Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: movie review

விக்ரம் – சினிமா விமர்சனம்! ”நல்லதைக்கூட முகமூடி போட்டுக்கிட்டுதான் செய்ய வேண்டியது இருக்கு!”

விக்ரம் – சினிமா விமர்சனம்! ”நல்லதைக்கூட முகமூடி போட்டுக்கிட்டுதான் செய்ய வேண்டியது இருக்கு!”

சினிமா, முக்கிய செய்திகள்
விக்ரம் - விமர்சனம் நடிகர்கள்: கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, ஸ்வாதிஸ்தா மற்றும் பலர். இசை: அனிருத் ஒளிப்பதிவு: ஹரிஷ் கங்காதரன் ஆக்ஷன்: அன்பறிவ் எடிட்டிங்: பிலோமின் ராஜ் தயாரிப்பு: ராஜ்கமல் பிலிம்ஸ் இயக்கம்: லோகேஷ் கனகராஜ்   கதை என்ன?:   காவல்துறை அதிகாரியான தன் மகனை டிரக் மாபியா கும்பல் கொலை செய்து விடுகிறது. மகனை இழந்த, முன்னாள் ரா ஏஜன்ட் கமல்ஹாசன், அந்த கும்பலை கண்டுபிடித்து அழித்தாரா? போதைப்பொருள் இல்லாத உலகத்தை படைத்தாரா? என்பதுதான் படத்தின் ஒரு வரி கதை.   திரைமொழி:   படத்தின் துவக்கத்திலேயே, பத்தல... பத்தல... பாடலில் அதகளம் செய்கிறார் கமல். அடுத்த காட்சியிலேயே அவரை முகமூடி அணிந்த கும்பல் ஒன்று, கிரானைட் வெடிகுண்டு வீசி கொடூரமாக கொலை செய்து விடுகிறது. அவருடன் காளிதாஸ், ஹ
‘அரங்கேற்றம்’ லலிதாக்கள் இன்னும் இருக்கிறார்கள்! – திரை விமர்சனம்

‘அரங்கேற்றம்’ லலிதாக்கள் இன்னும் இருக்கிறார்கள்! – திரை விமர்சனம்

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
அடுத்தடுத்து 'வதவத' என்று பிள்ளைக்குட்டிகளை பெற்றுப் போட்டதைத் தவிர வேறு எந்த சாதனையும் செய்யாத தந்தை, கஞ்சிக்கே வக்கற்ற நிலையிலும் மனசு முழுக்க இலட்சம் கனவுகளை சுமந்து கொண்டு வாழும் தங்கைகள், தம்பிகளுக்காக தன்னையே தியாகம் செய்யும் லலிதாவின் வாழ்வில் ஏற்பட்ட துயரங்களையும், ஏமாற்றங்களையும் பட்டவர்த்தனமாக முகத்தில் அறைந்தாற்போல் பேசுகிறது அரங்கேற்றம்.   என்னதான் நாம் ஸ்விக்கி, ஸோமாட்டோ நாகரீகத்திற்குள் நுழைந்துவிட்டாலும், மூன்றாம் நபரின் அந்தரங்க செயல்பாடுகளை கூச்சமே இல்லாமல் முதுகுக்குப் பின்னால் கிசுகிசுப்பது இப்போதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதனாலேயே நாம் அந்த நாலு பேரைக் கண்டு சில வேளைகளில் அஞ்சவும் வேண்டியதிருக்கிறது. கதைதான் என்றாலும், 46 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு பெண்ணை மையமாக வைத்து, காலவெளியை உடைத்துக்கொண்டு முழு கதையையும் திரையில் விவரிக்க மு
நாச்சியார் – சினிமா விமர்சனம்

