Wednesday, April 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: judgment

‘வாய்தா ராணி’, ‘ஓசி பயணம்…’ வாய்த்துடுக்கால் வீழ்ந்த பொன்முடி

‘வாய்தா ராணி’, ‘ஓசி பயணம்…’ வாய்த்துடுக்கால் வீழ்ந்த பொன்முடி

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விழுப்புரம்
ஜெயலலிதாவை வாய்தா ராணி என்றும், பெண்களுக்கான இலவச பேருந்துப் பயணத்தை ஓசி பயணம் என்றும் பொதுவெளியில் வாய்த்துடுக்கு காட்டிய அமைச்சர் பொன்முடிக்கு, சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை என்பதை சொந்தக் கட்சியினரே ரசிக்கின்றனர். தமிழகத்தில் தந்தை பெரியார் மீது ஈர்ப்பு கொண்டவர்கள், பேரறிஞர் அண்ணா, திராவிடர் முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கிய பிறகு அக்கட்சியை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர். அப்படி பெரியாரிய பட்டறையில் இருந்து திமுகவுக்குள் காலடி வைத்தவர்தான் பேராசிரியர் பொன்முடி. பொதுமேடை, அரசியல் மேடை என எந்த மேடயாக இருந்தாலும் திராவிட சித்தாந்தங்களைப் பேசாமல் இருக்கவே மாட்டார். அந்தளவுக்கு திராவிட சிந்தனைகளில் ஊறிப்போனவர். திராவிட இயக்கத்தின் மீது பொன்முடி கொண்ட சித்தாந்த பிடிப்பைச் சுட்டிக்காட்ட, அவர் எழுதிய, 'The Dravidian Movement and the Black Movement' என்ற ஒரு புத்தகமே போதுமா
சேலம் சிறுமி கூட்டு வன்புணர்வு செய்து கொலை!; பாமக பிரமுகர் உள்ளிட்ட ஐவர் மீதான வழக்கில் மார்ச் 19ல் தீர்ப்பு!

சேலம் சிறுமி கூட்டு வன்புணர்வு செய்து கொலை!; பாமக பிரமுகர் உள்ளிட்ட ஐவர் மீதான வழக்கில் மார்ச் 19ல் தீர்ப்பு!

குற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் அருகே, பத்து வயது சிறுமியை துடிதுடிக்க கூட்டு வன்புணர்வு செய்து படுகொலை செய்த வழக்கில், வரும் 19ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சேலம் மாவட்ட மகளிர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.   சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சென்றாயம்பாளையத்தைச் சேர்ந்தவர் பரமசிவம். தறித்தொழிலாளி. இவருக்கு பத்து வயதில் பூங்கொடி என்ற மகள் உள்பட மொத்தம் மூன்று குழந்தைகள். கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி இரவு, சிறுமி பூங்கொடி சகோதரிகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாள். அவளது பெற்றோர் அருகில் உள்ள தறிக்கூடத்தில் நெசவு நெய்து கொண்டிருந்தனர். அதே பகுதியைச் சேர்ந்த ஒரு கும்பல், சிறுமியை பலவந்தமாக அருகில் உள்ள பெருமாள் கோயில் மலைக்குத் தூக்கிச்சென்று, துடிதுடிக்க கூட்டு வன்புணர்வு செய்துள்ளனர். இதில் அவள், ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்து போனாள். பின்னர் அவர்கள், சிறுமியை அங்க
அரசியல் அரங்கை தெறிக்கவிட்ட மோடி – கருணாநிதி சந்திப்பு!

அரசியல் அரங்கை தெறிக்கவிட்ட மோடி – கருணாநிதி சந்திப்பு!

அரசியல், இந்தியா, சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் விரைவில் தீர்ப்பு, நிலைகுலைந்த அதிமுக அரசாங்கம் போன்ற சூழலில் பிரதமர் நரேந்திர மோடி திடீரென்று திமுக தலைவர் கருணாநிதியை இன்று (நவம்பர் 6, 2017) கோபாலபுரம் இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து இருப்பது அரசியல் அரங்கில் பல்வேறு யூகங்களை எழுப்பி இருக்கிறது. தமிழக சட்டப்பேரவைக்குள் எந்த வகையிலாவது நுழைந்து விட வேண்டும் என்பதுதான் பாஜகவின் ஒரே குறிக்கோள். கிட்டத்தட்ட இந்தியாவின் 75 சதவீத பகுதிகளை தன் ஆளுகைக்குள் கொண்டு வந்துவிட்ட பாஜகவுக்கு தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாடு கடுமையான சவால்களை கொடுத்து வருகிறது. ஆட்சியைப் பிடிப்பது பெருங்கனவு; இப்போதைக்கு ஒன்றிரண்டு பேரையாவது எம்எல்ஏ ஆக்குவோம் என்பதுதான் அ க்கட்சியின் திட்டம். செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வெளியில் இருந்தே இன்னும் எவ்வளவு நாள்தான் கூவிக்கொண்டிருக்க முடியும்?. பாஜகவின் திட்டங்களை செயல்படுத்த
அந்தரங்கத்தை உளவு பார்க்கக் கூடாது : ஆதார் வழக்கில் ‘குட்டு’

அந்தரங்கத்தை உளவு பார்க்கக் கூடாது : ஆதார் வழக்கில் ‘குட்டு’

இந்தியா, முக்கிய செய்திகள்
புது டில்லி: தொழில்நுட்பம் என்ற பெயரில் பிறரின் அந்தரங்கத்தை உளவு பார்ப்பது, மாண்பை குலைக்கும்  செயல் என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு குட்டு வைத்துள்ளது. ஆதார் அடையாள அட்டையை அரசு சேவைகளுக்கு கட்டாயமாக்குவது தனிப்பட்ட உரிமையை மீறும் செயல் என்ற வழக்கை 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சு விசாரித்தது. அந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியது. அந்தரங்க உரிமை என்பது அரசியல் சாசனத்தில் கூறியுள்ளபடி அடிப்படை உரிமைதான் என்று இந்த பெஞ்ச் அதிரடி தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பின் முக்கிய அம்சம்: ஒருவர், தனது வீட்டுக்குள் யாரை அனுமதிக்க வேண்டும் என்பது அவரது உரிமை. அவருடைய வீட்டில் ஒருவரை அனுமதித்தால், அனைவரையும் அனுமதிக்க வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது. வீட்டுக்குள் யார் வரவேண்டும் என்பது அவருடைய தனிப்பட்ட உரிமை. ஒரு வீட்டில் அந்தரங்கம் என்பது பாதுகாக்கப்பட வேண்டிய அம்சம். அதுதா