Wednesday, December 4மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: double leaf symbol

ஓபிஎஸ்ஸை கழற்றிவிட ஆழம் பார்க்கிறாரா இபிஎஸ்?

ஓபிஎஸ்ஸை கழற்றிவிட ஆழம் பார்க்கிறாரா இபிஎஸ்?

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
''எனக்குப் பின்னாலும் அதிமுக என்ற இயக்கம் இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் மக்கள் நலனுக்காகவே செயல்படும்,'' என்றார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா. இப்படி அவர் சட்டப்பேரவையிலேயே முழங்கினார். எந்த இயக்கம் மக்கள் நலனுக்காக செயல்படும் என்று சொன்னாரோ, அந்த இயக்கம்தான் சில காலம் கூவத்தூர் விடுதியிலும், புதுச்சேரி விடுதியிலும், கல்லறையிலும் முடங்கிக் கிடந்தது. அடுத்த தேர்தல் வரையிலாவது அந்த இயக்கம் உயிர்ப்புடன் இருக்குமா என்பதே கேள்விக்குறியான நிலையில் இருக்கிறது. அதிமுகவை மீட்டெடுக்க ஜெயலலிதா, ஏசு கிறிஸ்து போல மீண்டும் உயிர்த்தெழுந்துதான் வர வேண்டும். அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஜெயலலிதா இருக்கும்வரை அவர் முன்பாக எப்படி கூனிக்குறுகி நின்றார்களோ அதே அடிமை மனோபாவத்தை சசிகலாவிடமும் காட்டி வந்தார்கள். ஆனால், பாஜக என்ற புதிய கூட்டாளி கிடைத்த பின்னர் அவர்களின் போக்கு அடியோடு மாறி...
ஓபிஎஸ் – இபிஎஸ் விரிசலை அம்பலமாக்கிய மைத்ரேயன்!

ஓபிஎஸ் – இபிஎஸ் விரிசலை அம்பலமாக்கிய மைத்ரேயன்!

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் ஓரணியாக இணைந்தாலும் அவர்களுக்குள் நீறு பூத்த நெருப்பு போல மன க்கசப்புகள் இருந்து வருவதாக உலா வரும் செய்திகளை, அதிமுக எம்பி மைத்ரேயன் தன்னுடைய ஃபேஸ்புக் பதிவு மூலம் உறுதிப்படுத்தி உள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி என அதிமுக இரண்டாக உடைந்தது. கட்சிக்குள் தங்கள் செல்வாக்கை தக்க வைத்துக்கொள்ள, தன்னுடைய விசுவாசியான ஆதரவாளரான எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்துவிட்டு, ஊழல் வழக்கில் சிறை சென்றார் சசிகலா. அதிமுகவை பல அணிகளாக உடைத்தது, ஓ.பன்னீர்செல்வத்தை கொம்பு சீவி விட்டது என எல்லாவற்றையும் பாஜக பின்னிருந்து நேர்த்தியது இயக்கியது. இதற்கிடையே, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை ஓரே அணியாக இணைக்கும் வேலைகளிலும் பாஜக முன்னின்று செயல்பட்டது. முன்பு பாஜகவில் இருந்து, இப்போது அதிமுக சார...