Friday, April 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: local bodies

ஊழலில் திளைக்கும் ‘டாப் – 3’ துறைகள்! ஆய்வில் புதிய தகவல்கள்!!

ஊழலில் திளைக்கும் ‘டாப் – 3’ துறைகள்! ஆய்வில் புதிய தகவல்கள்!!

இந்தியா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
இந்தியாவில் ஊழலில் திளைக்கும் முதல் மூன்று துறைகள் என்னென்ன? எத்தனை பேர் அரசு சேவைகளைப் பெற லஞ்சம் கொடுக்கின்றனர் என்பது உள்ளிட்ட பல்வேறு பரபரப்பு தகவல்கள், டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நேஷனல் இந்தியா நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. உலகம் முழுவதும் லஞ்சம், ஊழலுக்கு எதிராக போராடி வரும் டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நேஷனல் இந்தியா (டிஐஐ) என்ற தன்னார்வ அமைப்பு, சர்வதேச அளவில் ஊழல் மலிந்த நாடுகளை ஆண்டுதோறும் பட்டியலிட்டு வருகிறது. அரசு மற்றும் சார்பு நிறுவன ஊழியர்கள் தங்களின் கடமையைச் செய்ய அல்லது கடமைகளைச் செய்யாமல் இருக்க கையூட்டு பெறுவதையே ஊழல் என வரையறுக்கிறது இந்திய தண்டனை சட்டம்.   ஊழல் தடுப்பு சட்டம்-2018ன் படி, லஞ்சம் கொடுப்பதும் குற்றம் என்கிறது. மேலும், அவ்வாறு லஞ்சம் கொடுப்பவருக்கும் அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும்
உள்ளாட்சி தேர்தலை நவ. 17க்குள் நடத்த ஹைகோர்ட் உத்தரவு

உள்ளாட்சி தேர்தலை நவ. 17க்குள் நடத்த ஹைகோர்ட் உத்தரவு

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை, வரும் நவம்பர் 17ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதன்படி கடந்த 2011ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அதிமுக, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தலை நடத்தி முடித்தது. அதைத்தொடர்ந்து கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேர்தலை நடத்தி முடித்தது. இந்நிலையில், உள்ளாட்சி மன்ற மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்தது. அடுத்த தேர்தலை நடத்துவதற்கான அறிவிக்கையும் வெளியிடப்பட்ட நிலையில், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு சரியாக பின்பற்றப்படவில்லை என்று திமுக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதன்பின், உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் இட ஒதுக்கீடு பணிகள் முழுமையாக