எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் எடுக்க இடைக்கால தடை!; உயர்நீதிமன்றம் உத்தரவு!! #EightLaneRoad #GreenFieldExpressWay
எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த மேலும் இரண்டு வார காலத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 14, 2018) உத்தரவிட்டுள்ளது.
எட்டுவழிச்சாலை
சேலம் - சென்னை இடையே பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் எட்டுவழிச்சாலை எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலைத் திட்டத்தை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் முனைப்பு காட்டி வந்தன. இதற்காக மொத்தம் 2343 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்த திட்டமிடப்பட்டு, மே மாதம் முதல் அதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.
சேலம் மாவட்டம் அரியானூரில் தொடங்கும் எட்டு வழிச்சாலை தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை வரை 277.3 கி.மீ. தூரம் வரை நீள்கிறது. இந்தத் திட்டத்துக்காக எடுக்கப்படும் நிலங்களில் 95 விழுக்காடு சிறு, குறு விவசாயிகளுக்குச் சொந்தமான விளை நிலங்கள் ஆகும். ஏற்காடு, கல்வராயன் ம...