Tuesday, December 3மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: former Vice Chancellor

பேராசிரியரை தாக்கியதாக பெரியார் பல்கலை மாஜி துணைவேந்தர், பதிவாளர் உள்பட 4 பேர் மீது வழக்கு!

பேராசிரியரை தாக்கியதாக பெரியார் பல்கலை மாஜி துணைவேந்தர், பதிவாளர் உள்பட 4 பேர் மீது வழக்கு!

கிருஷ்ணகிரி, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, நாமக்கல், முக்கிய செய்திகள்
  ஊழல் புகார்களைத் தொடர்ந்து தற்போது உதவி பேராசிரியரை தாக்கியதாக மற்றொரு சர்ச்சையிலும் பெரியார் பல்கலை முன்னாள் துணை வேந்தர், பதிவாளர், டீன் ஆகியோர் சிக்கியுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   சேலத்தை அடுத்த சித்தனூர் புவனேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் வைத்தியநாதன் (52). இவர் பெரியார் பல்கலையில் பொருளாதார துறையில் உதவி பேராசிரியராக கடந்த 2005ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். இவர் சேலம் மாவட்ட மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதன் சாராம்சம்: கடந்த 29.3.2017ல் திருச்சியில் இருந்து வெளியான தினமலர் நாளிதழில் பெரியார் பல்கலையில் நடந்து வரும் ஊழல் தொடர்பாக ஒரு செய்தி வெளியானது. அந்த செய்தியில், அப்போது துணை வேந்தராக இருந்த சுவாமிநாதன், லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதாகவும், பதவி ...
பெரியார் பல்கலை: புரமோஷன் வழங்குவதிலும் விதிமீறல்! சிக்கலில் ஆசிரியர்கள்!! #PeriyarUniversity

பெரியார் பல்கலை: புரமோஷன் வழங்குவதிலும் விதிமீறல்! சிக்கலில் ஆசிரியர்கள்!! #PeriyarUniversity

கல்வி, சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதற்கேற்ப, பெரியார் பல்கலையில் ஆசிரியர்கள் நியமனத்தில் தொடங்கிய ஊழல் முறைகேடுகள், அவர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதிலும் தொடர்கிறது. இதனால், 22 உதவி / இணை பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.   முட்டுக்கட்டை:   முன்னத்தி ஏர்போல, முன்மாதிரி சமூகமாக விளங்க வேண்டிய சேலம் பெரியார் பல்கலைக்கழகமே, ஊழல் புரையோடிக் கிடப்பதாக குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன. முன்னாள் துணைவேந்தர் சுவாமிநாதனும், முன்னாள் பதிவாளர் அங்கமுத்துவும் சிண்டிகேட் அமைத்து ஆசிரியர் நியமனங்களில் பல கோடி ரூபாய் சுருட்டினர்.   ஊழல் குட்டுகள் வெளிப்படத் தொடங்கிய பின்னர், ஒருவரை ஒருவர் காலை வாரிவிடத் தயாரானபோதுதான், அங்கமுத்து தற்கொலை செய்து கொள்ள நேர்ந்தது. கடந்த காலங்களில் நடந்த முறைகேடுகளின் விளைவாக, இப்போதும் பல உதவி, இணை பேராசிரியர்கள் பதவி உய...
முன்னாள் பதிவாளர் தற்கொலை வழக்கிற்கு மூடுவிழா?  முக்கிய குற்றவாளிகளை தப்பவைக்க சதித்திட்டம்

முன்னாள் பதிவாளர் தற்கொலை வழக்கிற்கு மூடுவிழா? முக்கிய குற்றவாளிகளை தப்பவைக்க சதித்திட்டம்

அரசியல், ஈரோடு, கிருஷ்ணகிரி, குற்றம், சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, நாமக்கல், முக்கிய செய்திகள்
  சேலம் பெரியார் பல்கலையில், பணி நியமனத்தில் பல கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளதாக கூறப்படும் புகாரில் முக்கிய புள்ளியாகச் சொல்லப்படும் முன்னாள் துணைவேந்தர் சுவாமிநாதனை தப்ப வைக்கும் நோக்கில், முன்னாள் பதிவாளர் அங்கமுத்து தற்கொலை வழக்கை இழுத்து மூடும் வேலையில் காவல்துறையினர் இறங்கியுள்ளதாக பரபரப்பு தகவல்கள் கிளம்பியுள்ளன. பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த 2012-2015 காலக்கட்டத்தில் பதிவாளராக இருந்தவர் அங்கமுத்து. அதற்கு முன் இதே பல்கலையில் அவர் உடற்கல்வி இயக்குநராகவும் இருந்தார். அப்போது துணைவேந்தராக இருந்த சுவாமிநாதன், உதவி பேராசிரியர்களை நியமிக்க 25 லட்சம் ரூபாயிலிருந்து 45 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றதாக புகார்கள் எழுந்தன.     குறிப்பாக, சுவாமிநாதன் பணியில் இருந்த 2014-2017 காலக்கட்டத்தில், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத 136 பணியிடங்கள் நிரப்பப்பட்ட...
ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை: உலகை ஆளப்போகும் தமிழ்!

ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை: உலகை ஆளப்போகும் தமிழ்!

இந்தியா, உலகம், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
உலகப்புகழ் பெற்ற அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் தமிழ் அறிஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக டாக்டர் ஜானகிராமன், டாக்டர் சம்பந்தம் ஆகியோர் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவை நேரில் சந்தித்து வலியுறுத்தினர். தமிழ் இருக்கைக்காக நிதியுதவியும் வழங்கினர். அதைத் தொடர்ந்து கடந்த 2016ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின்போது, ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையிலும் ஜெயலலிதா அறிவித்தார். இதற்காக சுமார் ரூ.33 கோடி செலவாகும் என்று தமிழ் அறிஞர்கள் கூறினர். மேலும், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளிடம் இருந்து இதுவரை ரூ.19 கோடி திரட்டப்பட்டு உள்ளது. இந்நிலையில், ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை அமைவதற்காக தமிழக அரசின் பங்களிப்பாக ரூ.10 கோடி வழங்கப்படுவதாக தமிழக முதல்வ...