Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Hindu extremism

”அரசியலில் ரஜினி உடன் இணைந்து செயல்பட தயார்!” – கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி

”அரசியலில் ரஜினி உடன் இணைந்து செயல்பட தயார்!” – கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
அரசியல் களத்தில் ரஜினியுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் ரிபப்ளிக் டிவி என்ற ஹிந்தி சேனலுக்கு அளித்திருந்த பிரத்யேக பேட்டி இன்று (நவம்பர் 12, 2017) பகல் 11 மணிக்கு ஒளிப்பரப்பப்பட்டது. நெறியாளர் அர்னாப் கோஸ்வாமி, நம்ம ஊர் தமிழ் சேனல்களில் சொல்வதுபோல் தீவிரவாதத்திற்கும், பயங்கரவாதத்திற்கும் அர்த்தம் தெரியாமல் குழப்பத்திலேயே இருந்தார். கமல்ஹாசனை, இந்து விரோதி என்பதை சித்தரிக்க ரொம்பவே மெனக்கெட்டார். லஷ்கர்-இ-தொய்பா வரை வம்பில் சிக்கிவிடவும் முயற்சித்தார். அர்னாப் கோஸ்வாமி மோடியின் பக்கவாத்தியம்போல பேசியதையும், இந்துக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதி போல பேசியதையும் அவதானிக்க முடிந்தது. அவர் எதிர்பார்த்த பதில்களைப் பெற முடியாமல், ஒருகட்டத்தில் ஏமாற்றம்
”கமல்ஹாசனை சுட்டுக் கொல்வோம்”!:  இந்து மகா சபா மிரட்டல்

”கமல்ஹாசனை சுட்டுக் கொல்வோம்”!: இந்து மகா சபா மிரட்டல்

அரசியல், இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஹிந்துக்களுக்கு எதிராக பேசும் கமல்ஹாஸனையும், அவரைப் போன்றவர்களும் சுட்டுக்கொல்லப்பட வேண்டும் என்று அகில பாரத இந்து மகாசபா தேசியத் துணைத்தலைவர் பண்டிட் அசோக் ஷர்மா மிரட்டல் விடுத்துள்ளார். நடிகர் கமல்ஹாஸன் சில நாள்களுக்கு முன், 'தமிழ்நாட்டில் இந்து தீவிரவாதம் ஊடுருவிட்டது. இந்து தீவிரவாதிகள் இருப்பதை ஒப்புக்கொள்ளத்தான்' வேண்டும் என்று கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு பாஜக மற்றும் அதன் துணை அமைப்புகள் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளன. உத்தரபிரதேசத்தில் கமல்ஹாஸன் மீது மதத்திற்கு எதிராக அவதூறு பரப்புதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதற்கிடையே அகில பாரத இந்து மகாசபாவின் தேசிய துணைத்தலைவர் பண்டிட் அசோக் ஷர்மா, மீரட் நகரில் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது: கமல்ஹாஸனும் அவரைப் போன்றவர்களும் சுட்டுக்கொல்லப்பட வேண்டும் அல்லது தூக்கிலிடப
அடடடா, நாட்டுல இந்த பக்தாஸ் தொல்ல தாங்க முடியலப்பா!

அடடடா, நாட்டுல இந்த பக்தாஸ் தொல்ல தாங்க முடியலப்பா!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
இந்து தீவிரவாதம் குறித்து கமல்ஹாஸன் தெரிவித்த கருத்துக்கு எதிராக மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் ட்விட்டரில் கருத்துக்கூறிய பாஜக ஹெச்.ராஜாவை கிண்டலடித்து இணையவாசிகள் 'மீம்'கள் பதிவிட்டுள்ளனர். நடிகர் கமல்ஹாஸன், வார இதழ் ஒன்றில் எழுதி வரும் கட்டுரையில், ''இந்து தீவிரவாதம் இருப்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்,'' என்று கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு பாஜக தரப்பில் கடுமையான எதிர்வினைகள் கிளம்பி இருக்கும் நிலையில், அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவும் இதுபற்றி ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து இருந்தார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''விஸ்வரூபம் படப்பிரச்னையின்போது, முஸ்லிம் அமைப்புகள் 20 வருடத்திற்கு கமலின் பயம் போகாது என்றது சரிதான் போல. இந்துக்கள் மீது தாக்குதல் வெட்கம்,'' என்று நேற்று (நவம்பர் 2, 2017) கருத்து வெளியிட்டு இருந்தார். மேலு