக மாற்றினர். ஏரியின் அழகை, சீமான் பரிசலில் சென்று கண்டு ரசித்தார். பின்னர் ஏரிக்கரையில் மரக்கன்றுகளை நட்டார். அதையடுத்து, சேலத்தில் கிடப்பில் போடப்பட்ட திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கான இடத்தை நேரில் பார்வையிட்டார்.     சேலம் விமான நிலையத்திற்காக நிலம் கொடுத்த விவசாயி கந்தசாமி சில நாள்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். அவரு
விடுதலை புலிகள் பெயரில் கோடிக்கணக்கில் வசூல்!; சீமானின் முகத்திரையை கிழித்த வைகோ!!

விடுதலை புலிகள் பெயரில் கோடிக்கணக்கில் வசூல்!; சீமானின் முகத்திரையை கிழித்த வைகோ!!

அரசியல், தமிழ்நாடு, மதுரை, முக்கிய செய்திகள்
விடுதலைப்புலிகளின் பிரதிநிதி என்று கூறி உலக நாடுகளிடம் கோடிக்கணக்கில் வசூலிப்பதாகவும், அவர் பிரபாகரனுடன் இருப்பதுபோல் கிராஃபிக்ஸில் புகைப்படம் உருவாக்கிக் கொண்டதாகவும் நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் குறித்து மதிமுக தலைவர் வைகோ இன்று (ஏப்ரல் 4, 2018) கடுமையாக விமர்சித்துள்ளார். சீமான் தலைமையிலான நாம் தமிழர் இயக்கம், மதிமுக தலைவர் வைகோவை ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து கேலிச்சித்திரங்களை வெளியிட்டு வருகிறது. குறிப்பாக வைகோவை தெலுங்கு நாயக்கர் என்று சாதி பெயரைச் சொல்லி சீமான் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், நியூட்ரினோ திட்டத்தைக் கண்டித்து நடைப்பயணம் மேற்கொண்டுள்ள வைகோ, பயணத்தின் இடையே இன்று (ஏப்ரல் 4, 2018) ஊடகத்தினரைச் சந்தித்தார். அப்போது சீமான் கட்சியினர் வைகோவை விமர்சித்து வருவது குறித்து அவரிடம் வினா எழுப்பப்
மெர்சல்: கட் + காப்பி + பேஸ்ட் = அட்லீ

மெர்சல்: கட் + காப்பி + பேஸ்ட் = அட்லீ

சினிமா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
விஜய் நடிப்பில் அண்மையில் திரைக்கு வந்திருக்கும் மெர்சல் திரைப்படம் தமிழ், ஆங்கிலம் உள்பட ஏழெட்டு திரைப்படங்களின் கூட்டுக் கலவையாக வெளிவந்திருப்பதாக எதிர்மறை விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. மலையாளம், வங்கமொழிப் படங்களைப்போல தமிழ் படங்களில் கதையின் அடர்த்தி வலுவாக இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு ரொம்ப காலமாகவே சொல்லப்படுவது உண்டு. அண்மைக்காலமாக தெலுங்கில் கூட நிறைய பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழில் இன்னும் அத்தகைய போக்கு வேகமெடுக்கவில்லை. ஆனால், பரீட்சார்த்த முயற்சிகள் அரிதாக முன்னெடுக்கப்படாமலும் இல்லை. இளம் இயக்குநர்களின் 'ஆரண்ய காண்டம்', 'அழகர்சாமியின் குதிரை', 'காக்காமுட்டை', 'குற்றமே தண்டனை', 'குற்றம் கடிதல்', 'ஒரு கிடாயின் கருணை மனு', 'குரங்குபொம்மை' போன்ற வித்தியாசமான முயற்சிகள் பரவலாக கவனம் பெற்றன. இந்தப்படங்களில் சில, வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றன.