Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: gokulraj massacre case

முடிவுக்கு வந்த கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு; முதல் குற்றவாளி யுவராஜிக்கு இறுதிமூச்சு வரை சிறைவாசம்!

முடிவுக்கு வந்த கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு; முதல் குற்றவாளி யுவராஜிக்கு இறுதிமூச்சு வரை சிறைவாசம்!

சேலம், தமிழ்நாடு, நாமக்கல், மதுரை, முக்கிய செய்திகள்
  தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில், முதல் குற்றவாளியான யுவராஜிக்கு மூன்று ஆயுள் தண்டனை விதித்து மதுரை வன்கொடுமை சிறப்பு நீதிமன்றம் மார்ச் 8ம் தேதி பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. அவர், இறுதிமூச்சு உள்ள வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.   சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த சித்ரா - வெங்கடாசலம் தம்பதியின் மகன் கோகுல்ராஜ் (23). பொறியியல் பட்டதாரி. கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி ஒரு கும்பலால் கொடூரமாக கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டார். அந்த கும்பல், ரயில் தண்டவாளத்தில் சடலத்தை வீசிவிட்டுச் சென்றுவிட்டது. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ், தன்னுடன் படித்து வந்த கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த சுவாதியை காதலித்ததால், அவரை கொடூரமாக கொலை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்த
கோகுல்ராஜ் ஆணவக்கொலை; தீர்ப்பு மார்ச் 5ம் தேதிக்கு தள்ளி வைப்பு!

கோகுல்ராஜ் ஆணவக்கொலை; தீர்ப்பு மார்ச் 5ம் தேதிக்கு தள்ளி வைப்பு!

குற்றம், சேலம், நாமக்கல், மதுரை, முக்கிய செய்திகள்
சேலம் கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கின் தீர்ப்பு, வரும் மார்ச் 5ம் தேதிக்கு தள்ளி வைத்து மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த வெங்கடாசலம் - சித்ரா தம்பதியின் மகன் கோகுல்ராஜ் (23). பொறியியல் பட்டதாரி. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர், நாமக்கல்லைச் சேர்ந்த, தன்னுடன் படித்து வந்த கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த சுவாதி என்பவருடன் நெருங்கிப் பழகி வந்தார்.   கடந்த 2015ம் ஆண்டு, ஜூன் 23ம் தேதி, வீட்டில் இருந்து கல்லூரிக்குச் சென்று வருவதாகக் கூறிவிட்டுச் சென்றவர் அதன்பின் வீடு திரும்பவில்லை.   மறுநாள் மாலையில், நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகில் ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கோகுல்ராஜின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.   கோகுல்ராஜ், தங்கள் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணுடன் நெ