நாச்சியார் – சினிமா விமர்சனம்

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
இயக்குநர் பாலாவிடம் இருந்து சற்றே மாறுபட்ட கோணத்தில், இன்று உலகம் முழுவதும் வெளிவந்திருக்கும் படம், நாச்சியார். காவல்துறை அதிகாரி அவதாரம், ஜி.வி.பிரகாஷின் குப்பத்து பையன் தோற்றம் என ஏகத்துக்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நாச்சியார், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா? என்பதை பார்க்கலாம். நடிப்பு: ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் குமார், இவானா, 'ராக்லைன்' வெங்கடேஷ் மற்றும் பலர். இசை: இளையராஜா ஒளிப்பதிவு: தேனி ஈஸ்வர் தயாரிப்பு: பி ஸ்டுடியோஸ் மற்றும் இஓஎன் ஸ்டுடியோஸ் இயக்கம்: பாலா   கதை என்ன? திருமணம் ஆகாத ஒரு மைனர் பெண் கர்ப்பிணி ஆகிறார். சந்தேகத்தின்பேரில் அந்த இளம்பெண்ணின் காதலனை காவல்துறை கைது செய்கிறது. குழந்தை பிறந்த பின்னர்தான் அந்தக் குழந்தைக்கும், கைதான இளைஞனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனத் தெரிகிறது. எனில், அந்த மைனர் பெண்ணை ஏமாற்றி கர்ப்பிணிய
குலேபகாவலி – சினிமா விமர்சனம்

குலேபகாவலி – சினிமா விமர்சனம்

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
நடனப்புயல் பிரபுதேவா நடிப்பில், 15 நாள் இடைவெளியில் வெளிவந்திருக்கும் இரண்டாவது படம், 'குலேபகாவலி'. உலகம் எங்கும் இன்று (ஜனவரி 12, 2018) வெளியாகி இருக்கிறது. நடிப்பு: பிரபுதேவா, ஹன்சிகா மோத்வானி, ரேவதி, 'முனீஸ்காந்த்' ராம்தாஸ், மன்சூர் அலிகான், ஆனந்தராஜ், யோகி பாபு, சத்யன் மற்றும் பலர்; இசை: விவேக் & மெர்வின்; ஒளிப்பதிவு: ஆனந்தகுமார்; தயாரிப்பு: கேஜேஆர்; இயக்கம்: கல்யாண். கதை என்ன?: பிரிட்டிஷ்காரர் ஒருவர் 1945ம் ஆண்டு, இந்தியாவை விட்டு வெளியேறுகிறார். அவர் செல்லும்போது, அவரிடம் இருக்கும் விலை உயர்ந்த வைரங்களை திருடும் இந்தியர் ஒருவர், அதை குலேபகாவலி என்ற கிராமத்தில் புதைத்து வைக்கிறார். பல ஆண்டுகள் கழித்து, அந்த இந்தியரின் பேரனுக்கு குலேபகாவலி கிராமத்தில் வைர புதையல் இருப்பது தெரிய வருகிறது. அதை எடுக்க இந்தியாவுக்கு வரும் அவர், சிலை கடத்தும் கும்பலிடம் அந்த பொறுப்பை ஒப்படை
சத்யா – சினிமா விமர்சனம்

சத்யா – சினிமா விமர்சனம்

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
காணாமல் போன பெண் குழந்தையை மீட்க போராடும் இளைஞன் சந்திக்கும் திடுக்கிடும் திருப்பங்களும், சிக்கல்களும்தான் சத்யா படத்தின் ஒன்லைன். நடிகர்கள்: சிபிராஜ், ரம்யா நம்பீசன், வரலட்சுமி சரத்குமார், ஆனந்தராஜ், சதீஸ், 'யோகி' பாபு, 'நிழல்கள்' ரவி; இசை: சைமன் கே கிங்; ஒளிப்பதிவு: அருண்மணி பழனி; எடிட்டிங்: கவுதம் ரவிச்சந்திரன்; தயாரிப்பு: நாதாம்பாள் பிலிம் பேக்டரி; இயக்கம்: பிரதீப் கிருஷ்ணமூர்த்தி. நாயகன் சத்யா (சிபிராஜ்) ஆஸ்திரேலியாவில் உள்ள ஓர் ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். அவருடன் யோகி பாபுவும் பணியாற்றுகிறார். திடீரென்று ஒருநாள் சிபிராஜிக்கு அவருடைய முன்னாள் காதலியான ரம்யா நம்பீசனிடம் இருந்து செல்போனில் அழைப்பு வருகிறது. சிபிராஜிடம் ரம்யா நம்பீசன் அவசரமாக ஓர் உதவி கேட்க, நாயகனும் இந்தியா திரும்புகிறார். தன் நான்கு வயது பெண் குழந்தை காணவில்லை என்றும், அவளை கண்டுபிடித்து தர வேண்டும
‘திருட்டுப்பயலே-2’ – சினிமா விமர்சனம்!

