பருவமழை: சேலத்தில் முக்கிய ஏரிகள் நிரம்பின! பார்த்தாலே பரவசம்; எச்சரிக்கையும் தேவை!
தென்மேற்கு மற்றும்
வடகிழக்கு பருவமழை
ஓரளவு கைகொடுத்ததால்
சேலத்தில் மூக்கனேரி,
புது ஏரி ஆகியவை
முழுமையாக நிரம்பின.
இதனால் ஏரிப்பாசனத்தை
நம்பி இருக்கும் விவசாயிகள்
பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக அளவில் நடப்பு ஆண்டில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை நன்றாகவே பெய்துள்ளது. நிலத்தடி நீர்மட்டமும் பரவலாக அதிகரித்திருக்கிறது. ஏரிகள் உள்ளிட்ட கணிசமான நீர்நிலைகள் நிரம்பி உள்ளன. டிசம்பர் வரை நமக்கு வடகிழக்குப் பருவமழை பெய்ய இருக்கிறது. சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை இவ்விரு பருவமழைக் காலங்களும், இந்த ஆண்டில் பெரிய அளவில் விவசாயிகளுக்கு துணை புரிந்துள்ளது எனலாம்.
சேலம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 105 ஏரிகள் உள்ளன. தவிர, அந்தந்த கிராம ஊராட்சி நிர்வாகத்தின் கீழும் ஏராளமான நீர்நிலைகள் உள்ளன. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பனைமரத்துப்பட்டி ஏரி உள்ள...