Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: greenway project

கற்பனையான ராமர் பாலத்தை காப்பாற்ற துடித்த பாஜக விவசாயத்தை அழிக்க துடிப்பது ஏன்?: சுப்புலட்சுமி ஜெகதீசன் காட்டம்

கற்பனையான ராமர் பாலத்தை காப்பாற்ற துடித்த பாஜக விவசாயத்தை அழிக்க துடிப்பது ஏன்?: சுப்புலட்சுமி ஜெகதீசன் காட்டம்

அரசியல், சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கற்பனையான ராமர் பாலத்தைக் காட்டி சேது சமுத்திர திட்டத்திற்கு தடை வாங்கிய பாஜக, விவசாய நிலத்தை அழித்து எட்டு வழிச்சாலை போடலாமா? என திமுக மாநில துணை செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் கேள்வி எழுப்பியுள்ளார்.   எட்டு வழிச்சாலை திட்டத்திற்காக போலீசார் விவசாயிகளை மிரட்டி நிலங்களை கையகப்படுத்துவதை கைவிடக்கோரியும், விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்த வலியுறுத்தியும் சேலத்தில் திமுக சார்பில் இன்று (ஜூன் 23, 2018) கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. திமுக மாநில துணை செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமை வகித்தார். சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ, மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள், கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். சிலர் கறவை
எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு: சேலம் வளர்மதி கைது!

எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு: சேலம் வளர்மதி கைது!

காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்
சேலம் அருகே, எட்டு வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் அளக்க வந்த வருவாய்த்துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக இயற்கை பாதுகாப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் வளர்மதியை (24) காவல்துறையினர் இன்று (ஜூன் 19, 2018) கைது செய்தனர். சேலம் - சென்னை இடையேயான பசுமை வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. எட்டு வழிச்சாலையாக இந்த வழித்தடம் அமைகிறது. இதற்காக, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் சுமார் 8 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது.   இத்திட்டத்திற்கு விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், எக்காரணத்திற்காகவும் ஒரு பிடி விளை நிலத்தைக்கூட விட்டுத்தர முடியாது என பல இடங்களில் போர்க்கொடி தூக்கியுள்ளனர். கடும் எதிர்ப்புகள் ஒருபுறம் இருந்தாலும், எட்டு
எங்கள் பிணங்களின் மீது எட்டுவழிச்சாலை போடுங்கள்!; கொதிக்கும் விவசாயிகள்; தகிக்கும் சேலம்!!

எங்கள் பிணங்களின் மீது எட்டுவழிச்சாலை போடுங்கள்!; கொதிக்கும் விவசாயிகள்; தகிக்கும் சேலம்!!

காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சிறப்பு கட்டுரைகள், சென்னை, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்
எட்டு வழிச்சாலை விவகாரத்தில், அக்னி நட்சத்திரம் அடங்கிய பின்னும் கடும் கொதிநிலையில் இருக்கிறது மாங்கனி மாவட்டம். 'ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டு, இழப்பீடு தருகிறோம் என்பதை எப்படி ஏற்க முடியும்? எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு கோடி தருகிறோம். உயிரைக் கொடுப்பாரா?,' என வெடித்துக் கிளம்பியுள்ளனர் விவசாயிகள். சேலத்தில் இருந்து சென்னைக்குச் செல்ல மூன்று வழித்தடங்கள் உள்ளன. இதனூடாக 334 கி.மீ., தொலைவு பயணிக்க வேண்டும். இதற்கான பயண நேரம் 5.24 மணி. ஆனால், புதிதாக அமையவிருக்கும் எட்டு வழிச்சாலை / பசுமைவழிச்சாலைத் திட்டத்தால், இந்தப் பயண தூரம் 57 கி.மீ., வரை குறைகிறது. அதாவது, 277.3 கி.மீ. தூரமாக பயணத்தொலைவு குறைகிறது. இதனால், வெறும் 3 மணி நேரத்தில், சேலத்தில் இருந்து சென்னைக்கு சாலை மார்க்கமாக பயணித்துவிட முடியும்.   எட்டு வழிச்சாலைத் திட்டத்தின் நோக்கம் குறித்து அரசுத்தரப்ப