எங்கள் உயிர்களை தியாகம் செய்தாவது 8 வழிச்சாலை திட்டத்தை ஓட ஓட விரட்டி அடிப்போம்! சேலம் கூட்டத்தில் விவசாயிகள் சபதம்!!
எட்டுவழிச்சாலைத் திட்டம்
வந்தால் இந்த மண்ணும், மனிதர்களும்
அழிந்துபோவார்கள் என்பதால்,
இன்னும் எத்தனை உயிர்களை
தியாகம் செய்தாவது இந்த
திட்டத்தை ஓட ஓட விரட்டி
அடிப்போம் என்று விவசாயிகள்
சபதம் எடுத்துள்ளனர்.
பாரத்மாலா பரியோஜனா
திட்டத்தின் கீழ், சேலம் - சென்னை
இடையே எட்டுவழிச்சாலைத்திட்டம்
எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலைத்
திட்டத்தை மத்திய அரசு கொண்டு
வந்துள்ளது. இதற்குத் தேவையான
நிலத்தைக் கையகப்படுத்திக் கொடுக்கும்
பொறுப்பு, மாநில அரசுக்கானது.
மொத்தம் 277.3 கி.மீ. தூரம்
அமைக்கப்பட உள்ள
இந்த சாலைக்காக 2343
ஹெக்டேர் நிலம்
தேவைப்படுகிறது.
இத்திட்டம் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் வழியாக அமைக்கப்படுகிறது. இதற்காக கையகப்படுத்தப்படும் நிலத்தின் பெரும்பகுதி, சிறு, குறு விவசாயிகளுக்குச் சொந்தமான விளை நிலங்கள் ஆகும். இ...