Tuesday, December 3மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: jaganathan

தீராப்பழியைச் சுமக்கப் போகிறீரா துணைவேந்தரே?

தீராப்பழியைச் சுமக்கப் போகிறீரா துணைவேந்தரே?

சிறப்பு கட்டுரைகள், சேலம், முக்கிய செய்திகள்
பெரியார் பல்கலை உதவி பேராசிரியர் பிரேம்குமார் மீதான, சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளுக்கு தீர்வு கிடைக்குமா? கிடைக்காதா? என்ற பரபரப்பான கட்டத்தில் இன்று (நவ. 22) 116ஆவது சிண்டிகேட் கூட்டம் நடக்கிறது.  சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில், வரலாற்றுத்துறை உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தவர் பிரேம்குமார். பல்கலை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளராகவும் இருக்கிறார். துடிப்பான இளைஞரான இவர், மாணவர்களுக்கும் நூலகத்திற்கும் இடையே அறுபட்டு இருந்த தொடர்பை மீண்டும் புத்துயிரூட்டினார். மாணவர்கள் அன்றாடம் நூலகத்தைப் பயன்படுத்துவதை நடைமுறைப் படுத்தியதோடு, போட்டித் தேர்வுகளுக்கும் தயார்படுத்தி வந்தார். மாணவர்கள் சிலருக்கு தேர்வுக்கட்டணம் கூட செலுத்தி இருக்கிறார். பல்கலையில் நடக்கும் விதிமீறல்கள், முறைகேடுகள் குறித்து அவ்வப்போது வெளிப்படையாக பேசி வந்ததை துணைவேந்தர், பதிவாளர் உள்ளிட்ட...
‘எவ்வளவோ செஞ்சிருக்கேன்… ஆனா அந்த மாஜி எம்.பி., கண்டுக்கவே இல்ல…!’ – துணைவேந்தர் புலம்பல்!!

‘எவ்வளவோ செஞ்சிருக்கேன்… ஆனா அந்த மாஜி எம்.பி., கண்டுக்கவே இல்ல…!’ – துணைவேந்தர் புலம்பல்!!

சேலம், முக்கிய செய்திகள்
சேலத்தில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு எப்போது பெரியார் என்ற கலகக்காரரின் பெயரைச் சூட்டினார்களோ அப்போது முதல் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை. வாழ்நாளெல்லாம் சாதி ஒழிப்பிற்காகப் போராடி வந்த பெரியாரின் பெயரில் அமைந்த பல்கலையில் குறிப்பிட்ட சில சாதிகளின் ஆதிக்கம் தொடர்ந்து வருகிறது. திமுக, அதிமுக எந்த அரசு ஆட்சியில் இருந்தாலும் சாதியவாதம் மேலோங்கி இருக்கிறது. குறிப்பாக, கடந்த பத்து ஆண்டுகளில் கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த சுவாமிநாதன், குழந்தைவேல், ஜெகநாதன் ஆகியோர் அடுத்தடுத்து துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் குழந்தைவேல், ஜெகநாதன் ஆகிய இருவரும் ஆர்எஸ்எஸ் பின்புலத்தோடு துணைவேந்தர் ஆனவர்கள் என்ற பேச்சும் உண்டு. இப்போதைய துணைவேந்தர் ஜெகநாதன், கடந்த 2021ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி பெரியார் பல்கலையில் பொறுப்பேற்றார். அவரின் பதவிக்காலம் கடந்த ஜூன் ...
”ஒருநாள் என்கூட இருக்கணும்!” தொண்டரின் மனைவிக்கு வலைவிரித்த சேலம் அதிமுக பிரமுகர்!

”ஒருநாள் என்கூட இருக்கணும்!” தொண்டரின் மனைவிக்கு வலைவிரித்த சேலம் அதிமுக பிரமுகர்!

குற்றம், சேலம், முக்கிய செய்திகள்
சேலம் அருகே, அதிமுக தொண்டர் ஒருவரின் மனைவியை அக்கட்சி பிரமுகரே பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் கட்சிக்குள் மட்டுமின்றி உள்ளூரிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள ஏர்வாடியைச் சேர்ந்தவர் ஜெகநாதன். அதிமுகவில் பனமரத்துப்பட்டி ஒன்றிய செயலாளராகவும், பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவராகவும் இருக்கிறார். இவருடைய மனைவி அமுதா. ஏர்வாடி ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார். உள்ளூரில் இக்குடும்பத்திற்கு அரசியல் செல்வாக்கு உண்டு. அண்மையில், அவர் காமாட்சிக்காடு கிராமத்தைச் சேர்ந்த அதிமுக தொண்டர் ஒருவரின் மனைவி வீட்டில் தனியாக இருக்கும்போது, அவரிடம் 'அத்துமீறிய' சம்பவம், சேலம் மாவட்ட இலை கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.   பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், ஜெகநாதன் மீது மல்லூர் காவல்நிலையத்தில் ப...