Saturday, December 7மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: forerunner

‘உழைக்கும் பெண்களுக்கு அமுதாவும் முன்னத்தி ஏர்தான்!’

‘உழைக்கும் பெண்களுக்கு அமுதாவும் முன்னத்தி ஏர்தான்!’

சிறப்பு கட்டுரைகள், சேலம், தன்னம்பிக்கை, மகளிர், முக்கிய செய்திகள்
-மகளிர் தின ஸ்பெஷல்- ''ஒருவருக்குச் சாத்தியமாவது எல்லோருக்குமே சாத்தியமாகும்'' என்பதை மகாத்மா காந்தி, வழிநெடுகிலும் நம்பி வந்திருக்கிறார். காந்தியின் நம்பிக்கை, யதார்த்த வாழ்விலும் பலருக்கு சாத்தியமாகி இருக்கிறது என்பதை என் கள அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.   இதில் வேடிக்கை என்னவென்றால், நான் சந்தித்த வெற்றிகரமான குடும்பத் தலைவிகள் பலருக்கும் காந்தியைப் பற்றிய பிரக்ஞை எல்லாம் கிடையாது. உழைக்கத் தயங்காத எவர் ஒருவரையும் இந்த பூமி நிராதரவாக விட்டுவிடுவதே இல்லை. சிலர் ஏணியை, கூரை மேல் எறிகிறார்கள். சிலர், வானத்தை நோக்கி வீசுகிறார்கள். ஆனால், 'உள்ளத்தனையது உயர்வு' என்பதுதான் நிஜம்.   சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள கட்டெறும்பு காடு பகுதியைச் சேர்ந்த அமுதாவும் (34), அவருடைய கணவர் கோவிந்தராஜூம் கடின உழைப்புக்கு அஞ்சாதவர்கள். இரண்டு மகள்...