‘திருட்டுப்பயலே-2’ – சினிமா விமர்சனம்!

சினிமா, முக்கிய செய்திகள்
'இந்த உலகத்தில் யாருமே நல்லவர்கள் இல்லை. எல்லோருக்கும் இரண்டு முகங்கள் இருக்கின்றன. வாய்ப்பு கிடைத்தால் அனைவருமே தவறு செய்யக்கூடியவர்கள்தான். ஆகையால் எல்லோரையுமே சந்தேகிக்க வேண்டும்' என்ற செய்தியை உரத்துச் சொல்கிறது, 'திருட்டுப்பயலே-2' படம். நடிகர்கள்: பாபி சிம்ஹா, அமலா பால், பிரசன்னா, சுசி கணேசன், எம்எஸ் பாஸ்கர்; ஒளிப்பதிவு: செல்லதுரை; இசை: வித்யாசாகர்; தயாரிப்பு; ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்; கதை, திரைக்கதை, இயக்கம்: சுசி கணேசன். ஃபேஸ்புக் போன்ற சமூகவலைத்தளமே கதியாகக் கிடக்கும் ஒரு திருமணம் ஆன பெண்ணிற்கு, அதனூடாக அறிமுகம் ஆகும் ஓர் ஆணின் மூலமாக விரும்பத்தகாத நெருக்கடிகள் ஏற்படுகிறது. அந்த நெருக்கடியில் இருந்து அந்தப் பெண்ணை கணவர் காப்பாற்றினாரா?, ஃபேஸ்புக்கில் அறிமுகம் ஆன அந்த ஆண் அந்தக் குடும்பத் தலைவிக்கு எதற்காக குடைச்சல் கொடுக்கிறார்?, குடும்பத்தலைவியின் நிலை என்ன ஆனது? என்பதை
‘கருப்பன்’ – திரை விமர்சனம்!

‘கருப்பன்’ – திரை விமர்சனம்!

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆயுதபூஜை விடுமுறையைக் குறிவைத்து (செப். 29) வெளி வந்திருக்கும் படம் 'கருப்பன்'. நடிகர்கள்: விஜய் சேதுபதி, தான்யா, பாபி சிம்ஹா, பசுபதி, கிஷோர், சரத் லோகித்ஷ்வா, சிங்கம் புலி, ரேணுகா, காவேரி மற்றும் பலர். இயக்கம்: ஆர்.பன்னீர்செல்வம். இசை: டி.இமான். ஒளிப்பதிவு: சக்திவேல். தயாரிப்பு: ஏ.எம்.ரத்னம். 'ரேணிகுண்டா' படத்தின் மூலம் இளம் குற்றவாளிகளின் கதையைச் சொல்லி, கவனம் ஈர்த்த இயக்குநர் ஆர்.பன்னீர்செல்வம், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் விஜய் சேதுபதியின் தோளில் சவாரி செய்துள்ள படம்தான் 'கருப்பன்'. கிராமத்து மாடுபிடி வீரனின் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள்தான் இந்தப் படத்தின் ஒரு வரி கதை. ஆனால், தனக்குக் கிடைக்க வேண்டிய பெண், வேறு ஒருவருக்கு கிடைத்து விட்ட ஆற்றாமையில், ஓர் இளைஞன் என்னவெல்லாம் செய்கிறான் என்ற கோணத்தில் திரைக்கதை நகர்கிறது. அப்படி தான் ஆசைப்பட்ட கதாநாயகியை பறிகொடுத்த வில்லன்தா