Tuesday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Entrance Examination

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் 23 நாள்தான் அவகாசம்!

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் 23 நாள்தான் அவகாசம்!

கல்வி, தகவல், முக்கிய செய்திகள்
அடுத்த ஆண்டு நடக்கவுள்ள தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்னும் 23 நாள்கள் மட்டுமே அவகாசம் உள்ளது.   இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டியது கட்டாயம். வருகிற 2020ம் ஆண்டு மே 3ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பம் பதிவு செய்யும் நடைமுறைகள் டிசம்பர் 2, 2019ம் தேதி தொடங்கியது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, பதிவேற்றம் செய்ய கடைசி நாள், டிசம்பர் 31ம் தேதி ஆகும். நீட் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். அஞ்சல் வழியில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது. இதற்கென தொடங்கப்பட்டுள்ள தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளன. மாதிரி விண்ணப்பமும் வழங்கப்பட்டுள்ளது.   இத்தேர்வுக்கு விண்ண
வாயை மூடுங்கள்!: அமைச்சர்களுக்கு ஹைகோர்ட் அட்வைஸ்

வாயை மூடுங்கள்!: அமைச்சர்களுக்கு ஹைகோர்ட் அட்வைஸ்

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவதாக அளித்த வாக்குறுதியை அமைச்சர்களால் செயல்படுத்த முடியாததால், அவர்கள் இதுபற்றி ஊடகங்களிடம் பேட்டி கொடுக்க வேண்டாம் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அறிவுரை கூறியுள்ளார். தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு எனப்படும் நீட் தேர்வு விவகாரம் உச்சத்தில் இருந்தபோது, அது தொடர்பான வழக்குகளை விசாரித்தபோதெல்லாம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாரன், அத்தேர்வுக்கு ஆதரவு வழங்கினார். இந்நிலையில், நீட் தேர்வில் ஏற்பட்ட தோல்வி மற்றும் மருத்துவ படிப்பு கனவு தகர்ந்ததால் விரக்தியில் அரியலூர் மாணவி அனிதா கடந்த 1ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து தமிழகமெங்கும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் வலுத்தது. பல இடங்களில் பள்ளி மாணவ, மாணவிகளும்கூட ஆர்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில், நீட் தொடர்பாக தொடரப்பட்ட ஒரு வழக்கை சென்னை உயர்நீதிமன்ற