Thursday, April 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: international

அருவி – சினிமா விமர்சனம்; “போலி சமூகத்தின் மீதான சாட்டையடி!”

அருவி – சினிமா விமர்சனம்; “போலி சமூகத்தின் மீதான சாட்டையடி!”

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சர்வதேச படவிழாக்களில் ஏற்கனவே பெரும் கவனத்தை பெற்ற 'அருவி', நேற்று (டிசம்பர் 15, 2017) திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. விருது படம் என்றாலே மெதுவாக நகரக்கூடியது, குறிப்பிட்ட சாராரைப் பற்றியது போன்ற இலக்கணங்களை எல்லாம் உடைத்து, இந்த சமுதாயத்தில் இருக்கும் நம் ஒவ்வொருவரின் குண இயல்புகளை பல்வேறு பாத்திரங்களின் வழியாக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறது அருவி. நடிப்பு: அதிதி பாலன், அஞ்சலி வரதன், லட்சுமி கோபால்சுவாமி, கவிதா பாரதி மற்றும் பலர். இசை: பிந்து மாலினி - வேதாந்த் பரத்வாஜ்; ஒளிப்பதிவு: ஷெல்லி காலிஸ்ட்; படத்தொகுப்பு: ரேமாண்ட் டெர்ரிக்; தயாரிப்பு: ட்ரீம் வாரியர்ஸ்; இயக்கம்: அருண்பிரபு புருஷோத்தமன். கதை என்ன?: அருவி என்பது இந்தப்படத்தில் மையப் பாத்திரம் ஏற்று நடித்திருக்கும் ஒரு பெண்ணின் பெயர். தமிழகத்தின் அழகான ஏதோ ஒரு குக்கிராமத்தில் இருக்கும் அருவியின் குடும்பம், அவளுடைய
கிரிக்கெட்: முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி

கிரிக்கெட்: முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
சென்னையில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி-20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் ஒரு நாள் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (செப். 17) நடந்தது. காலை முதலே சென்னையில் பரவலாக மழை இருந்ததால், ஆட்டத்தின் இடையிலும் மழை குறுக்கிடலாம் என்ற எதிர்பார்ப்புகள் நிலவியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி, முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். உடல்நலம் சரியில்லாததால் கடைசி நேரத்தில் ஷிகர் தவாண் விலகியதை அடுத்து, அந்த இடத்தில் ரஹானே சேர்க்கப்பட்டார். தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மாவும், ரஹானேவும் களமிறங்கினர். ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சில் முதல் மூன்று விக்கெட்டுகள் விரைவிலேயே வீழ்ந்தன. பெரிதும்