Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: former chief minister

காலமானார் கலைஞர் கருணாநிதி!

காலமானார் கலைஞர் கருணாநிதி!

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி இன்று (ஆகஸ்ட் 7, 2018) மாலை 6.10 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 94.   திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஒன்றரை ஆண்டு காலமாகவே உடல்நலம் குன்றி, சிகிச்சை பெற்று வந்தார். உணவுக்குழாயில் டிரக்கியாஸ்டமி உபகரணம் பொருத்தப்பட்டது. இந்நிலையில், திடீரென்று அவருடைய உடல்நலம் மேலும் குன்றியதை அடுத்து, கடந்த 11 நாள்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று இரவு அவருடைய உடல்நலம் மேலும் மோசமடைந்ததாக தகவல்கள் வெளியாயின. திமுக எம்.பி., எம்எல்ஏக்கள், மூத்த தலைவர்கள், முக்கிய தளகர்த்தர்கள் அனைவரும் சென்னைக்கு அழைக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பல ஊர்களில் இருந்தும் காவேரி மருத்துவமனை முன்பு விடிய விடிய திரண்டு நின்று, 'எழுந்து வா தலைவா எழுந்து வா தலைவா...' என்று முழக்கமிட்டபடியே இருந்தனர
”ரஜினிகாந்த் ஒரு சந்தர்ப்பவாதி!”: மலேசியா துணை முதல்வர் விமர்சனம்

”ரஜினிகாந்த் ஒரு சந்தர்ப்பவாதி!”: மலேசியா துணை முதல்வர் விமர்சனம்

அரசியல், உலகம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழ்நாட்டு அரசியலை ஆட்கொள்ள ஆன்மிகம் மட்டும் போதாது என்று மலேசியா நாட்டின் பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் ராமசாமி கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் கடந்த 31ம் தேதி ரசிகர்களுடனான சந்திப்பின்போது தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும், ஆன்மிக அரசியல்தான் தனது கொள்கை என்றும் கூறினார். இதையடுத்து ஜனவரி 1ம் தேதி, ரசிகர் மன்றங்களை புதுப்பிக்கும் வகையிலும், ஆதரவாளர்களை அணுகவும் ரஜினி மன்றம் என்ற பெயரில் புதிதாக இணையதளத்தையும் தொடங்கினார். இந்நிலையில் மலேசியா நாட்டின் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ரஜினியை விமர்சித்து ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இரண்டு தசாப்தங்களாக எதிர்பார்க்கப்பட்டது, விரைவில் நனவாகவுள்ளது. கடந்த 31 டிசம்பர் 2017 அன்று, தென்னிந்தியாவின் சூப்பர்ஸ
தமிழகத்தின் புதிய ஆளுநர் யார்?

தமிழகத்தின் புதிய ஆளுநர் யார்?

அரசியல், தமிழ்நாடு
தமிழகத்தில் ஓராண்டுக்கு மேலாக பொறுப்பு ஆளுநர் மட்டுமே இருந்து வரும் நிலையில், விரைவில் புதிதாக முழுநேர ஆளுநர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 2014ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று, மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தது. அரியணையேறிய கையோடு, முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது நியமிக்கப்பட்டு இருந்த ஆளுநர்களை கட்டாய ஓய்வில் செல்லும்படி வற்புறுத்தியது. பாஜக, ஆர்எஸ்எஸ் பின்புலத்தில் இருந்து வந்தவர்கள் ஆளுநராக நியமிக்கப்பட்டனர். ஆனாலும், தமிழகத்தில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியின்போது ஆளுநராக நியமிக்கப்பட்ட ரோசய்யா, தொடர்ந்து பதவியில் இருந்து வந்தார். அவர், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுடன் இணக்கமான போக்கை கடைப்பிடித்ததாலும், நரேந்திர மோடியுடன் ஜெயலலிதாவுக்கு இருந்த பரஸ்பர நட்பின் காரணமாகவும் ரோசய்யா பதவிக்கு எந்த தொந்தரவும் ஏற்படவில்லை. அவர் தனது முழு பதவிக்காலத்தையும்