Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: mandatory

சினிமா தியேட்டர்களில் தேசிய கீதம் கட்டாயமில்லை!; உச்சநீதிமன்றம்

சினிமா தியேட்டர்களில் தேசிய கீதம் கட்டாயமில்லை!; உச்சநீதிமன்றம்

இந்தியா, முக்கிய செய்திகள்
சினிமா திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை என்று உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. தேசப்பற்றை வளர்க்க, நாடு முழுவதும் உள்ள அனைத்து சினிமா திரையரங்குகளிலும் படம் தொடங்குவதற்கு முன்பு, கட்டாயம் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று கடந்த 2016ஆம் ஆண்டு, நவம்பர் 30ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஓர் உத்தரவில் குறிப்பிட்டு இருந்தது. தேசிய கீதம் இசைக்கப்படும்போது திரையில் தேசியக்கொடி இடம்பெற வேண்டும் என்றும் கூறியிருந்தது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு நாடு முழுவதும் ஆதரவு, எதிர்ப்பு என கலவையான விமர்சனங்கள் எழுந்தன. திரையரங்கத்திற்கு வரும் ரசிகர்கள் பலர், தேசிய கீதம் இசைக்கப்படும்போது அதற்கு மரியாதை செலுத்தும் வகையில் எழுந்து நிற்பதில்லை என்ற புகார்கள் எழுந்தன.   சில இடங்களில் தேசப்பற்று என்ற பெயரில், தேசிகீதத்தை அவமதிப்பதாகக் கூறி அப்பாவி மக்க
6ம் தேதி முதல் அசல் லைசென்ஸ் கட்டாயம்!

6ம் தேதி முதல் அசல் லைசென்ஸ் கட்டாயம்!

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
வாகன ஓட்டிகள், வரும் 6ம் தேதி முதல் அசல் ஓட்டுநர் உரிமத்தை உடன் வைத்திருக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாலை விபத்துகளை கட்டுப்படுத்த, வாகன ஓட்டிகள் செப். 1ம் தேதி முதல் அசல் ஓட்டுநர் உரிமத்தை உடன் வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. இதற்கு வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் அதிருப்தி கிளம்பியது. டிஜிட்டல் உலகத்தில், அசல் உரிமத்தை கையில் வைத்திருக்காமல், 'டிஜி லாக்கர்' முறையில் பதிவு செய்து கொண்டால் போதுமானது என்றெல்லாம் கருத்துகள் எழுந்தன. இதையெல்லாம் ஏற்க மறுத்த தமிழக அரசு, தனது உத்தரவில் உறுதியாக இருந்தது. இதை எதிர்த்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் சுகுமார் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த வாரம் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கை விச